மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200ஓவியங்கள்:ராமமூர்த்தி

`ஆஹா’ ஆசிரியர்!

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒரு நாள் மாலை பள்ளி விட்டு வந்ததும் என் மகன் ‘’அம்மா, நாளைக்கு உன்னை எங்க மிஸ் கூட்டிட்டு வரச்

அனுபவங்கள் பேசுகின்றன!

சொன்னாங்க” என்றான். காரணம் கேட்டதற்கு ``தெரியலை’’ என்று சொன்னான். `என்னவாக இருக்கும்?’ என்று அன்று இரவு முழுவதும் ஒரே குழப்பம். மறுநாள் காலையில் மகனை அனுப்பிவிட்டு, சிறிது நேரத்துக்குப் பிறகு, நானும் பள்ளிக்குச் சென்றேன். கனிவோடு வரவேற்ற அந்த மிஸ், ‘’உங்க பையன் நல்லா படிக்கிறான், கையெழுத்து அழகா வந்திடுச்சு, அதோட  ஓவியப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கான்” என்று கூறியதோடு, வகுப்பில் உள்ள மாணவர்களைப் பார்த்து, ‘’எல்லோரும் கைதட்டுங்க!” என்று உற்சாகப்படுத்திய பிறகு, ‘’நீங்களும் இதே போல உங்க பெற்றோர்களை கௌரவப்படுத்தணும் புரிஞ்சுதா!” என்றார். ‘’உங்க வேலைகளுக்கு இடையே நான் கூப்பிட்டதும் வந்ததற்கு நன்றி” என என்னிடம் சொன்னார். இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை!

இந்த ஆசிரியரின் சூப்பர் அப்ரோச்சை மற்றவர்களும் பின்பற்றலாமே..!

- எம்.ராஜம், மதுரை

விட்டொழியுங்கள்... வீண் அரட்டையை!

அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் என் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்கு பேசிய பிரபலங்கள்... தங்கள் இளமைக்காலம், வளர்ந்த பிறகு தாங்கள் தேர்ந்தெடுத்த பணி, அதில் வெற்றியடைய செய்த முயற்சிகள் என தங்கள் அனுபவங்களை சுவைபட கூறிக்கொண்டு இருந்தார்கள். மாணவர்களும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆனால், என் அருகில் அமர்ந்திருந்த பெற்றோர்கள் பலர் அவர்கள் பேச்சைக் கேட்காமல்... மாமியார் - நாத்தனார் பிரச்னை, புடவை விசாரிப்பு என பேசி, மற்றவர்களையும் மேடைப்பேச்சை ரசிக்கவிடாமல் செய்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான், அவர்களை பேசாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

வீண் அரட்டை அடிப்பவர்கள் வீட்டிலேயே அதைச் செய்யலாமே? ஏன் பொது இடங்களுக்கு வந்து மற்றவர்களையும் சங்கடப்படுத்த வேண்டும்? இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்!

- ஏ.உமா ராணி, தருமபுரி

பக்தர்களுக்கு பணிவான வேண்டுகோள்

அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் நாங்கள் கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். அது மிகவும் உள்ளடங்கிய கிராமம் என்பதால், கோயில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. நாங்கள் எப்போது போனாலும் கோயிலுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் ஒரு பெண்மணி வந்து கோயிலைக் கூட்டி பெருக்கி சுத்தம் செய்வார். நாங்களும் அவருக்குப் பணம் கொடுத்துவிட்டு வருவோம்.

``பெரிய, புகழ் பெற்ற கோயில்களில் பணத்தைக் கொண்டு கொட்டும் பக்தர்கள், இது போன்ற பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயில்களையும் கவனித்தால், கோயில்களும் புதுப் பொலிவு பெறும்; பக்தர்களுக்கும் கோடி புண்ணியம்’’ என்று அந்தப் பெண்மணி கூறுவார்.

பக்தர்களே... நீங்கள் இதுபோன்ற கோயில்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே..!

- கீதா கார்த்திகேயன், வேலூர்

எங்க நிலைமையை கொஞ்சம் யோசிங்க!

அனுபவங்கள் பேசுகின்றன!

வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பல்வேறு விஷயங்களை இரு குடும்பத்தினரும் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது... உறவினர், தன் மனைவியிடம், ‘’எல்லாருக்கும் ஜூஸ் போட்டுக் கொண்டு வா!” என்று அன்புக் கட்டளையிட்டார். சமையலறைக்குச் சென்ற மனைவி, கதவோரம் நின்றுகொண்டு கணவரை சைகை மூலம் அழைத்தார். எதேச்சையாக இதை கவனித்துவிட்ட நான், ‘’எங்களுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது. ஜூஸ் வேண்டாமே!” என்றேன். அவர் மனைவியின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பின் வெளிச்சம். ‘’சூடா எதாவது நிச்சயம் சாப்பிடணும். டீ தருகிறேன்” என்றார். நாங்களும் சந்தோஷமாக வாங்கிப் பருகினோம்.

குடும்பத் தலைவர்களே... விருந்தோம்பல் உயர்ந்த பண்புதான்; ஆனால், விருந்தினர்களுக்குத் தருவதற்கு வீட்டில் என்ன தயாராக இருக்கிறது என்று தெரிந்துகொண்டு உபசரிக்கலாமே! இல்லாததைக் கொண்டுவரச் சொல்லி, இல்லத்தரசியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்... ப்ளீஸ்!

- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்