அவள் 16
Published:Updated:

"ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு!"

"ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு!"

ராணுவம் முதல் விண்வெளி வரை பெண்கள் களமிறங்கிவிட்டாலும், சென்ற வருடம் வரை ‘மைனிங்’ எனப்படும் சுரங்கவியல் சார்ந்த பொறியியல் படிப்பில் பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்தியாவில் வெகுசில கல்லூரிகளில் மட்டுமே இருக்கும் படிப்பு இது. சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சுரங்கவியல் இளங்கலை படிப்பில் இந்தக் கல்வியாண்டில் கலந்தாய்வுக்கு மாணவியரும் அனுமதிக்கப்பட்டனர். பெண் பேராசிரியைகள்கூட இல்லாத துறையில் அடி எடுத்து வைத்திருக்கிறார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லோக தாரிணி!

"ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு!"

‘‘சுரங்கவியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் நம்ம நாட்டுல அரசு நிறுவனங்களான நெய்வேலி நிலக்கரி நிறுவனம், கோல் இந்தியா போன்றவற்றிலும், வெளிநாடுகளிலும், குறிப்பா மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம். பொதுவா பொண்ணுங்க மெக்கானிக்கல் படிக்கவே வீட்டுல மூன்றாம் உலகப் போர் நடக்கும். ஆனா, எங்க வீட்டுல நிலைமை தலைகீழ். ‘மைனிங்’னு சொன்னதும் என்னோட சாய்ஸை சந்தோஷமா ஆதரிச்சார் அப்பா.

முதல் நாள் காலேஜுக்கு வந்தப்போ, ‘நம்ம டிபார்ட்மென்ட் அட்மிஷன் பொண்ணுங்க எல்லாம் எங்க?’னு தேடி, வெயிட் பண்ணிப் பார்த்தா, யாரையும் காணோம். அப்போதான் தெரிஞ்சது... கவுன்சிலிங்கில் இந்த கோர்ஸ் க்ளிக் பண்ணின ஒரே பொண்ணு நான்னு! இன்னொரு பக்கம், புரொபசர்ஸ் எல்லாம்கூட, ‘யாரு அந்தப் பொண்ணு?’னு என்னைப் பார்க்க ஆவலா இருந்த சமயத்துல எனக்கோ ஒரே சோகம்ஸ். முதல் நாளே கேம்பஸ் முழுக்க ஃபேமஸ் ஆகிட்டாலும், கிளாஸுக்குள்ள நுழைஞ்சாலே அழுகையா வரும். ஆனா, எங்க பசங்களுக்கு என்னோட நிலைமை புரிஞ்சு, என்னை சகஜமாக்கி, ரொம்ப அன்பா பழகினாங்க. சந்தோஷத்துல, நானும் நார்மல் ஆகிட்டேன்!’’ என்று தாரிணி சொல்ல,

"ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு!"

‘‘தாரிணி எங்க டிபார்ட்மென்ட் செல்லம். ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’தான் புரொபசர்ஸே கூப்பிடுவாங்க. லேப் வேலைகளில் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டாங்க. இப்போ வெல்டிங், மர வேலைகள்னு எல்லாத்தையும் சூப்பரா செய்றாங்க. கிரேட்!’’ என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள், பாசக்கார கிளாஸ்மேட்ஸ்.

‘‘இதுவரை ஸ்கூலில், வீட்டில்கூட நான் இப்படி சர்ப்ரைஸா பிறந்தநாள் கொண்டாடினதில்லைன்னு நினைக்கிற அளவுக்கு இந்த வருஷம் என் பர்த்டேயை மறக்க முடியாததாக்கிட்டாங்க எங்க டிபார்ட்மென்ட்ல. அடுத்த வருஷம் நிறையப் பொண்ணுங்க இந்தக் கோர்ஸ் எடுக்கணும். வாங்க... பாய்ஸ் பார்த்துப்பாங்க!’’

- கலகலவெனச் சிரிக்கிறார் தாரிணி!

 ஐ.மா.கிருத்திகா, படங்கள்:ம.நவீன்