மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்டிசம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

நல்ல சேதி வரும்!

ராசி பலன்கள்

மேஷம்: முன்எச்சரிக்கை மிக்கவர்களே! புதனும், சுக்கிர னும் சாதகமான வீடுகளில் செல் வதால், புது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல பதில் வரும். சூரியன் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 20-ம் தேதி முதல் குரு வக்ரமாகி 6-ல் மறைவதால், பணப்பற்றாக்குறை நிலவும். வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களில் சிலரைப் பற்றிய உண்மையை உணர்ந்துகொள் வீர்கள்.

சூட்சுமங்கள் அறியும் நேரம்!

ராசி பலன்கள்

ரிஷபம்: `மறப்போம், மன்னிப்போம்’ என்றிருப்பவர் களே! 20-ம் தேதி முதல் குருபகவான் வக்ரமாகி 5-ம் வீட்டில் அமர்வதால், திடீர் பணவரவு உண்டு. வீடு வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். கண்டகச் சனி தொடர்வதால், கவலைகள் வந்து செல்லும். 25-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால்... வீண் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உத்யோகத்தில் உங்களுக்கு அலுவலக சூட்சுமங் கள் அத்துப்படியாகும்.

முன்கோபத்தைக் குறையுங்கள்!

ராசி பலன்கள்

மிதுனம்: ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்களே! ராசிநாதன் புதன் உங்களைப் பார்த்துக்கொண் டிருப்பதால், பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சூரியன் 7-ம் வீட்டில் நுழைவதால், முன்கோபத்தைக் குறையுங்கள். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால்...  உடல் உபாதை வந்து செல்லும். குரு சாதகமாக இல்லாததால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமையும், விமர்சனங்களும் அதிகரிக்கும்.

சகோதரரால் அனுகூலம்!

ராசி பலன்கள்

கடகம்: கற்பனையில் கோட்டை கட்டுபவர்களே! சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்வதால், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். சகோதரர் அனு சரணையாக இருப்பார். புதன் 6-ல் மறைந்திருப்பதால்... வீண் செலவுகள் வந்து செல்லும். 20-ம் தேதி முதல் குரு 3-ல் நுழைவதால், சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தை புதிய முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமைகளை மூத்த அதிகாரி களிடம் கொண்டு செல்ல சிலர் மறுப்பார்கள்.

எதிர்பார்த்த பணம் வரும்!

ராசி பலன்கள்

சிம்மம்: சிக்கல்களைக் கண்டு அஞ்சாதவர்களே! குருபகவான் 20-ம்தேதி முதல் வக்ர மாகி, 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சுக்கிரனும், புதனும்சாதகமான வீடுகளில் செல்வதால்,மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். என்றாலும், 5-ம் வீட்டில் சூரியனும் நுழைவதால், அரசு காரியங்கள் தாமதமாகும். 2-ம் வீட்டிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால், சாதாரண பேச்சுகூட சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களைக் குறை கூறிக்கொண்டிருந்த அதிகாரியின் மனசு மாறும்.

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை!

ராசி பலன்கள்

கன்னி: கேள்விக்கணை தொடுப்பதில் வல்லவர்களே! சூரியனும், புத னும் சாதகமான வீடுகளில் செல்வதால், பண வரவு திருப்தி தரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். செவ்வாயும், ராகுவும் ராசிக்குள் நிற்பதுடன், 20-ம் தேதி முதல் குருவும் ராசிக்குள் அமர்வதால், மன இறுக்கம் வரும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும்.

நன்மைகள் பெருகும் நேரம்!

ராசி பலன்கள்

துலாம்: நீதியின் பக்கம் நிற்பவர்களே! சூரி யன் 3-ம் வீட்டில் நுழைவதால்... புது வாகனம், விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். ராசிக்கு 12-ல் செவ்வாயும், ராகுவும் நிற்பதுடன், 20-ம் தேதி முதல் குருவும் நுழைவதால்... சில சமயம் சலிப்பு, சோர்வு வந்து செல்லும். திடீர் பயணங்கள் செய்ய நேரிடலாம்.வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில், நீங்கள் பணிகளைப் போராடி முடிக்க வேண்டி வரும்.

உத்யோகத்தில் மேன்மை!

ராசி பலன்கள்

விருச்சிகம்: விளம்பரத்தை விரும்பாதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடு களில் செல்வதால், பண வரவு உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு சிறந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். 20-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நுழைவதால், புது வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். 2-ல் சூரியன் நுழைவதால், கண் பார்வை விஷயத்தில் கவனம் செலுத் துங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

ஆபரண யோகம்!

ராசி பலன்கள்

தனுசு: முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! செவ்வாய் சாதக மாக இருப்பதால்... புகழ், கௌரவம் அதிகரிக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சூரியன் ராசிக்குள் நுழைவதால்... முன்கோபம், உடல் உபாதை வந்து செல்லும். 20-ம் தேதி முதல் குரு வக்ரமாகி 10-ல் நுழைவதால், அநாவசியமாக யாருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, தக்க நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.

சொத்து வாங்கும் வேளை!

ராசி பலன்கள்

மகரம்:  காரியத்தில் கண்ணாக இருப்பவர்களே! 20-ம் தேதி முதல் குருபகவான் 9-ம் வீட்டில் வக்ரமாகி அமர்வதால்,புது சொத்து வாங்குவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில்உற்சாகம் பிறக்கும். குலதெய்வப்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சூரியன் 12-ல் மறைவதால்... திடீர் பயணங்கள், வீண் விரயம் வந்து செல்லும். அரசாங்க விஷயங்கள் இழுபறியாகி முடியும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமையை மேலதிகாரி பாராட்டுவார்.

அந்தஸ்து உயரும்!

ராசி பலன்கள்

கும்பம்: யதார்த்த நிலையை நன்கு அறிந்தவர்களே! சூரியன் லாப வீட்டில் நுழைவதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து ஒருபடி உயரும். ஷேர் மூலம் பணம் வரும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். செவ்வாய் 8-ல் நிற்பதால்... அலைச்சல், டென்ஷன் வந்து செல்லும். 20-ம் தேதி முதல் குரு வக்ரமாகி 8-ல் அமர்வதால், வீண் விரயம் ஏற்படலாம். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி உயரதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மன இறுக்கம் விலகும்!

ராசி பலன்கள்

மீனம்: பாசவலையில் சிக்கு பவர்களே! சூரியன் 10-ல் அமர்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. ராசிநாதன் குரு வக்ரமாகி 7-ல் அமர்வதால், மன இறுக்கம் விலகும். வெள்ளியாலான  பொருட்கள் வாங்குவீர்கள். சர்ப்பகிரகங்கள் சாதகமாக இல்லாத தால்... . வீட்டு பத்திரங்கள், பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள், சக ஊழியர்களால் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.