அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

‘‘மனைவியுடன் சண்டை போடுங்கள்!’’

‘‘மனைவியுடன்  சண்டை போடுங்கள்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘மனைவியுடன் சண்டை போடுங்கள்!’’

- இது மாதவன் வம்புபேட்டி

‘‘ஏ சண்டக்காரா

குண்டு முழியில ரெண்டு உயிரைத் தேடிப்பாயுது

குத்துச்சண்டை இத்தோட நிப்பாட்டு போதும்

முத்தச்சண்டை என்னோட நீ போடவேணும்

தேடிக் கட்டிக்கப்போறேன்

தாவி ஒட்டிக்கப்போறேன்

தாலி கட்டிக்கப்போறேன் ஆமா...’’


மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் சுதா கோங்கரா பிரசாத் இயக்கத்தில் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘இறுதிச்சுற்று’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த படத்தின் பாடல்கள் வெளியீடு முடிந்திருக்க, ‘ஏ சண்டைக்காரா’ பாடல் யூடியூப், எஃப்எம், காலர் ட்யூன் என ஹிட் அடிக்க, இந்தப் பாடலின் வீடியோ பதிவும் சமீபத்தில் வெளியாகி சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறது. 40 ப்ளஸிலும் ரசிகைகள் மனதில் கிரேஸ் கூடிக்கொண்டே இருக்கும் மாதவனுக்கும் புதுமுக நாயகி ரித்திகா சிங்குக்கும் கெமிஸ்ட்ரி அள்ள, ஒரு ஸ்வீட் ஸ்பாட்டில் இந்த நிழல் ஜோடியைச் சந்தித்தோம்.

‘‘மனைவியுடன்  சண்டை போடுங்கள்!’’

டி.வி சீரியல் நடிகராகப் பயணத்தைத் தொடங்கி, ‘அலைபாயுதே’ என்ட்ரியில் தமிழ் சினிமாவின் டியர்மோஸ்ட் டார்லிங் ஹீரோவாகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர்,  வசனகர்த்தா... இப்போது, ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலமாக தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கும் மேடியின் பேச்சில் பெண்களுக்கான மரியாதை மிளிர, இன்னும் ரசிக்கவைக்கிறார்.

‘‘நல்லா ஞாபகம் இருக்கு. ‘அலைபாயுதே’ ரிலீஸான சமயத்துல ஒரு காலேஜ் பொண்ணு, ‘மேடியைக் கல்யாணம் பண்ணிக்கணும்’னு சொல்லி சென்னைக்கு வந்துட்டாங்க. ஒரு நடிகனா இப்படி டைஹார்டு ஃபேன்ஸை சம்பாதிச்சது எனக்கு சந்தோஷமா இருந்தாலும், ‘மேடி என்னை ஏத்துப்பார்’னு வந்த அந்தப் பெண்ணோட பிரியமும் காயப்படாம, பக்குவமா பேசி, அவங்களை சந்தோஷமா திருப்பி அனுப்பி வெச்சேன். அதில் இருந்து இன்றுவரை, என் பெண் ரசிகைகளுக்கான மரியாதை எப்போதும் என் நெஞ்சில் உண்டு.

‘மேடி மேடி’னு அப்போ தமிழ்நாட்டில் என்னைப் பிடிக்காத பெண்களே இல்லை எனும் அளவுக்கு எனக்கு கிரேஸ் இருந்தப்போ, ‘பொதுவா ரசிகைகள் திருமணமான ஹீரோவை ஏத்துக்க மாட்டாங்க. அதனால உங்களுக்குக் கல்யாணம் ஆனதை எங்கேயும் குறிப்பிட்டுப் பேச வேண்டாம்’னு சிலர் எனக்கு அட்வைஸ் செய்தாங்க. ஆனாலும், ஒரு பத்திரிகைப் பேட்டியில, `நான் ஒரு மேரீடு மேன்’னு சொன்னேன். போலியில்லாமல் உண்மையா என் ரசிகைகள் முன்னால நிக்கிறதையும், நான் அவங்களுக்குத் தர்ற மரியாதையாதான் நினைச்சேன். கூடவே, அது என் மனைவிக்கும் நான் தரவேண்டிய மரியாதை. சொல்லப்போனா, அதுக்கு அப்புறம் என்னோட ரசிகைகள் இன்னும் கூடிப்போனாங்க. இப்படி ஒரு நடிகனை, அவனோட மேரிட்டல் ஸ்டேட்டஸையும் தாண்டி ரசிகைகள் ஏத்துக்கிற இந்தச் சூழல், நடிகைகளுக்கும் அமையணும் என்பது என் விருப்பம்’’ - ‘டிரீம் பாய்’ஆக ரசித்த மாதவனின் பொறுப்பான வார்த்தைகள் பேச்சை சுவாரஸ்யமாக்கின.

படத்தின் புதுமுக நாயகி ரித்திகா சிங், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஸ்போர்ட்ஸ் டிராமா ஸ்டைல் கதைக்களம்கொண்ட ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு, கிக் பாக்ஸரான அவர் சரியான தேர்வுதானே?! பீகார் பெண்ணான இவர், ஆங்கிலத்தில் நம்முடன் பேசியதன் சுருக்கம்...

‘‘நான் ஒரு கிக் பாக்ஸர். கராத்தே வீராங்கனையும்கூட. இந்தப் படத்தில் நான் குத்துச்சண்டை வீராங்கனையா நடித்திருக் கிறேன். கிக் பாக்ஸிங், குத்துச்சண்டை இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. கிக் பாக்ஸிங்குக்கு அப்படியே நேர்மாறா, அதிக வன்மம் கொண்டது குத்துச்சண்டை. நடிப்புக்காகப் பழகும்போதுகூட எனக்கு அது கடினமாவே இருந்தது. ஒரு படப்பிடிப்புக் காட்சியில், மாதவனை நான் மூக்கில் ரத்தம் வரக் குத்திய அளவுக்கு சின்சியரா நடித் திருக்கிறேன்’’ என்று குறும்பாகச் சிரித்தவர், இந்தப் படத்துக்கு என்னைத் தேர்ந்தெடுத்த மேடி சாருக்கு தேங்க்ஸ், அந்தக் குத்துக்கு ஸாரி’’ என்கிறார் சின்னச் சிரிப்பு பூக்க.

‘‘மனைவியுடன்  சண்டை போடுங்கள்!’’

‘‘எனக்கு 45 வயசாகுது. இப்பவும் 15 வயசுப் பொண்ணுங்ககூட ‘மேடி மை ஸ்வீட் ஹார்ட்’னு சொல்லும்போது, சந்தோஷத்தோட இப்போ கொஞ்சம் சர்ப்ரைஸும் சேர்ந்துக்குது. என்னைப் பற்றி கிசுகிசுக்கள் வர்றதே இல்லையேனு என் மனைவி உட்பட பலரும் கேட்பாங்க. படங்களில் பிளே பாய், ட்ரீம் பாய்னு கலக்கியிருந்தாலும், நான் ஒரு பொறுப்பான ஃபேமிலி மேன், அன்பான கணவன், அக்கறையான அப்பா. அதானாலேயே கிசுகிசுக்களில் மாட்ட நேரம் இல்லாமப் போனதுபோல!’’ என்று தன் ஃபேவரைட் சிரிப்பை உதிர்த்த மாதவன்,

‘‘எல்லா வீடுகளிலும்போலவே எங்க வீட்டுலயும் நானும் என் மனைவி சரிதாவும் செம சண்டை போடுவோம். ‘டைவர்ஸ்தான்’ எனும் அளவுக்கு எகிறுவோம். ஆனா, எங்களுக்கு இடையில் இருக்கிற அளவுகடந்த காதலும் நம்பிக்கையும், எந்தச் சண்டையையும் புஸ்ஸுனு போகவெச்சிடும். லவ் இருந்தா, லைஃப்ல எவ்வளவு தூரம் வேணும்னாலும் போகலாம்’’ - பாஸிட்டிவ் எனர்ஜி கொடுத்தவர்,

‘‘பொதுவா, பெண்களை இழிவுபடுத்தும் பாடல்களுக்கு நான் எதிரானவன். என்னோட படங்களிலும் அதைத் தவிர்த்துடுவேன். பெண்கள் நடத்தின பள்ளியில் படிச்சவன் நான். என் அம்மா, தங்கை, மனைவி தோழிகள், ரசிகைகள்னு என் உலகப் பெண்களுக்கு எப்போதும் என் மனசுல தனி மரியாதை உண்டு. நடிகனா காசு சம்பாதிக்கிறதைவிட, மரியாதையைச் சம்பாதிக்கணும். அதான் முக்கியம்!’’

- நிஜத்திலும் பெண்களுக்கு நல்ல ‘சிநேகிதன்’... மாதவன்!

பொன்.விமலா, படங்கள்: ஆ.முத்துக்குமார்