அவள் 16
Published:Updated:

விர்ர்ர்ர் உர்ர்ர்ர் பைக்ஸ்!

விர்ர்ர்ர் உர்ர்ர்ர் பைக்ஸ்!

‘காலேஜ்ல சேரும்போது கண்டிப்பா பைக் வேணும்’ என்பது பல வீடுகளில் பசங்களோட வேண்டுகோள், போராட்டமா இருக்கு. ‘முடி காத்துல பறக்க ஸ்பீடா காலேஜுக்கு வந்து, வளைச்சுத் திருப்பி, பல கண்கள் நம்மளப் பார்க்கும்போது கெத்தா ஸ்டாண்ட் போடுறது செம ஃபீல்!’னு காரணம் சொன்ன பசங்களுக்கு, fazzer, fz, அப்பாச்சி, பல்சர், R15, ராயல் என்ஃபீல்டு, RX 100, ஹோண்டா ஷைன், ஸ்ப்லெண்டர், cbz, ஜிக்ஸர், டியூக், டிஸ்கவர்னு பைக் செலக்ட் பண்றதில் சாய்ஸ்கள் பல இருக்கு. இப்போ கேம்பஸ்ல டாப் ட்ரெண்டிங்கா இருக்கிற பைக் மாடல்களைச் சொல்றாங்க, அந்த பைக்குகளை வெச்சிருக்கிற பார்ட்டீஸ்!

விர்ர்ர்ர் உர்ர்ர்ர் பைக்ஸ்!

அப்பாச்சி (Apache)

கார்த்தி: இப்போ காலேஜ் பைக் என்றதும் ஞாபகத்துக்கு வர்றது ‘அப்பாச்சி’தான். ‘ஆதி’ படத்துல விஜய்யும், ‘அயன்’ படத்துல சூர்யாவும் யெல்லோ கலர் அப்பாச்சி வண்டியை ட்ரெண்டு ஆக்கிட்டாங்க. கொஞ்சம் உயரம் கம்மியா இருக்கிற பசங்களுக்கு செம ஃபிட் இந்த வண்டி. ஸ்டாண்ட் போடும்போது, அலப்பறை அள்ளும்!

பல்ஸர் (pulsar)

முகிலன்: ‘பொல்லாதவன்’ படத்துல பெரிய லெவல்ல மார்க்கெட்டிங் பண்ணி விட்டுட்டாங்க பல்ஸருக்கு. பாஜாஜ்ல எத்தனையோ மாடல் வந்திருந்தாலும், கைஸ் மட்டுமில்ல... கேர்ள்ஸையும் இம்ப்ரெஸ் பண்றது இந்த மாடல்தான். ஆபீஸ் லுக்கும் தரும் இந்த வண்டியில் பிளாக் கலரும், ஆஷ் கலரும் அடிச்சுத் தூக்கும்!

R15

விர்ர்ர்ர் உர்ர்ர்ர் பைக்ஸ்!

சாகர் ஆதித்யன்: சரியான பிக்கப். சிவப்பு, வெள்ளை கலர்ல அப்படியே ஸ்போர்ட்ஸ் வண்டி மாதிரியே மிரட்டும் R15. பல காலேஜ் பசங்களோட பிரார்த்தனை, எப்படியாச்சும் R15 வாங்கிடணும் என்பதுதான். பெரும்பாலான தெலுங்குப் படங்களில் இந்த வண்டிதான் மாஸ்.

FZ

அருண்: ஒல்லியா, ஹைட்டா இருக்கிற பசங்களுக்கு இந்த FZ வண்டி சரியான மேட்ச். ஓட்டிட்டுப் போனா, ஸ்மார்ட்டோ ஸ்மார்ட்தான்! வண்டிக்கு முன்னாடி இருக்கிற டூம், கேர்ள்ஸை ரொம்ப அட்ராக்ட் பண்ணும். பிளாக் கலர் FZ-க்கு பசங்களோட லைக்ஸ் அதிகம். முக்கியமான ஒரு ப்ளஸ்... இந்த வண்டி ஓட்டும்போது முதுகுவலி ஏற்படாது.

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield)

யோகேஷ், விகாஷ்: பேருக்கு ஏத்த மாதிரி ராயலான வண்டி. போலீஸ், மிலிட்டரி அங்கிள்ஸுக்கு மட்டும்தான் என்ஃபீல்டுங்கிற காலம் மாறி, காலேஜ் பசங்களுக்கும் இது இப்போ தோஸ்து! ராயல் சவுண்டு, வைப்ரேஷன் இல்லாத கிளாஸிக், தண்டர் பேர்டு, டெசர்ட் ஸ்ட்ராம்னு பக்கா மாடல். வேட்டி, சட்டை கட்டினாலும் சரி, காட்டன், ஜீன்ஸ் போட்டாலும் சரி... மேட்ச் ஆகும். நல்ல பெர்சனாலிட்டியோட இருக்கிறவங்க ஒரு கூலர்ஸ் போட்டுட்டு என்ஃபீல்டை எடுத்தா... கிளாஸிக். காணாத கண்ணும் கண்ணல்ல!

RX 100

விர்ர்ர்ர் உர்ர்ர்ர் பைக்ஸ்!

பச்சையப்பன்: எத்தனை வண்டி வந்தாலும் இன்னமும் அதே கெத்தோட, ஸ்டாண்டர்டு லுக்கோட நிக்குது RX 100, RX 135. பிக்கப்ல சூப்பர் வண்டி! அந்த சவுண்டுக்கே இந்த வண்டியை வாங்கலாம். எல்லா காஸ்ட்யூமுக்கும் செம ஃபிட் ஆகும். ‘வாலி’ படத்தில ‘தல’ வெச்சிருந்த மஞ்சள் RX 100, ‘3’ படத்துல தனுஷ் வரைக்கும் அதே இமேஜ்ல இருக்கு. காலேஜை இந்த வண்டியில ஒரு ரவுண்ட் சுத்தி வந்தா, மெதக்குற மாதிரி இருக்கும்!

நாட் பட் நாட் த லீஸ்ட்... சம்பாதிச்சுட்டு கனவு வண்டியை வாங்கலாம், படிக்கும்போது பெற்றோர் பர்ஸ்தான் முக்கியம்!

சா.கவியரசன் படங்கள்:கோ.க.தினேஷ்