
பிப்ரவரி 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்ஜோதிடம்
உழைப்பு உயர்த்தி வைக்கும்!

மேஷம்: ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு கலங்காத வர்களே! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், உங்க ளின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைப் பீர்கள். தங்க ஆபரணம் வாங்கு வீர்கள். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும்.என்றாலும் சனி, ராகுவின் போக்கு சரியில்லாததால், உடல்நலக் கோளாறு வந்து செல்லும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு மிகுந்த பாராட்டு கிடைக்கும்.
தோற்றப் பொலிவு கூடும்!
மிதுனம்: மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்பவர்களே! புதனும், சனியும் சாதகமாக இருப்ப தால்...

உங்களின் மனவலிமை அதி கரிக்கும். தோற்றப் பொலிவு கூடும்.5-ல் செவ்வாயும், 3-ல் குருவும் தொடர்வதால், அவ்வப்போது உங்களுக்கு குழப்பம், தடு மாற்றம் வந்து செல்லும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளின் சொந்த விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.
அலட்சியம் தவிருங்கள்!

சிம்மம்: நம்பிக்கையுடன் போராடி முன் னேற்றம் பெறு பவர்களே! யோகாதிபதி செவ்வாய் 3-ம்வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால், சொத்து வாங்குவது, விற் பது லாபகரமாக முடியும். 13-ம் தேதி முதல் 6-ல் சுக்கிரனும், 7-ல் சூரியனும் நுழைவதால், உடல் உபாதை வந்து செல்லும். ராசியிலேயே ராகுவும், குருவும் நிற்பதால், உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.
கௌரவம்... உச்சத்தில்!
ரிஷபம்: நினைத்ததை முடிக்கும் மனோசக்தி கொண்டவர்களே! புதனும், செவ்வாயும் சாதகமாக

இருப்பதால்... உங்களின் புகழ், கௌரவம் உயரும். அரசால் அனு கூலம் உண்டு. குரு, ராகு, கேது மற்றும் சனி உங்களுக்கு சாதகமாக இல்லாததால்... முன்கோபம், டென்ஷன், உடல் அசதி ஏற்படும். யாருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும்.
எதிர்பார்த்த பணம் வரும்!

கடகம்: `ஒற்று மையே உயர்வு தரும்’ என்பதை உணர்ந்தவர் களே! குரு வலு வாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 12-ம் தேதி வரை சுக்கிரன் 6-ம் வீட்டிலும் சூரியன் 7-ம் வீட்டிலும் நிற்பதால்... மன இறுக்கம், வீண் டென்ஷன் வந்து செல்லும். சனி 5-ல் நிற்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்றுக்கொள்வார்கள்..௦.
கேட்டது கிடைக்கும்!
கன்னி: தன் உழைப்பில் மற்ற வர்களை வாழ வைப்பவர்களே! சனி 3-ம் வீட்டிலும்,13-ம் தேதி

முதல்சூரியன் 6-ம் வீட்டிலும் அமர்வதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம்கிடைக்கும். 2-ல் செவ்வாய்நிற்பதால்... சகோதர வகையில்சங்கடம், வீட்டில் வீண் விவாதங்கள் வந்து போகும். குரு 12-ல் மறைந்திருப்பதால், சுபச் செலவு கள் அதிகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும்.
அறிவுக்கூர்மை வெளிப்படும்!

துலாம்: எதிலும் புதுமையை விரும்புபவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடு களில் செல்வதால், நீங்கள் புத்திசாலித் தனமாக செயல்படுவீர்கள். புது வேலை தேடுபவர்களுக்கு, நல்ல வருமானத்துடன் கூடிய வேலை அமையும். கேது 5-ல் தொடர்வதுடன், 13-ம் தேதி முதல் சூரியனும் 5-ல் நுழைவதால்... குழப்பங்கள், கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் புதிய சலுகை களை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கே சில ஆலோசனைகள் தருவீர்கள்.
வெளியூரிலிருந்து நல்ல செய்தி!
தனுசு: விருப்பு வெறுப்பு இல் லாமல் எதையும் செய்பவர்களே! சுக் கிரன் சாதகமாக இருப்பதால், அழகு

கூடும். வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த எண்ணுவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராகுவும், சனியும் சாதகமாக இல்லாததால், கவனக்குறைவைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரி உங்களிடம் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்.
இல்லத்தில் இன்பமயம்!

கும்பம்: ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பவர்களே! ராசிக்குள் கேது நிற்பதுடன், 13-ம்தேதி முதல் சூரியனும்அமர்வதால், பயன்படுத்த முடியாமல் போன நல்ல வாய்ப்புகளை நினைத்து வருந்துவீர்கள். வாழ்க்கைத் துணைவர் அவ்வப் போது எரிச்சலடைவார். குரு சாதகமாக இருப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல வரவு உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலை களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
சூரியனால் நற்பலன்!

விருச்சிகம்: மனிதநேயம் மிக்கவர்களே! சூரியன் சாதக மான வீடுகளில் செல்வதால்... உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாயின் போக்கு சரியில்லாததால், வீண் டென்ஷன் வந்து செல்லும். ஜென்மச் சனி தொடர்வதால், சிலரின் தவறான போக்கை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் நீங்கள் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.
ஆரோக்கிய குறைவு விலகும்!
மகரம்: தொலை நோக்குச் சிந்தனை உள்ளவர்களே! 13-ம் தேதி முதல் சூரியன் உங்கள் ராசியை

விட்டுவிலகுவதால், முன் கோபம்,உடல் உபாதை விலகும். யோகாதிபதி சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால்,குடும்ப வருமானம் ஓரளவுக்குஉயரும். ராகுவும், கேதுவும்சாதகமாக இல்லாததால், நெருப்பு,மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் மறைமுகப் பிரச்னைகள் வந்து போகும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்!

மீனம்: பிறர் பொருட்களுக்கு ஆசைப்படாத வர்களே! ராகு 6-ம்வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பூர்வீகச் சொத்தை அழகுபடுத்துவீர்கள். புண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். 6-ல்ராசிநாதன் குரு மறைந்திருப்ப தாலும், 8-ல் செவ்வாய் நிற்பதாலும் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் மிகவும் நம்பியவர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்பிருக் கிறது. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத் தில் உங்களுக்கு அதிருப்தி உண்டாகும்.