`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்நவம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை
பணவரவு உண்டு!

மேஷம்: எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! குருபகவான் 5-ல் வலுவாக இருப்பதால், பணவரவு உண்டு. ராசிநாதன் செவ்வாய் 6-ல் நிற்பதால்... வீடு, மனை வாங்குவதற்கு கடன் உதவிகள் கிடைக்கும். சூரியனும், சனியும் 8-ல் நிற்பதால், மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிடாதீர்கள். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், உறவினர் வகையில்செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையுடன் பாராட்டும் உண்டு.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய காலமிது.
ஈகோ பிரச்னை தலைதூக்கும்!

ரிஷபம்: விடாமுயற்சியால் முதலிடம் பிடிப்பவர் களே! கேதுவும், புதனும் சாதகமாக இருப்பதால், நட்பால் ஆதாயம் உண்டு. செவ்வாயும், ராகுவும் 5-ல் இருப்பதால், பிள்ளைகளால் டென்ஷன்அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்திருப்பதால், உடல் உபாதை வந்து செல்லும். 7-ல் சனியும், சூரியனும் நிற்பதால், திடீர் செலவு களால் திணறுவீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.
கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய வேளையிது.
ஆடை, ஆபரணம் சேரும்!

மிதுனம்: படிப்பறிவுடன் பட்டறிவும் உள்ளவர்களே! சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளை நினைத்து சந்தோஷப்படுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். ராசிநாதன் புதன் 6-ல் மறைந்திருப்பதால்... வீண் செலவுகள், அலைச்சல், மனக்குழப்பம் வந்து செல்லும். ராகுவும், செவ்வாயும் 4-ல் நிற்பதால், சகோதர வகையில் சங்கடம் ஏற்படலாம். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
விட்டதைப் பிடிக்கும் வேளையிது.
நல்ல வேலை கிடைக்கும்!

கடகம்: ஒளிவுமறைவு இல்லாமல் பேசுபவர்களே! ராகுவும், செவ்வாயும் 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், சாதிக்க வேண்டுமென்றஎண்ணம் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித் திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். சூரியனும், சனியும் 5-ல் நிற்பதால், யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும்.
வி.ஐ.பி-க்களால் பாராட்டப்படும் தருணமிது.
வேலைச்சுமை அதிகரிக்கும்!

சிம்மம்: சிகரத்தைத் தொட்ட போதும் தலைக்கனம் கொள்ளாதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். 2-ல் செவ்வாயும், ராகுவும் நிற்பதுடன் ஜென்ம குருவும்,அர்த்தாஷ்டமச் சனியும் தொடர்வதால், வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கின் வேலையையும் சேர்த்துப்பார்க்க வேண்டி வரும்.
பக்குவமாக செயல்பட வேண்டிய நேரமிது.
இல்லறம் இனிமை கொஞ்சும்!

கன்னி: பிரச்னைகளை அலசி ஆராய்பவர்களே! சூரியன் 3-ல் வலுவாக நிற்பதால், புது முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அரசால் அனுகூலம் உண்டு. வாழ்க்கைத் துணைவர் உங்களிடம் அனுசர ணையாக நடந்துகொள்வார். ராசிநாதன் புதன், சனியுடன் சேர்ந்து நிற்பதால்,உடல் உபாதை வந்து போகும். செவ்வாயும், ராகுவும் ராசிக்குள் நிற்பதால், தூக்கமின்மை ஏற்படலாம். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
இங்கிதமான பேச்சால் சாதிக்கும் சமயமிது.
பேச்சில் கடுமை வேண்டாம்!

துலாம்: பணம் வந்தாலும் குணம் மாறாதவர்களே! புதனும், கேதுவும் சாதகமாக இருப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். செவ்வாய், ராகு மற்றும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால்... திடீர் பயணம் செய்ய நேரிடலாம். 2-ல் சூரியனும், சனியும் நிற்பதால், பேச்சில் கடுமை வேண்டாம். குரு லாப வீட்டில் நிற்பதால் ஷேர், கமிஷன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
கடின உழைப்பால் முன்னேறும் காலமிது.
கௌரவம் உயரும்!

விருச்சிகம்: நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்களே! ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் வலுவாக இருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ராகுவுடன் செவ்வாய் நிற்பதால்... முன்கோபம், தயக்கம் வந்து செல்லும். ராசிக்குள் சூரியனும், சனியும் நிற்பதால், உடல்நலக் கோளாறுவந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.
நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் தருணமிது.
காரிய தாமதம் நீங்கும்!

தனுசு: உண்மைக்கு முக்கியத் துவம் தருபவர்களே! சுக்கிரனும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால், தாமதமான விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் வரும். சகோதரர் பாசமழை பொழிவார். சூரியன் சனியுடன் நிற்பதால்... வீண் விரயம் வந்து போகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், மறைமுக விமர்சனம், வேலைச்சுமை வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசிப்பார்கள்.
சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வேளையிது.
இலக்கை நோக்கி முன்னேற்றம்!

மகரம்: மனிதநேயம் மிக்கவர் களே! சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப் பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குரு 8-ல் மறைந்திருப்பதால், இனம்தெரியாத கவலைகள், பணப்பற்றாக்குறை வந்து செல்லும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையை நிதானமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும்.
வெளிச்சத்தை நோக்கிப் பயணிக் கும் நேரமிது.
விட்டுக் கொடுக்க வேண்டிய வேளை!

கும்பம்: கடந்து வந்த பாதையை மறவாதவர்களே! சூரியன் 10-ம் வீட்டில் நிற்பதால்... புதுப் பதவியும், பொறுப்பும் தேடி வரும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். 8-ல் செவ்வாய் நிற்பதால்... உடல் உபாதை, சகோதர வகையில் மனவருத்தம் வந்து போகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
விட்டுக் கொடுக்க வேண்டிய காலமிது.
சகிப்புத்தன்மையால் சங்கடங்கள் தீரும்!

மீனம்: வேகமாக செயல்படு பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டை அழகுபடுத்து வீர்கள். உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்வார்கள். சூரியன் 9-ல் நிற்பதால், சேமிப்புகள் கரையும். 7-ல் செவ்வாயும், ராகுவும் நிற்பதால்... வீடு, மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் மோதல்கள் வந்து செல்லும்.
சகிப்புத்தன்மையால் சங்கடங்கள் தீரும் வேளையிது.