அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சூப்பரான எதிர்காலம்... சுற்றுலா துறையில்!

சூப்பரான எதிர்காலம்... சுற்றுலா துறையில்!
News
சூப்பரான எதிர்காலம்... சுற்றுலா துறையில்!

சூப்பரான எதிர்காலம்... சுற்றுலா துறையில்!

மீபத்தில் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் ‘நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ துறைகளுள் சுற்றுலா துறையும் ஒன்று. டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட் எனப்படும் இந்தத் துறைசார்ந்த படிப்பு, இப்போது தமிழகத்தின் சில கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்பட்டாலும், இன்னும் சில ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகளைப்போல பரவலாக்கப்படும். அந்தளவுக்கு இதில் வேலைவாய்ப்புகள் பெருகிக்கொண்டே வருகின்றன. சென்னை, டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியின் சுற்றுலா துறைத் தலைவர் காருண்யா, இந்தக் கோர்ஸ் பற்றிய விவரங்களைப் பகிர்ந்தார்.

சூப்பரான எதிர்காலம்... சுற்றுலா துறையில்!

எங்கு படிக்கலாம்?

டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட் படிப்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ கோர்ஸும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மற்றும் பிஹெச்.டி படிப்புகளும் வழங்கப்படுகின்றன. சென்னையில் சில தனியார் கல்லூரிகளில், பி.ஏ., பி.எஸ்ஸி., டிப்ளோமா படிப்புகளாக இது வழங்கப்படுகிறது. இந்திய அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்படும், `இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்' (IITTM) கல்வி நிறுவனங்கள், குவாலியர், கோவா, நொய்டா, புவனேஷ்வர் மற்றும் நெல்லூர் ஆகிய நகரங்களில் செயல்படுகின்றன.

கல்வித்தகுதி

பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்தவர்களும், சுற்றுலா துறைசார்ந்த

சூப்பரான எதிர்காலம்... சுற்றுலா துறையில்!

படிப்புகளுக்கு பி.ஏ/பி.எஸ்ஸி., டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட், டிப்ளோமா இன் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.ஏ., டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர, பி.ஏ., பி.எஸ்ஸி., பி.இ என ஏதேனும் ஒரு இளங்கலைப் படிப்பை, எந்தப் பிரிவிலும் முடித்திருக்கலாம்.

சிலபஸ்

டூரிஸம் துறையின் இளங்கலைப் படிப்பில் உலகச் சுற்றுலா தலங்கள், அவற்றின் வரலாறு கற்பிக்கப்படும். மேலும், தொல்பொருள் ஆராய்ச்சி, ஏவியேஷன் எனப்படும் வான்பயணவியல், டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் எனப்படும் பயண ஏற்பாட்டு நிறுவனம் அமைப்பது, இணையம் மூலமாக சிறப்புப் பயணச்சீட்டுகள் பெறுவது, ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் எனப்படும் விருந்தினர் உபசரிப்பு ஆகிய பாடங்கள் சிலபஸில் அடங்கும். ஒவ்வொரு செமெஸ்டரிலும், சுற்றுலா தலங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் எடுக்கும் குறிப்புகளை, புராஜெக்டாக சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள்

சுற்றுலா துறையில் பலவகையான வேலைவாய்ப்புகள் உள்ளதால், இளங்கலை பட்டம் பெற்றவுடனேயே பணியில் சேரலாம். பயண ஏற்பாட்டு நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் வாய்ப்புகள் விரிந்துள்ளன. சுற்றுலா வழிகாட்டிகளாகவும் பணியை அமைத்துக்கொள்ளலாம். சொந்தமாகத் தொழில்செய்ய விரும்புகிறவர்கள் சுயமாக ஒரு பயண ஏற்பாட்டு நிறுவனத்தைத் தொடங்கலாம். அதற்கான பயிற்சியும், இந்தப் படிப்பில் வழங்கப்படும். இளங்கலை பட்டம் பெற்றபின், எம்.பி.ஏ., டூரிஸம் படிப்பில் சேரலாம். ஏவியேஷன், ஹாஸ்பிட்டாலிடி போன்ற குறிப்பிட்ட துறைகளில் பணிபுரிய விரும்புபவர்கள், அத்துறை சார்ந்த டிப்ளோமா கோர்ஸ்களையும் சேர்த்து முடிக்கலாம்.

டூரிஸம்... ஜெட் வேகம்!

கட்டுரை மற்றும் படம்:ஜெ.விக்னேஷ்