அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வைஃபை பெண்களின் கைப்பை!

வைஃபை பெண்களின் கைப்பை!
பிரீமியம் ஸ்டோரி
News
வைஃபை பெண்களின் கைப்பை!

வைஃபை பெண்களின் கைப்பை!

பேக் வைத்திருந்த காலம் எல்லாம் போய், கையில் ஒற்றை நோட்டுடன் பயபுள்ளைகள் கல்லூரிக்குச் சென்றாலும், நோட்புக், மொபைல், சீப்பு, ஃபேஸ் வாஷ், வாட்டர் பாட்டில் போன்ற பெண்களின் தேவைகளைச் சுமக்க வசதியானது ஹேண்ட்பேக்தான். ஷோல்டர், க்ராஸ்-பாடி, ஸ்லிங் பேக், க்ளட்ச், பக்கெட், டோட், என்வலப், பாக்ஸ் என ட்ரெண்டி ஹேண்ட்பேக்குகளை, காலேஜ் காஸ்ட்யூமான குர்தா மற்றும் லெகிங்ஸுக்கு மேட்ச்செய்து ஒரு ஸ்கிரீனிங் இங்கே!

வைஃபை பெண்களின் கைப்பை!

ராயல் லுக்!

ஹேண்ட்பேக்குகளின் கிளாஸிக் நிறம், கறுப்பு. ட்ரெண்டுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்படுள்ள இந்தக் கறுப்பு நிற ஹேண்ட்பேக்கில் கோல்டன் ஜிப் ஜொலிக்கிறது. அணிந்துகொள்ள ஏதுவாக லாங் ஸ்ட்ராப், அதைக் கழற்றிவிட்டு க்ளட்ச் பேக்போல கையில் வைத்துக் கொள்ள அழகான கைப்பிடி என அசத்துகிறது. பிரவுன் குர்தா மற்றும் பிளாக் லெகிங்ஸுடன் ராயல் லுக் அளிக்கும் இதை, கல்ச்சுரல்ஸ் மற்றும் பார்ட்டிகளுக்கு கையோடு எடுத்துச் செல்லலாம்.

ரெட் குர்தா, யெல்லோ பேக்!

பிரின்டட் ரெட் குர்தாவுக்கும், மஞ்சள் லெகிங்ஸுக்கும் செம்ம மேட்சிங் இந்த ஹேண்ட்பேக். மொபைல், பர்ஸ், கூலர்ஸ், ஃபேஸ் வாஷ் போன்ற சிறிய பொருட்களை வைத்துக்கொள்ளலாம். ஸ்டைலிஷான இந்த சிங்கிள் ஷோல்டர் ஸ்ட்ராப்பை நடக்கும்போது சாதாரணமாகவும், ஸ்கூட்டரில் செல்லும்போது க்ராஸாகவும் அணியலாம். என்வலப் ஓப்பனிங், திறந்து மூட வசதியாக இருக்கும்.

காலங்காலமான காம்பினேஷன்!

காலங்காலமாக வரும் காம்பினேஷன்... கிரீன் அண்ட் ரெட். ரெட் ஸ்ட்ரைப்ஸ்கொண்ட கிரீன் குர்தாவுக்கும், ரெட் லெக்கிங்ஸுக்கும் டக்கராக இருக்கும் இந்த ரெட் ஹேண்ட்பேக்கின் ப்ளஸ், தினசரி கல்லூரிப் பயன்பாட்டுக்கு ஏற்ற அதிக ஸ்பேஸ். சிங்கிள் ஸ்ட்ராப்கொண்ட இதில் ஜிப்புடன் பக்கிள் ஓப்பனிங்கும் உள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களும் தேர்ந்தெடுக்கலாம்.

மல்டிகலர் குர்தாவுக்கு பீச் நிற பேக்!

வைஃபை பெண்களின் கைப்பை!

இந்த பீச் நிற ஹேண்ட்பேக் மல்டி கலர் மற்றும் டார்க் கலர் குர்தாக்களுக்குப் பொருத்தமாக இருக்கும். மீடியம் சைஸ் ஸ்ட்ராப் என்பதால், கையிலும் வைத்துக்கொள்ளலாம், ஷோல் டரிலும் அணிந்துகொள்ளலாம். கல்லூரிக்கு நோட்புக், வாட்டர் பாட்டில் போன்றவற்றை எடுத்துச் செல்லும் அளவுக்கு அதிக கொள்ளளவு, கல்ச்சுரல்ஸ் மற்றும் பார்ட்டிகளுக்கு எடுத்துச்செல்ல ஸ்டைலிஷான லுக் இதெல்லாம் சிறப்பு.

வயலட்டும் பிங்க்கும்!

வயலட் டிசைனர் குர்தாவுக்கும், பிங்க் நிற லெகிங்ஸுக்கும், இந்த குட்டி பிங்க் பேக் சூப்பர் காம்பினேஷன். க்ராஸாக அணியும்போது இன்னும் அட்டகாசமாக இருக்கும். அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சிங்கிள் ஸ்ட்ராப்பினைக்கொண்ட இந்த பிங்கி பேக், சிறிய பொருட்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கும். திறந்து மூட வசதியான இந்த பக்கிள் ஓப்பனிங் பேக், ஸ்கூட்டர் பெண்களுக்கு ஸ்மர்ட்டான சாய்ஸ்.

இந்த ஹேண்ட் பேக்ஸ் எல்லாம் 2,500 ரூபாய்க்குள் கிடைக்கும்னா சூப்பர்ல!

ஜெ. விக்னேஷ்,படங்கள்:எம். உசேன்

மாடல்: ஸ்ருதி, நன்றி: குளோபஸ், பாண்டி பஜார், தி.நகர்