மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

விட்டதைப் பிடிக்கும் வேளை!

ராசி பலன்கள்

மேஷம்: யதார்த்தமாகப் பேசு

பவர்களே! குருபக வான் வலுவாக இருப்பதால், தடைப் பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர் கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். 8-ல் சூரியனும், சனியும் நிற்பதால், வாழ்க்கைத் துணைவர் கோபப்படுவார். ராசிநாதன் செவ்வாய் 6-ல் நின்றாலும், ராகுவுடன் சேர்ந்திருப்பதால், உடல் உபாதை வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள்.

விட்டதைப் பிடிக்கும் வேளையிது. 

தன்னம்பிக்கை பெருகும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: தோல்வியைக் கண்டு துவளாதவர்களே! 11-ல் கேது வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை பெருகும். ராசிநாதன்சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்தாலும் 6-ல் மறைந்திருப்பதால்... வீண் செலவு வரக்கூடும்.  ராசிக்கு 5-ல் செவ்வாயும், ராகுவும் தொடர்வதால், சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங் களை அறிவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.

அனுசரணை தேவைப்படும் நேரமிது.

உறவினர்களால் உதவி!

ராசி பலன்கள்

மிதுனம்: கலகலப்பாக பேசுபவர்களே! சுக்கி ரன் 5-ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், அடிப்படை வசதி களை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். சனிபகவான் வலுவாக இருப்பதால், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சூரியன் 6-ல் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி கனிவாக நடந்து கொள்வார்.

பிரச்னைகள் தீரும் வேளையிது.

செல்வம் குவியும் நேரம்!

ராசி பலன்கள்

கடகம்: காத்திருந்து காய் நகர்த்துபவர்களே! செவ்வாய் 3-ல் நிற்பதால், திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சூரியனும், சனியும் 5-ல் நிற்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

அதிகாரம் பெருகும் காலமிது.

பொறுமை தேவைப் படும் பொழுது!

ராசி பலன்கள்

சிம்மம்: நடுநிலைமை தவறாதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால்,சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்குள்ளேயே குரு அமர்ந்திருப்பதால், உங்களை சிலர் குறைகூறுவார்கள். 4-ல் சூரியனும், சனியும் நிற்பதால், வாகனத்தை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து கொள்முதல் செய்யுங்கள். உத்யோகத்தில் ஆர்வம் குறையும்.

யோகா, தியானம் தேவைப்படும் தருணமிது.

செயல் வேகம் கூடும்!

ராசி பலன்கள்

கன்னி: மனம் உடைந்து வருபவர்களைத் தேற்றுபவர்களே! சூரியன் 3-ம் வீட் டில் வலுவாக அமர்ந்திருப்பதால், செயல் வேகம் கூடும். சமைய லறையை நவீனமயமாக்குவீர்கள். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், மனதில் பயம் வந்து போகும். செவ்வாய் ராசிக்குள் நிற்பதால், முன் கோபம், அசதி வந்து விலகும். வியாபாரத்தில் நல்ல லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகள் வரும்.

மதியூகத்தால் வெல்லும்  நேரமிது.

விருப்பங்கள் நிறைவேறும் வேளை!

ராசி பலன்கள்

துலாம்: அலட்டிக் கொள்ளாமல் சாதிப்பவர்களே! ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்று ராசிக்குள் அமர்ந்தி ருப்பதால், வீட்டை விரிவுபடுத்தி, அழகு படுத்து வீர்கள். ராசிக்கு 12-ல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால்... தயக்கம், தடுமாற்றம் வந்து செல்லும். 2-ல் சூரியனும், சனியும் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து போகும். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைள் கிடைக்கும்.

விருப்பங்கள் நிறைவேறும் வேளையிது.

முன்னெச்சரிக்கை அவசியம்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: பல்வேறு கோணங்களில் சிந்திப்பவர்களே! ராசிக்குள் சூரி யனும், சனியும் நிற்பதால், ஆரோக் கியத்தில் கூடுதல் கவனம் செலுத் துங்கள். முக்கிய கோப்புகளை எச்சரிக்கையுடன் கையாளவும்.  ராகுவும், ராசிநாதன் செவ்வாயும் லாப வீட்டில் அமர்ந்திருப்ப தால், சவால்களில் வெற்றி பெறு வீர்கள். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரம் விருத்தியடையும் உத்யோகத்தில் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.

எதிர்பார்ப்புகளில் சில நிறை வேறும் காலமிது.

மணவாழ்க்கையில் மகிழ்ச்சி!

ராசி பலன்கள்

தனுசு: தத்துவம் பேசுவதில் வல்லவர்களே! செவ்வாய் ராசிக்கு 10-ல் நிற்பதால், கடினமான காரி யங்களையும் எளி தாக செய்து முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தந்து வாழ்க்கைத் துணைவர் அசத்துவார். ராசிக்கு 12-ல் சனி தொடர்வதால், அவ்வப்போது தூக்கமில்லாமல் போகும். சூரியனும் 12-ல் நிற்பதால், அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுடன் நட்பாக பழகுவார்கள்.

பணிவால் சாதிக்கும் தருணமிது.

தலைநிமிர்ந்து நடக்கும் தருணம்!

ராசி பலன்கள்

மகரம்: மண்வாசனை மாறாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வ தால், உங்களின் செல்வம், செல்வாக்கு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்குவரும். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். 9-ல் ராகு நிற்பதால், தந்தையார் உடல்நலம் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் சில நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமையை உயரதிகாரி சோதித்துப் பார்ப்பார்.

தலைநிமிர்ந்து நடக்கும் நேரமிது.

சாதிக்கும் சமயம்!

ராசி பலன்கள்

கும்பம்: `கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்பதை உணர்ந்தவர்களே! குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண் டிருப்பதால்... உங்கள் அழகு, இளமை கூடும். எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பிள்ளைகள் முன்னேற வேண்டு மென துடிப்பார்கள். உங்களில் சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ராசிக்கு 8-ல் செவ்வாயும், ராகுவும் தொடர்வதால்... படபடப்பு, கவலை வந்து செல்லும். வியாபாரத்தில் வி.ஐ.பி-க்களும் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களுக்கு வேலைச்சுமையுடன் செல்வாக்கும் உயரும்.

இலக்கை எட்டும் வேளையிது.

எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்!

ராசி பலன்கள்

மீனம்: `எல்லோரும் நல்ல வரே’ என்று நினைப்ப வர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வ தால், பணவரவு திருப்தி தரும். உறவினர், தோழிகளால் எதிர்பாராத சில நன்மைகள் உண்டாகும். 7-ல் ராகுவும், செவ்வாயும் நிற் பதால்... உடல்நலக் கோளாறு வரக்கூடும். ராசிநாதன் குரு 6-ல் மறைந்திருப்பதால், மறைமுக நெருக்கடிகள் வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராடவேண்டி வரும்.

தர்மசங்கடமான சூழ்நிலைகளைத் தாண்டும் காலமிது.