நவம்பர் 4-ம் தேதி முதல் நவம்பர் 17-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
உத்யோகத்தில் மரியாதை!

மேஷம்: `எல்லோரும் நல்லவர் கள்’ என நினைப்பவர்களே! ராசிநாதன் செவ்வாய் 5-ம் தேதி

முதல் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்வதால், நிலம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். 6-ம் இடத்தில் சுக்கிரனும், 7-ல் சூரியனும் தொடர்வதால், உடல் உபாதை ஏற்படலாம். 5-ல் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், குலதெய்வப் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தரப்படும்.
சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய காலமிது.
சகிப்புத்தன்மை தேவை!

ரிஷபம்: கடின உழைப்பால் முன்னேறுபவர்களே! ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடை யும். 5-ம் தேதி முதல் செவ்வாய் 5-ல் அமர்வதால், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்படும். 6-ம் வீட்டில் சூரியன் நீசமாகி நிற்பதால், பெற்றோரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. கண்டகச் சனி தொடர்வதால், சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும்.
சகிப்புத்தன்மை தேவைப்படும் வேளையிது.
முதல் மரியாதை கிடைக்கும்!

மிதுனம்: யாரையும் பகைத்துக்கொள்ள விரும்பாதவர்களே! சனிபகவான் 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். 12-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால்... உறவினர், தோழிகளால் டென்ஷன் அதிகமாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், வீண் விரயம் ஏற்படும். வியா பாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
விடாமுயற்சியால் சாதிக்கும் தருணமிது.
ஆளுமைத் திறன் அதிகரிக்கும்!

கடகம்: சமயோஜித புத்தி உள்ளவர்களே! 5-ம் தேதி முதல் யோகாதிபதி செவ் வாய் 3-ல் அமர்வதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சனி 5-ல் நீடிப்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். சுக்கிரன் சாதகமாக இருப் பதால், புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.
நினைத்தது நிறைவேறும் நேரமிது.
சூரியபகவான் கைகொடுப்பார்!

சிம்மம்: வேகமாக பேசுபவர் களே! ஜென்ம குருவும், அர்த்தாஷ்டமச் சனியும் தொடர்வதால், பிரச்னை கள் தலைதூக்கும். என்றாலும், உங்கள் ராசிநாதன் சூரியன் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பதால், அவற்றை சமாளிக்கும் சாமர்த்தியத்தை தரு வார். 5-ம் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால், பேச்சில் கடுமை காட்டா தீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.
மனதைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய காலமிது.
பதற்றம் தவிருங்கள்!

கன்னி: தடைகள் பல வந்தாலும் தளராதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், சமையலறை சாதனங்களை வாங்குவீர்கள். சனி பகவான் வலுவாக இருப்பதால், வேற்று மதம், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சூரியன் 2-ல் நிற்பதால், பதற்றப்பட்டு பேச வேண்டாம். 12-ல் நிற்கும் ராகுவுடன் 5-ம்தேதி முதல் செவ்வாயும் சேர்வதால், உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டிவரும்.
காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.
வரவேண்டிய பணம் வந்து சேரும்!

துலாம்: தாராள மனசு உள்ளவர்களே! குரு வலுவாக இருப்பதால், வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வரும். சிலர் புது வீட்டில் குடிபுகுவீர்கள். 5-ம் தேதி முதல் செவ்வாய் 12-ல் அமர்வதால், திடீர் செலவினங்கள் வந்து போகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். சூரியன் ராசிக்குள் நிற்பதால், உடல் நலக் கோளாறு ஏற்படலாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அலைச்சல் அதிகரிக்கும் வேளையிது.
லாப வீட்டில் செவ்வாய் - ராகு!

விருச்சிகம்: வருங்காலத்தைக் கணிப்பதில் வல்லவர்களே! செவ்வாயும், ராகுவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால், ஷேர் மூலம் பணம் வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினரை சந்திப்பீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால், மற்றவர்களை நம்பி முக்கிய வேலை களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடியுங்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத் யோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும், அனுசரித்துச் செல்லுங்கள்.
தடைகளைத் தகர்த்தெறியும் தருணமிது.
அன்பு பெருகும்!

தனுசு: மனோபலம் அதிகம் உள்ளவர்களே! குருவும், சூரியனும் சாதகமாக இருப்பதால், சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் அன்பு பெருகும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தக்கூடும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டு வார்கள்.
புகழ், கௌரவம் கூடும் காலமிது.
பிள்ளைகளால் மன நிம்மதி!

மகரம்: சவால்களுக்கு முக் கியத்துவம் தருபவர்களே! கேது 3-ம் இடத்திலும், லாப வீட்டில் ராசிநாதன் சனிபகவானும் வலுவாக அமர்ந்திருப்பதால், பெரிய திட்டங் கள் நிறைவேறும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். குருவும், ராகுவும் சாதகமாக இல்லாததால்... மறைமுக விமர்சனங்கள், வந்து செல்லும். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பழைய பிரச்னைகளால் மன அமைதி குறையும். அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம்.
தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் நேரமிது.
இல்லத்தில் குதூகலம்!

கும்பம்: ஆரவாரமின்றி சாதிப் பவர்களே! குருபகவான் சாதகமாக இருப்பதால், உறவினர், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். 8-ல் நிற்கும் ராகுவுடன் 5-ம் தேதி முதல் செவ்வாயும் சேர்வதால்... எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டு வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
ரகசியங்களைக் காக்க வேண்டிய வேளையிது.
பணப்புழக்கம் அதிகரிக்கும்!

மீனம்: சமூக சீர்திருத்தத்தில் ஈடுபாடு உள்ளவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் ஓரளவு ஓயும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிவீர்கள். ராகு 7-ல் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து செல்லும். ராசிநாதன் குரு 6-ல் மறைந்து கிடப்பதால், தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும்.
சமயம் அறிந்து காய் நகர்த்த வேண்டிய தருணமிது.