ஸ்க்ரீன் ஷாட்!


Naveen Kumar@navi_n
வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டும் என்கிற நல்லெண்ணம் போன் சார்ஜ் தீர்ந்துபோகும்போது அதிகமாக ஏற்படுகிறது.
கருணைமலர் @karunaiimaLar 4h4 hours ago
இன்னும் அப்பா, அண்ணன், லவ்வர் காசுலதான் பெண்கள் மொபைல்க்கு ரீசார்ஜ் செய்றாங்கன்ற மூட நம்பிக்கை மட்டும் ஆண்கள் மத்தியில் மாறப்போவதில்லை!
யாதுமாகி @YAADHuMAAGE Nov 16
ஈசிஆர்லயும் வேளச்சேரியிலயும்தான் வீடு வேணும்னு ஒத்த கால்ல நின்னீங்களேடா...இப்ப ஒத்தகால கூட தரையில வெக்க முடியாம நீந்துறிங்களேடா....
வினோ @vinodhkrs Nov 16
ஆள் நடமாட்டமில்லாத வாட்ஸ்அப் குரூப்ல இருந்து யாராச்சும் லெஃப்ட் ஆகுற மெசேஜ் வரப்ப பாழடைந்த பில்டிங்ல ஒரு சுவர் இடிஞ்சு விழுற ஞாபகம் வருது
ஜனா @Jana_Vel Nov 14
வாழ்வதற்கான செலவு
மிக குறைவே.
அடுத்தவனை போல
வாழ்வதற்கான செலவுதான்
மிக அதிகம்.

தொகுப்பு: கார்த்தி, ஐ.மா.கிருத்திகா, யாழினி அன்புமனி, தா.நந்திதா, லோ.சியாம்சுந்தர்