
அழகுசெய்து வாழ்வை அழகாக்கிடலாம்!
‘‘இன்று அழகுக்கு பெண்கள் தரும் முக்கியத்துவம், அழகுக்கலை நிபுணர்களின் வாய்ப்புகளைப் பிரகாசமாக்குகிறது. ஒவ்வொரு பெண்ணுமே தன் புரொஃபஷனில் தனித்தன்மையுடன் இருக்கவும், தன்னம்பிக்கை பெறவும் பார்லர்களை நாடுகின்றனர். பொருளாதார நிலையைப் பொறுத்து 500 ரூபாயில் இருந்து பல ஆயிரங்கள் வரை மாதந்தோறும் பார்லருக்கு என ஒதுக்குகிறவர்கள் பலர். அதுதான், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் புதிதாக 500 பேர் அழகுக்கலை நிபுணராகப் பயிற்சி முடித்துக் களம் இறங்கக் காரணம்!’’

- பியூட்டி பார்லருக்கான பிரகாசமான வாய்ப்புகள் பற்றி சிறப்பான அறிமுகம் தந்தார், இத்துறையில் 30 ஆண்டு அனுபவம்கொண்டவரும்... சென்னை, மயிலாப்பூரில் உள்ள மகா பியூட்டி பார்லர் மற்றும் பயிற்சி நிலையத்தின் உரிமையாளருமான மகாலட்சுமி கமலக்கண்ணன்.
‘‘அழகுக்கலை பயிற்சி வகுப்புகளைப் பொறுத்தவரை பொதுவாக ஆயிரங்களில் ஆரம்பித்து, அட்வான்ஸ்டு வகுப்புகளை லட்சங்கள் வரைகூட கட்டணம் செலுத்திப் பயிலலாம். பயிற்சிக்குச் செலவழித்த பணத்துக்கு நிச்சயமான தொழில் உத்தரவாதம் உண்டு என்பது இந்தத் துறையின் சிறப்பு. பெரிதாகக் கல்வித் தகுதி இல்லாத பெண்களும், இந்தப் பயிற்சியை நம்பிக்கையுடன் முடிக்கலாம். அடிப்படை பார்லர் சர்வீஸ்களில் ஆரம்பித்து ஹேர் டிரெஸ்ஸிங், டாட்டூ, பிரைடல் மேக்கப், சலூன் மேக்கப், ஹேர் ட்ரீட்மென்ட், அரோமா தெரபி என்று பல துறைகளின் கீழ் சிறப்புப் பயிற்சியும் பெறலாம். அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிலையங்களில் மட்டுமே பயிற்சி பெறவும். பயிற்சியை முடித்த பின், சொந்தமாக பார்லர் தொடங்கலாம். மேலும், பெரிய பிராண்ட் அழகு நிலையங்கள் முதல், அயல்நாட்டில் பியூட்டி பார்லர்களில் வேலை, சொகுசு கப்பல்களில் உள்ள பியூட்டி ஸ்பாக்களில் பணியாற்றும் வாய்ப்புகள் வரை இதில் விரிந்துகிடக்கின்றன’’ என்று வியப்பும், நம்பிக்கையும் ஏற்படுத்திய விவரங்கள் தந்தார் மகா.
பெண்கள் அழகுக்கலையில் பயிற்சி பெறவும், அதில் தொழில், பணிவாய்ப்புகள் பெறுவதற்கான வழிகாட்டல்கள் குறித்தும், கீழ்கண்ட தலைப்புகளில் பேசுகிறார், மகா.
அழகுபடுத்துவதை ஏன் கலை என்கிறோம்?
அழகுக்கலையில் தொழில்ரீதியான பயிற்சி அவசியம் என்பது ஏன்?
அழகுக்கலைப் பயிற்சி பெறத் தகுதி என்ன?
அழகுக்கலையில் என்ன பயிற்சி பெறலாம்?
கோர்ஸ் முடித்து சர்டிஃபிகேட் பெறுவதன் பயன்கள் என்ன?
அழகு நிபுணர்களுக்கு அயல் நாட்டு வேலை வாய்ப்புகள்
உங்கள் வாழ்வினை அனுசரித்தும் அழகு கலை நிபுணராகலாம்!
‘வழிகாட்டும் ஒலி’யில் மகாவின் வழிகாட்டுதல்களைப் பெற 044 - 66802912* என்ற எண்ணில் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை அழையுங்கள்! * சாதாரண கட்டணம்
ச.சந்திரமௌலி