அவள் 16
Published:Updated:

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

உல்லாசப் பயணம்

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. `சுற்றுலாப் பயணமாக எங்கே செல்லலாம்?' என்ற கேள்வியும், அதற்கான பிளான்களும் ஒவ்வொரு வீட்டிலும் நடந்துகொண்டிருக்கும். உங்கள் கோடை சுற்றுலாவுக்கான கம்ப்ளீட் கைடு இதோ... தமிழ்நாட்டில் உள்ள முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்களின் விவரங்கள்... ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக!

சென்னைப்பட்டினம்!

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

செயின்ட் ஜார்ஜ் கோட்டை: சென்னையின் பாரம்பர்யமிக்க கௌரவ சின்னம். தலைமைச் செயலகம் இங்குதான் இயங்குகிறது. உள்ளே சர்ச், அருங்காட்சியகம் உள்ளன. அருங்காட்சியகத்தில் 10 பிரிவுகளாக தொன்மை வாய்ந்த வாள், பிஸ்டல், ரைஃபிள் என காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளி விடுமுறை.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

மெரினா பீச்: சென்னையின் அடையாளம். உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. கடல், மணல், ராட்டினம், குதிரை சவாரி, நீச்சல்குளம் என குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பும் வெகேஷன் ஸ்பாட். அருகில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை அதிகாலை மற்றும் மாலையில் கண்டுகளிக்கலாம்.  

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

பிர்லா பிளானடோரியம்: உள்ளரங்கில் ஒரு பிரபஞ்சத்தை கொண்டுவரும் அரிய கோளரங்கம் இது. பெரியார் அறிவியல் கண்காட்சியகத்தின் ஒரு அங்கமான இது, குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் அசரவைக்கும். அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் திறந்திருக்கும்.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

கிண்டி தேசிய பூங்கா: ஹார்ட் ஆஃப் த சிட்டியில் உள்ள வன விலங்கு பூங்கா. நேஷனல் பார்க், குழந்தைகள் பூங்கா, ஸ்நேக் பார்க் அனைத்தும் இதனுள் அடக்கம். செவ்வாய் விடுமுறை.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

மெட்ராஸ் மியூசியம்: இந்தியாவில் உள்ள இரண்டாவது தொன்மையான அருங் காட்சியகம். தொல்பொருட்கள் மற்றும் கலாசார சான்றுகள் நிறைந்தது. வெள்ளி விடுமுறை.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

வள்ளுவர் கோட்டம்: திருவள்ளுவரின் நினைவாக, 1976-ல் அமைக்கப்பட்ட அழகுக் கட்டடம். இங்குள்ள 39 அடி உயர தேர், இதன் மகுடம். வெள்ளி விடுமுறை.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

மாமல்லபுரம்: பல்லவர்கள் 3-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டுவரை ஆண்ட இடம். பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் இதன் சிறப்பு. கடற்கரை கோயில், பஞ்ச ரத கோயில், புலி குகை, முட்டுக்காடு படகு சவாரி, முதலைகள் சரணாலயம் என இங்கும், சற்று தொலைவிலும் காண வேண்டிய அழகு... நிறைய!

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

வண்டலூர் உயிரியல் பூங்கா: 1,490 ஏக்கரில் விரிந்துள்ளது அறிஞர் அண்ணா மிருகக்காட்சி பூங்கா. பெங்கால் வெள்ளை புலி, கரடிகள், சிங்கம், குரங்குகள், யானை என பல வன விலங்குகளும் பாதுகாக்கப்படுவதோடு அவை சுதந்திரமாக இருக்கும். சஃபாரி பயணம் மூலமாகவோ, நடந்து சென்றோ நாம் ரசிக்கலாம். செவ்வாய் விடுமுறை.

இனி, பிற மாவட்டங்களின் ரவுண்ட் அப் பார்ப்போம்...

திருநெல்வேலி மாவட்ட சுற்றுலாத் தலங்களை ரசிக்க, இரண்டு நாட்கள் தேவைப்படும்.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

குற்றாலம்: ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீஸன். குற்றாலத்தில் மெயின் அருவி தவிர பழைய குற்றால அருவி, ஐந்தருவி, பாலருவி, நெய்யருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி என பல அருவிகளும், சுற்றி ஆறுகளும் ஓடுகின்றன. சித்தர்கள் சிவபெருமானின் நடனக்காட்சியை முழுக்க முழுக்க மூலிகைகளால் வரைந்துள்ள சித்திரசபையும் உள்ளது.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

மாவட்ட அறிவியல் மையம்: கடல் பற்றிய மூன்று நிரந்தரக்காட்சி சாலைகள், சிறிய கோளரங்கம், டெலஸ்கோப், நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, நாடகக்காட்சி என 6 ஏக்கரில் அறிவியல் பூங்கா அமைந்துள்ள இடம் இது.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

அகஸ்தியர் அருவி: பாபநாசம் ஆற்றுக்கு அருகில் மலையடிவாரத்தில் உள்ளது. வருடத்தின் 365 நாட்களும் தண்ணீர் கொட்டும் அருவி இது.

தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்க, இரண்டு நாட்கள் பிளான் செய்துகொள்ளலாம்.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

எட்டையபுரம், பாரதியார் பிறந்த வீடு: பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், கைப்பட எழுதிய கடிதங்கள், கையெழுத்து ஆகியவை பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அருகில் பாரதியார் மணிமண்டபமும், சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் மணிமண்டபமும் உள்ளன. மேலும் இல்லத்துக்கு அருகில் பாரதி கவிதை எழுதிய தெப்பக்குளமும், தினமும் வணங்கிய காளிக்கோயிலும் உள்ளது.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை: ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வரிசெலுத்த மறுத்து ஆங்கிலேயரை எதிர்த்து வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை.  அருகிலேயே கட்டபொம்மன் வணங்கிய வீரஜக்கம்மாதேவி கோயிலும், பின்புறம் கட்டபொம்மனுடன் போர்புரிந்து இறந்த 7 வெள்ளையர்களின் கல்லறையும் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இரண்டு நாட்களில் முழுமையாகப் பார்த்துவிடலாம்.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

குமரி கடற்கரை: ஆசியா கண்டத்துக்கு, இந்தியாவுக்கு, தமிழகத்துக்கு முடிவு எல்லை... குமரி. சூரியன் உதயம், அஸ்தமனம்... இங்கு கண்கொள்ளா காட்சி! வங்கக்கடல், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடல்கள் சங்கமிக்கும் இடம். கடலுக்குள் உள்ள விவேகானந்தர் பாறையும், 133 அடி திருவள்ளுவர் சிலையும் குமரியின் சிறப்பு. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை படகு போக்குவரத்து உண்டு. கரையில் பகவதி அம்மன் கோயில், காந்திமண்டபம், காமராஜர் மண்டபம், குமரி கடல் அழகைப் பார்ப்பதற்கு வசதியாக காட்சிக்கோபுரம், குமரி வரலாற்றுக்கூடம், அரசு அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

மாத்தூர் தொட்டிப்பாலம்: குமரி மாவட்டம் திருவட்டாறு அருகில் உள்ள மாத்தூரில் உள்ளது தொட்டிப்பாலம். 115 அடி உயரமும், ஒரு கி.மீ நீளமும் கொண்டது. ஆசியாவின் மிக நீளமான பாலம். பாலத்தின் அருகில் சிறுவர் பூங்காவும் உள்ளது.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

பத்மநாதபுரம் அரண்மனை: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமையிடமாக இருந்துள் ளது பத்மநாதபுரம். திருவிதாங்கூரை ஆட்சி செய்த மன்னர்களின் பழமையான அரண்மனை இது. 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள பிரமாண்ட அரண்மனையில் போர்த்தள வாடங்கள், பழமையான பொருட்கள் உள்ளன. தற்காலத்தில் பார்க்கும்போது ஆச்சர்யப்பட வைக்கும் ஆதிகால அரண்மனை.

ஹாலிடே டூர்... எங்கே போகலாம்?

சொத்தவிளை பீச்: சொத்தவிளை என்னும் இடத்தில் உள்ளது இந்த கடற்கரை. ஆழம் இல்லாத தண்ணீரும், உயரமான மணல் குன்று களையும் இங்கு மட்டுமே பார்க்க முடியும்.

அடுத்த இதழில் தொடரும்...

ச.சந்திரமௌலி, இ.கார்த்திகேயன் படங்கள்:எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார், பா.காளிமுத்து, கே.வி.எஸ்.சக்திவேல்