அவள் 16
Published:Updated:

வழிகாட்டும் ஒலி

கல்விக் கடன்... வழிமுறைகள்!

‘‘பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் தங்குதடையின்றி கல்வி கற்க மத்திய, மாநில அரசுகள் ஏராளமான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன'' என்று கூறும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு...

வழிகாட்டும் ஒலி

``ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை என பல்வேறு துறைகளின் மூலமாகவும் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்லூரிக் கட்டணத்தை (டியூஷன் ஃபீஸ்), தமிழக அரசே செலுத்திவிடுகிறது'' என்று விவரித்தார்.

``ஏராளமான மாணவர்கள் அதற்குண்டான வழிமுறைகளை அறியாமல் இருப்பது வேதனை. அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை தொடர்பான அறிவிப்புகள் பள்ளி, கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்கும். உதவித்தொகை கோரவும் மற்றும் அது தொடர்பான சந்தேகங்களுக்கும் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்வி உதவித்தொகைகான அலுவலரைத் தொடர்புகொள்ளலாம்.

வங்கிகள் மூலம் கல்விக்கடன்கள் வழங்கப்படுகின்றன. உயர்கல்வியை முடித்து, வேலைக்குச் சென்று, பின்னர் கடனை திரும்பச் செலுத்தலாம். இப்போது ஏராளமான தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் வழங்குகின்றன. அவை பற்றிய  அறிவிப்புகள் அடிக்கடி செய்தித்தாள்களில் வெளிவரும்’’ என்ற பிரின்ஸ் கஜேந்திரபாபு...

•  ‘‘கல்வி உதவித்தொகை எதற்காக வழங்கப்படுகிறது?

•  பள்ளி மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் என்னென்ன?

•  கல்லூரி மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் என்னென்ன?

•  மாணவர்களுக்கு தனியார் துறையினரால் வழங்கப்படும் உதவித்தொகைகள் என்னென்ன?

•  கல்லூரி மாணவர்களுக்குக் கிடைக்கும் வங்கிக் கடன்களின் விவரங்கள்...

•  வங்கிக் கடன் குறித்த புகார்களை யாரிடம் தெரிவிப்பது?

•  வாங்கிய வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான விதிமுறைகள் என்ன?’'

என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை விரிவாக ‘வழிகாட்டும் ஒலி’ குரல்வழியில் பகிர்கிறார். டிசம்பர் 1 முதல் 7 வரை 044 - 66802912* என்ற எண்ணில் அழையுங்கள்.

கு.ஆனந்தராஜ் படம்:சொ.பாலசுப்ரமணியன்