அவள் 16
Published:Updated:

நம்மை நாமே பாதுகாக்கலாம்..!

- கராத்தே ஸ்டெப்ஸ்

ன்றைய உலகம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதை சொல்லத் தேவையில்லை... குறிப்பாக, பெண்களுக்கு! ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் நம்மைத் தாக்க வரும் எதிராளியிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, சில எளிய `ஆன் த ஸ்பாட் தற்காப்பு முறை'களை இங்கு கற்றுத் தருகிறார், கராத்தேயில் 25 வருடங்கள் அனுபவம் கொண்ட, சேலம் ‘ரியோசின்கான் சிட்டோரியோ’ கராத்தே பயிற்சிப் பள்ளியின் ஆசிரியர் சீனிவாசன்...

நம்மை நாமே பாதுகாக்கலாம்..!

முகத்தில் தாக்க வந்தால்...

ஸ்டெப் 1: எதிராளி முகத்தை நோக்கித் தாக்க வரும்போது, மேல்நிலைத் தடுப்பு  மூலம் அவன் கைகளை இறுகப் பிடித்துத் தடுங்கள்.

ஸ்டெப் 2: பிறகு, அவன் அடிவயிற்றிலோ, மார்பிலோ தாக்குங்கள்.

ஸ்டெப் 3: கீழே தள்ளி அவனது முகத்தில்/மார்பில் தாக்கி நிலைகுலையச் செய்யுங்கள்.

நம்மை நாமே பாதுகாக்கலாம்..!

தலைமுடியைப் பற்றி இழுத்தால்...

ஸ்டெப் 1: முடியைப் பற்றி ஒருவன் தாக்க வரும்போது, அவன் மணிக்கட்டை இறுகப் பிடித்து தடுத்து நிறுத்தி, `லாக் இன்' செய்யுங்கள்.

ஸ்டெப் 2: பிறகு கீழே தள்ளி நிலைகுலையச் செய்யுங்கள்.

அதன் பின் கழுத்தின் மேல் கால் வைத்துத் தாக்குங்கள்.

ஆயுதம் கொண்டு தாக்க வரும்போது...

நம்மை நாமே பாதுகாக்கலாம்..!

ஸ்டெப் 1: ஆயுதம் கொண்டு தாக்க வரும்போது முதலில் அவன் கையைப் பிடித்து நிறுத்துங்கள்.

ஸ்டெப் 2: பிறகு, எதிராளியின் வலிமையான பகுதியான இடுப்புப் பகுதியில் தாக்குங்கள். இதன் மூலம் அவன் கவனத்தை திசை திருப்பி, கீழே தள்ளிவிட்டு, தப்பிக்கலாம்.

பின்னால் இருந்து தாக்க வரும்போது...

நம்மை நாமே பாதுகாக்கலாம்..!

பின்னால் இருந்து எதிர்பாராதவிதமாக தோள்பட்டையையோ அல்லது கழுத்துப் பகுதியையோ பிடித்துத் தாக்க வரும்போது, சிறிதும் தயங்காமல், தாமதிக்காமல் உயிர் நிலை என சொல்லக் கூடிய நெஞ்சுக்கும் கீழே, வயிற்றுக்கு மேலே, முழங்கையைக் கொண்டு பின்னோக்கித் தாக்குங்கள்.

கையைப் பிடித்து இழுக்கும்போது/மடக்கும்போது...

நம்மை நாமே பாதுகாக்கலாம்..!

ஸ்டெப் 1: எதிராளி கையைப் பிடித்து வளையுங்கள்.

பின்னர், மணிக்கட்டில் இறுகப் பற்றி திருப்புங்கள்.

ஸ்டெப் 2: அந்த நிலை மாறாமல் கீழே தள்ளி, பன்ச் செய்து தப்பிக்கலாம்.

சீனிவாசன் தந்த குறிப்பு: ‘இதெல்லாம் முடியுமா?’ என்றால் நிச்சயம் முடியும். இந்தக் குறிப்புகள்

நம்மை நாமே பாதுகாக்கலாம்..!

எல்லாம் எதிராளியுடன் சரிக்குச் சமம் சண்டையிட வழங்கப்பட்டவை அல்ல; அந்த நொடி தற்காப்புக்கே! கல்லூரி, அலுவலகம் விட்டு வருவதில் இருந்து, குடும்ப வன்முறைகள் வரை இந்தத் தாக்குதல்களில் எதையாவது எதிர்கொள்ள நேர்ந்தால், தேவை அந்த நிமிட தைரியமும், சமயோஜிதமும்தான். மனதிலும், உடம்பிலும் தைரியம் ஏற்றி துணிந்து எதிர்த்தால், அதை எதிர்பார்க்காமல் எதிராளி தடுமாறும் அந்த மணித்துளியை தப்பிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். அச்சம் விலக்கி, எப்போதும் நமக்கு நாமே பாதுகாப்பு என்பதை மனதில் வையுங்கள்!

தொகுப்பு: ச.ஆனந்தப்பிரியா  படங்கள்:பா.காளிமுத்து, சூ.நந்தினி