அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மழை - வெள்ளம்... இசைப் புயல்!

மழை - வெள்ளம்... இசைப் புயல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மழை - வெள்ளம்... இசைப் புயல்!

மழை - வெள்ளம்... இசைப் புயல்!

மீபத்தில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ-வில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’ இசை நிகழ்ச்சி, மியூசிக்கல் ட்ரீட். கடந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரான மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்துக்காக இந்நிகழ்ச்சியை முன்னெடுத்த இசைப் புயல், பார்வையாளர்கள் அனைவரையும் சுழற்றி அடித்து, தன் இசையோடு இழுத்துச் சென்றார். அந்நிகழ்வின் ஹைலைட்ஸ் இங்கே...

மழை - வெள்ளம்... இசைப் புயல்!

• `மரியான்’ படத்தின் ‘நெஞ்சே எழு’ பாடலைப் பாடியபடியே, மேடையின் ஸ்பாட்-லைட்டில் தோன்றினார் ரஹ்மான். மக்களின் ஆரவாரம் அந்த முதல் நொடியில் இருந்தே அதிரத் தொடங்கியது.

• ‘எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே’, ‘தீ... தீ...’ என்று தன் ஹிட் நம்பர்களைப் பாடிய ரஹ்மான் அன்று வழக்கமான, தன் அமைதியான பிரசன்டேஷனை தள்ளிவைத்துவிட்டு உற்சாகத்தில் ஹெட்-பேங் செய்ய, ‘தலைவர் ஹெட்-பேங் எல்லாம் பண்றாருடா’ என ஆடியன்ஸுக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும். மேலும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு காஸ்ட்யூம் என்று அதகளப்படுத்தினார், மிஸ்டர் அமைதி!

மழை - வெள்ளம்... இசைப் புயல்!
மழை - வெள்ளம்... இசைப் புயல்!

• `‘இவங்க அம்மா 1989-ல் எனக்கு இந்தப் பாட்டை பாடிக்கொடுத்தாங்க. இப்போ மகள் பாடுறது எனக்கு ரொம்ப சந்தோஷம்’’ என்று ஸ்வேதா மோகனை, ரஹ்மான் மேடைக்கு அழைக்க, `‘நேற்று இல்லாத மாற்றம்’’ பாடி சொக்கவைத்தார் ஸ்வேதா.

• `‘ஒரு புது சிங்கரை உங்களுக்கு அறிமுகப் படுத்தப் போறேன்...’’ என்று ரஹ்மான் சொல்ல,

மழை - வெள்ளம்... இசைப் புயல்!

பார்வையாளர்கள் புருவங்களை உயர்த்தியபடி காத்திருந்தனர். தன் மகன் அமீனை மேடைக்கு அழைத்து, `‘ஹாய் சொல்லு எல்லோருக்கும்’’ என்றவர், `‘அவருக்கு ஸ்டேஜ் ஃபியர் போகத்தான் இந்த அறிமுகம்’’ என்றபோது, கூட்டத்தில் ரசிப்பும் சிரிப்பும்.

• மேடை நடுவில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஹரிசரண், கார்த்திக் ஆகியோரை சோபாவில் அமரவைத்த ஏ.ஆர்.ஆர், `‘நான் உங்களை இன்டர்வியூ பண்ணப்போறேன். உங்களோட முதல் காதல் யாருன்னு ஒவ்வொருத்தரா சொல்லுங்க’’ என்றபோது, நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடிப்போக,

• `‘என்னோட முதல் காதல் உங்க இசைதான். அதில் பாடணும் என்பதுதான் என் ஆசையா இருந்தது’’ என கார்த்திக் சொல்ல, சிரித்துவிட்டார் ஏ.ஆர்.ஆர். அனைவரும் இணைந்து ‘பெண்ணல்ல பெண்ணல்ல’ பாடலை ஹார்மோனைஸ் செய்தது, அவ்வளவு அழகு!

இசையில் நனைந்து கரைந்தது இரவு!

மு.சித்தார்த்  படங்கள்: மா.பி.சித்தார்த்