கேபிள் கலாட்டா
விளம்பர ரகளை!

தனுஷ் நடித்த ஒரு விளம்பரம், சமீபத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. ‘கேபிள் டி.வி எல்லா சேனல்களையும் உங்க தலையில கட்டிவிட்டு காசு பார்க்கறாங்க, உங்களுக்குத் தெரியாத மொழிக்கும் நீங்க ஏன் காசு தர்றீங்க?’ என்ற ரீதியில் தனுஷ் ‘டாடா ஸ்கை டி.டி.ஹெச்’ விளம்பரத்தில் சிரித்தபடியே பேச, வெடித்துவிட்டது பஞ்சாயத்து! இந்த விளம்பரம் கேபிள் டி.வி-க்களை இழிவுபடுத்துவதாகவும், தனுஷ் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் இனி அவரது படங்களை சப்போர்ட் பண்ணப் போவதில்லை, மேலும் தனுஷ் மீது வழக்குத் தொடருவோம் எனவும் கேபிள் டி.வி சங்கங்கள் பொங்கி எழுந்துள்ளன.
லெட்ஸ் வாட்ச்!
அதிகம் பேசாத அதிசய `விஜே'!

இசையருவியில் தினமும் மாலை ‘காதல் காதல்’ நிகழ்ச்சியை கலகல சிரிப்புடன் வழங்கி வருபவர், ஷபானா.
‘‘நான் பிறந்தது, வளர்ந்தது காஞ்சிபுரம். ப்ளஸ் டூ முடிச்சதும் சன் மியூஸிக் ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். இப்போ மூணு வருஷமா ‘இசையருவி’ வாசம். இடையில் கரஸ்ல பி.பி.ஏ முடிச்சுட்டேன். ஒரு கான்ட்ராஸ்ட்டான விஷயம்... `விஜே'னுதான் பேரு... ஆஃப் கேமரா நான் அதிகமா பேச மாட்டேன். அதுதான் என் ப்ளஸ். சிலசமயம் அதுவே மைனஸ் ஆகிடும். பேச வேண்டிய இடத்துலயும் மௌனவிரதம் இருந்து மிஸ் பண்ணின விஷயங்கள் பல! இருந்தாலும், அதை மாத்திக்க முடியல.
மீடியாவுல இருந்தாலும் ஆபீஸ், வீடு... இதைத் தவிர எந்த அவுட்டிங் ஸ்பாட்ஸும் தெரியாது. மியூசிக் ரொம்பப் பிடிக்கும். அப்புறம்... இந்த இந்தி சேனல் `விஜே'க்கள் எல்லாம் பார்த்தீங்களா... பொறாமையா இருக்கு! அவங்களை சினி ஆக்டர்ஸ் அளவுக்கு அங்க கொண்டாடுறாங்க. காரணம், அவ்ளோ சுவாரஸ்யமா நிகழ்ச்சி பண்ண அவங்களுக்குக் கிடைக்கிற சுதந்திரம். அந்த நிலைமை இங்கயும் வரணும்னு எனக்கு ஆசை!’’
எங்களுக்கும்தான்!
‘‘ஓர் ஆதங்கம்..!’’

சன் டி.வி ‘சந்திரலேகா’ சீரியல்ல ‘லேகா’வா கலக்கிட்டு இருக்காங்க, நாகஸ்ரீ.
‘‘சொந்த ஊரு பெங்களூரு. தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் வரும்... அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அங்க சில கன்னடப் படங்களில் நடிச்சுட்டு, இப்போ ‘சந்திரலேகா’ சீரியல். ஒரு நாள் லீவு கிடைச்சாலும் ஊருக்கு ஓடிருவேன். சுறுசுறுப்பு கொஞ்சம் அதிகம்.
ஓர் ஆதங்கம் ஷேர் பண்ணலாமா? வடநாட்டு சீரியல்களை தமிழில் டப் செய்து வெளியிடுறதைக் குறைக்கணும், நிறுத்தணும். உண்மையில், அந்த சீரியல்களோட கதை, திரைக்கதை எல்லாம் நம்ம மக்களுக்கு ஒன்றிப்போகாது. அந்த காஸ்ட்யூம், மேக்கப், அக்சஸரீஸுக்காகத்தான் அதை விரும்பிப் பார்க்கிறாங்க. நம்ம மண்ணுக்கு நெருக்கமா இல்லாத அந்த டப்பிங் சீரியல்களைவிட தரமான தமிழ் சீரியல்களை நம்மால் உருவாக்க முடியும். இதை சேனல்கள் புரிஞ்சுக்கிட்டா, இங்க இருக்கிற சின்னத்திரை இ்ண்டஸ்ட்ரி காப்பாற்றப்படும்.
பி.பி.எம். படிச்சிருக்கேன் என்பதால, பிசினஸ் உமன் ஆசை எனக்கு நிறைய இருக்கு. அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்போ கிடைச்சிருக்கிற இந்த அழகான வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி!’’
குட் கேர்ள்!
4ஜி பெண்!

‘உங்ககிட்ட 4ஜி இருக்கா?’ என்று கேட்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பெண், சாஷா செட்ரி. டேராடூனைச் சேர்ந்த 19 வயது பட்டர்ஃப்ளை. பேச்சிலர் டிகிரியை மும்பையில் முடித்துவிட்டு, காப்பி ரைட்டிங் கோர்ஸ் பண்ணும்போது, ‘நமக்கான ஏரியா இது இல்லை’ என்று உள்மனசு சொல்ல, மியூசிக், கம்போஸிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். பின் மாடலிங் ஆர்வம். ஆனால், அவசரப்பட்டு முடியை ஷார்ட்டாக வெட்டிவிட்டதால் அந்த வாய்ப்புகள் சொதப்பல். அந்த நேரம் பார்த்து, ஏர்டெல் தன் விளம்பரத்துக்கு மாடல் தேடிக்கொண்டிருந்தது. ‘புரொஃபஷனல் மாடல் மாதிரி தெரியாத ஒரு பொண்ணு வேணும்’ என்று தேடிய ஏர்டெல் டீமுக்கு, ஷார்ட் ஹேர், பக்கத்து வீட்டுப் பெண் சாயல், புத்திசாலி தோரணை, ஈஸியாகப் பழகும் கேரக்டர் லுக் என்று அத்தனை அம்சங்களும் பொருந்திக் கிடைத்தார், சாஷா. இதுவரை வந்த ஏர்டெல்லின் டாப் பிரபலங்களின் விளம்பரங்களை எல்லாம்விட, இதற்கு முன் ‘நைட் பேக் ஏர்டெல்’ விளம்பரத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் உட்பட, தேசம் முழுக்க செம ஹிட் ஆகியிருக்கிறார் சாஷா!
உங்ககிட்ட 4ஜி இருக்கா சாஷா?!`
அஞ்சனாவுக்குக் கல்யாணம்!

சன் மியூஸிக் `விஜே' அஞ்சனாவுக்கும், ‘கயல்’ பட நாயகன் சந்திரனுக்கும் மார்ச் 10-ல் கல்யாணம். அஞ்சனாவின் லைன் பிஸி. இந்தப் பக்கம் சிக்கினார் புதுமாப்பிள்ளை சந்திரன். ‘என்ன பாஸ் சொல்லவே இல்ல...’ என்றால் ஒரே வெட்கம்ஸ்!
‘‘இப்போ சொல்லிடுறேன். நான் சூரியன்
எஃப்.எம்-ல சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்வா வேலை செஞ்சுட்டு இருந்தேன். அப்போ அஞ்சனாவைத் தெரியும். அப்புறம் என் வேலை, சினிமா வாய்ப்புனு மூணு வருஷம் டச்சே இல்லை. ஒருநாள் ஒரு அவார்ட் ஃபங்ஷன்ல ரொம்ப நாள் கழிச்சு அஞ்சனாவைப் பார்த்தப்போ, இந்த பல்ப் எரிஞ்சு, மணியெல்லாம் அடிக்கும்னு சொல்வாங்களே... அப்படி ஒரு ஃபீல்! அம்மாகிட்ட, ‘இந்த மாதிரி பொண்ணு பாரும்மா’னு சொல்ல, ‘இந்தப் பொண்ணையே பார்ப்போமா?!’னு என் கள்ளத்தனத்தைக் கண்டுபிடிச்சு சிரிச்சாங்க! அஞ்சனா நம்பர் பிடிச்சு வாட்ஸ்அப், சாட்டிங்னு ஃப்ரெண்ட்ஷிப்பை புதுப்பிச்சுக்கிட்டு, ஒருநாள், ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா'னு கேட்டேன். முதல்ல ஷாக் ஆனவங்க, அப்புறம் `ஓ.கே' சொல்லிட்டாங்க. நவம்பர் 29-ம் தேதி நிச்சய தார்த்தம். மார்ச் 10-ம் தேதி கல்யாணம். வெல்கம்!’’
வாழ்த்துகள் ஜி!
ரிமோட் ரீட்டா