அவள் 16
Published:Updated:

ஜர்னலிஸ்ட் ஆகலாம் 'ஜம்'முனு வாழலாம்!

ஜர்னலிஸ்ட் ஆகலாம் 'ஜம்'முனு வாழலாம்!

தழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Journalism and mass communication) துறையில் அட்மிஷன் பெறுவதில் இருந்து வேலைவாய்ப்பு பெறுவது வரை வழிகாட்டுகிறார், ‘தி ஹிந்து’ ஆங்கில பத்திரிகையிலும் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திலும் 30 வருடங்களுக்கு மேல் பத்திரிகையாளராக பணியாற்றியவரும், தற்போதுஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் ‘ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்’ துறைத்தலைவருமான ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி.

ஜர்னலிஸ்ட் ஆகலாம் 'ஜம்'முனு வாழலாம்!

மொழித்திறன்... அடிப்படைத் தகுதி!

பிரின்ட், விஷுவல் என்று எந்த மீடியத்தில் ஜர்னலிஸ்ட் ஆக விரும்பினாலும், அடிப்படைத் தகுதி மொழித்திறன்தான். மொழித்திறன் என்றவுடன் அது ஆங்கில மொழித்திறன் என்று நினைக்க வேண்டாம்... தமிழ் மொழித்திறனும்தான். தமிழ் ஊடகங்களில் பணிபுரிகிறவர்களுக்கு தமிழ் மொழி வளமை முக்கியம்; ஆங்கில ஊடகப் பணிகளுக்கு ஆங்கில மொழி வளமை அவசியம். பள்ளியில் படிக்கும்போதே பிழையின்றி, அழகியலோடு எழுதும் திறனும் பிறருடனான உரையாடலில் தெளிவும், கருத்தும் இருந்தால்... பத்திரிகைத்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

கல்வித் தகுதி!

மூன்று வருடக் கோர்ஸான பி.ஏ., ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் பட்டப் படிப்பில் சேர, எந்த குரூப்பிலாவது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி போதும். என்றாலும், பல கல்லூரிகளிலும் மாணவர்களின் மொழித்திறனை ஆய்வு செய்தே அட்மிஷன் தரப்படுகிறது. சில கல்லூரிகளில் பி.ஏ., ஜர்னலிஸம் கோர்ஸ் மட்டும் இருக்கும். அதையும் `டிக்' செய்யலாம்.

மேற்படிப்பு!

பி.ஏ., ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்/பி.ஏ., ஜர்னலிஸம் இளங்கலை முடித்த பின்னர்,

ஜர்னலிஸ்ட் ஆகலாம் 'ஜம்'முனு வாழலாம்!

இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டப்படிப்பு எம்.ஏ., ஜர்னலிஸம், எம்.ஏ., மீடியா ஸ்டடீஸ், எம்.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ், எம்.ஏ., கம்யூனிகேஷன் என்று விருப்பத்துக்கு ஏற்ப மேற்படிப்பைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

டாப் கல்லூரிகள்!

தமிழகத்தில் சென்னை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், எம்.ஒ.பி. வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் ஜர்னலிஸம் கோர்ஸ் உண்டு. கோவை, ஹிந்துஸ்தான் கல்லூரியில் ஜர்னலிஸம் அண்ட் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பும் உள்ளது.

வேலைவாய்ப்பு!

ஜர்னலிஸம் படித்தால் மீடியாவில் ரிப்போர்ட்டிங் வேலை மட்டும்தான் என்றில்லை... இந்தத் துறையில் ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொட்டிக்கிடக்கின்றன. மீடியா நிறுவனங்கள் மட்டுமல்லாமல், எம்.என்.சி-களில் பி.ஆர் அதிகாரி, பி.டி.ஐ, ராய்ட்டர்ஸ் என்று செய்தி நிறுவன வேலை வாய்ப்புகள், இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் வெளிநாட்டு செய்தித் தொடர்பாளராகவும், செய்தியை உருவாக்கும், எழுத்தாளர்கள், விளம்பரப் பிரிவு உள்ளிட்ட மேலும் பல வாய்ப்புகளும் உண்டு.

வழக்கமான 9 டு 5 அலுவல் மனப்பான்மையின்றி துடிப்புடன் பணியாற்றினால், சீக்கிரமே ஆகலாம் சீனியர் ஜர்னலிஸ்ட்!

வாழ்த்துகள்!

 எஸ்.கே.பிரேம்குமார்  படங்கள்:மா.பி.சித்தார்த்