அவள் 16
Published:Updated:

ஒன்பது கஜம் புடவை ஸ்டைலில்... பேன்ட்!

காஸ்ட்யூம் ஸ்டுடியோ!

“டிரெஸ்ஸைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான டேஸ்ட் இருக்கும். சிலருக்கு அதிகமா எம்ப்ராய்டரி, ஜர்தோஸின்னு ஹெவி வொர்க் செய்தா பிடிக்கும். சிலருக்கு சிம்பிளா, பிளெய்னா இருந்தா பிடிக்கும். இந்த ரெண்டு டேஸ்ட்களையுமே பேலன்ஸ் பண்ற மாதிரியான டிரெஸ் டிசைன்களைத்தான் இந்த இதழ்ல பார்க்கப் போறோம்!’’

- ரெடி ஆனார், சென்னை, அண்ணா நகரில் உள்ள ‘ஸ்டுடியோ 149 பை ஸ்வாதி’ டிசைனர் டிரெஸ் ஸ்டுடியோவின் நிர்வாகி ஸ்வாதி புருஷோத்தமன்.

க்ராப் டாப் வித் லாங் ஸ்கர்ட்

ஒன்பது கஜம் புடவை ஸ்டைலில்... பேன்ட்!

“மாடல் அணிந்திருப்பது க்ராப் டாப். அதை இன்னும் ஸ்டைலிஷ்ஷா மாத்த ஹைநெக் காலர் வெச்சிருக்கோம். வெல்வெட் மெட்டீரியல்ல இந்த டிரெஸ்ஸை டிசைன் செய்திருக்கிறதால ஃபுல்லா பிளெய்னா விட்டு, நெக்கில் மட்டும் அதிக சம்கி வேலைப்பாடுகள் செஞ்சிருக்கோம்.

இந்த டாப்புக்கு பாட்டமா, சிம்பிள் கட் ஸ்கர்ட். ஆனால், ஹை வெயிஸ்ட் ஸ்கர்ட்டா கொடுத்திருக்கோம். இதனால் இடுப்புபகுதி முழுவதும் கிளாமரா தெரியாம இருக்கும். அல்லது இதுக்குத் தோதா ஒரு துப்பட்டா போட்டுக்கலாம்.

இந்த டிரெஸ்ஸுக்கு அக்சஸரீஸ் மேட்ச் பண்ண நீளமா தொங்கும் ஹேங்கிங் கம்மல் மற்றும் பிரேஸ்லெட் மட்டும் போதும். இதை உங்க வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், சங்கீத், மெஹெந்தி போன்ற ஃபங்ஷன்ஸுக்கும் அணிந்து போகலாம். சிம்பிளா இருந்தாலும் ராயல் ப்ளூ மற்றும் வெல்வெட் மெட்டீரியல் உங்களை ரொம்ப ரிச்சா காட்டும்!

க்ராப் டாப் வித் தோத்தி டைப் பேன்ட்

ஒன்பது கஜம் புடவை ஸ்டைலில்... பேன்ட்!

இந்த மாடல் அணிந்திருக்கும் டாப்பும், வெல்வெட் மெட்டீ ரியல்தான். அதனால ஹைநெக் க்ராப் டாப்பில், காலருக்கு மட்டும் சம்கி வேலைப்பாடுகள் செஞ்சிருக்கோம். இதுக்கு பாட்டமா பாரம்பர்ய ஒன்பது கஜம் புடவை கட்டும் ஸ்டைல்ல ஒரு தோத்தி பேன்ட்டை, கிரேப் சில்க்கில் டிசைன் செய்தோம். கூடவே மடிப்புடன் கூடிய ஒரு துப்பட்டாவும். இது ரொம்ப ட்ரெண்டியாகவும் அதேசமயம் எத்னிக் டச்சோடும் இருக்கும்.

இதற்கு டிரெஸ் ஸ்டைலுக்கு லாங்கான ஃபங்கி கம்மலும், ஹெவியான பிரேஸ்லெட்டும் போட்டா ரொம்ப ஸ்டைலிஷ்ஷா இருக்கும். ஃப்ரெண்ட்ஸோட போற பார்ட்டி, காலேஜ் கல்ச்சுரல்ஸ்னு யூத் நிகழ்ச்சிகளுக்கு இந்த டிரெஸ்ஸில் போய் அசத்தலாம். வித்தியாச விரும்பி களுக்கானது இந்த தோத்தி டைப் டிரெஸ்.

ஆகமொத்தம் இந்த ரெண்டு டிரெஸ்ஸுமே, சிம்பிள் பிளஸ் ரிச் பிளஸ் யுனிக் காம்பினேஷனுக்குப் பொருத்தமானது!’’ எனும் ஸ்வாதி, அடுத்த இதழுக்கு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் டிரெஸ்ஸுடன் காத்திருக்கிறார்!

இந்துலேகா.சி  படங்கள்:எம்.உசேன்