அவள் 16
Published:Updated:

பேச்சுலர் கிச்சன்!

பேச்சுலர் கிச்சன்!

‘‘நாங்க மொத்தம் அஞ்சு பேர். தேனி, நாடார் - சரஸ்வதி காலேஜ்ல இன்ஜினீயரிங் படிக்கிறோம். இந்த சண்டே நாங்க பண்ணப்போற பேச்சுலர் சமையலின் லைவ் டெலிகாஸ்ட், உங்களுக்காக!’’னு ரெடி ஆனாங்க கோகுல், பாலா, விக்னேஷ் சர்மா, விக்ரம் மற்றும் பிரதீப்!

பேச்சுலர் கிச்சன்!

பிரதீப்: என்னடா சமைக்கலாம்?

விக்ரம்: நம்ம குக்கிங் மாஸ்டர் கோகுல்... சொல்லுங்க என்ன மெனு?’

சர்மா: டேய்... ஏதோ ரொட்டி, டொமேட்டோ சிக்கனாம்.

பிரதீப்: ரொட்டின்னா, பிஸ்கட்டா?

கோகுல்: நீயெல்லாம் ‘பாராசூட்னா தேங்காய் எண்ணெயா?’னு கேட்குற பார்ட்டி. உனக்கு ரொட்டியைப் பத்தி என்ன தெரியும். சொல்றேன் கேட்டுக்கோ... எண்ணெய் தடவி சுட்டா... அது சப்பாத்தி, தடவாம சுட்டா... ரொட்டி!

பிரதீப்: டேய்... நீ உண்மையிலேயே மாஸ்டர்டா!

கோகுல்: தேங்க்யூ... தேங்க்யூ... தேங்க்யூ!

விக்ரம்: அடச்சீ... வேலையைத் தொடங்கு!

கோகுல்: இப்போ ரொட்டிக்கு மாவு பிசையப் போறோம். தேவையான அளவு தண்ணி, கொஞ்சம் நெய், எண்ணெய், தயிர், சர்க்கரை சேர்த்து பிசைஞ்சா மாவு சாஃப்ட்டா இருக்கும். சர்மா... நான் சொன்னதை அப்படியே செய் பார்க்கலாம்.

சர்மா: சரி, சர்க்கரை எதுக்குடா?

கோகுல்: அப்படிக் கேளுடா என் அப்பாடக்கரு! சர்க்கரை சேர்த்து மாவு பிசைஞ்சா சுகர் பேஷன்ட்டுக்கு நல்லது!

சர்மா: ஙஙஙங...

பாலா: மச்சான்... இதுதான் ஆரம்பம். போகப் போக செத்துருவ... ஸாரி, செட்டாகிருவனு சொல்ல வந்தேன்!

விக்ரம்: டவுட்டு டவுட்டு டவுட்டு... உப்பு போடலையேடா?

கோகுல்: ஹிஹி... மறந்துட்டேன் பாஸ்! ஒண்ணும் பிரச்னையில்ல... இப்போ போட்டுக்கலாம்!

பாலா: டேய்... நீ குக்கிங் மாஸ்டரா, கில்லிங் மாஸ்டரா?

பிரதீப்: நம்ம கேன்டீன் சாப்பாட்டை சாப்பிட்டே பிழைச்சுக் கிடைக்கோம்... இதெல்லாம் எம்மாத்திரம்?!

கோகுல்: இப்போ சிக்கன் கிரேவிக்கு ரெடி பண்ணுவோம். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் கட்டிங், பூண்டு, இஞ்சி கிரைண்டிங், ஸ்டார்ட் வொர்க்கிங்!

பாலா: வெங்காயம் எவ்வளவு வெட்டணும் பாஸ்?

கோகுல்: நான்-வெஜ்க்கு எவ்ளோ வெங்காயம் போடுறோமோ, அவ்வளவு டேஸ்ட்! அதனால நீங்க கூச்சப்படாம வெட்டித் தள்ளுங்க பாஸ்!

சர்மா: அங்கிட்டு என்னடா நடக்குது?

விக்ரம்: சப்பாத்தி... ஸாரி... ரொட்டி தேய்க்கிறேன். ஆனா, ரவுண்டா மட்டும் வரமாட்டேங்குதுடா. அமீபா மாதிரி நெளியுது, வளையுது!

பேச்சுலர் கிச்சன்!

பாலா: டேய்... அப்போ `நாண்’ மாதிரி சதுரமா போடு!

பிரதீப்: மச்சான் மச்சான்... ஹார்ட் ஷேப் செய்டா மச்சான்!

விக்ரம்: ம்ம்ம்... பிஞ்சுடக் கூடாதேனு அமீபாவுக்கே இங்க நாக்குத் தள்ளுது... இதுல ஹார்ட்டின் ஷேப்பாம். நான் தேய்ப்பதே ரொட்டி. ரொட்டியே சாசனம்... ஸாரி... சாப்பாடு!

கோகுல்: கைஸ் லிஸன்... நான் சொல்லச் சொல்ல பிரதீப் பண்ணப் போறான். பட்டை, சோம்பு, தாளிச்சு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, அரைச்சு வெச்சிருக்கிறதைப் போட்டு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, கழுவின சிக்கனை அதில் போட்டு வதக்கி, தண்ணீர் ஊற்றி, கொதிக்கவிட்டு, வெந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவுறோம்! அவ்ளோதான்!

சர்மா: வாவ்! செஞ்சுருவோம்ல... செஞ்சுட்டோம்ல!

பிரதீப்: இப்பா தான் தெரியுது மச்சான் உன்னை ஏன் மாஸ்டர்னு சொன்னாங்கனு!

கோகுல்: ரொம்பப் புகழாதடா!

பிரதீப்: கூட இருக்கிறவங்களை வேலை வாங்கி வேலை வாங்கியே, நீ ஒரு மாஸ்டர்னு நிரூபிச்சுட்டடா!

கோகுல்: கிர்ர்ர்ர்ர்!

சர்மா: அப்போ நான் மாவு பிசைஞ்சப்போ தலையைச் சொரிஞ்சதை யாரும் பார்க்கலைல?!

பாலா: நான் வெங்காயம் கட் பண்ணும்போது வியர்வையைச் துடைச்சதையே யாரும் பார்க்கலை... விட்றா!

விக்ரம்: நான் சப்பாத்தி தேய்ச்சப்போ...

‘ஸ்டாப் இட்!’ சொல்லி நாம `எஸ்’ ஆயிட்டோம்!

 ச.மோகனப்பிரியா  படங்கள்: வ.வினோத்குமார்