அவள் 16
Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
News
கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

வருங்கால கலெக்டரம்மா!

மயம், கேப்டன், ஜீ தமிழ், சன் டி.வி, ராஜ் டி.வி என ஆங்கராகவும் சீரியல் நடிகையாகவும் கலக்கிக்கொண்டிருக்கும் பிரியங்கா, கலெக்டர் ஆவதற்குப் படித்துக்கொண்டிருக்கிறார்!

கேபிள் கலாட்டா!

‘‘மதுரைப் பொண்ணு நான். டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட். பி.எஸ்ஸி., ஃபிசிக்ஸ் முதல் வருஷம் படிச்சிட்டு இருந்தப்போ, லோக்கல் சேனல்ல ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். பாரதிராஜா சாரோட ‘அன்னக்கொடி’ பட ஷூட்டிங்கை பார்க்கப்போய், அதில் எனக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் சார். அப்புறம் மதுரையில இருந்துட்டே சென்னையில இருக்கிற சேனல்ஸுக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தேன். இமயம், கேப்டன்னு வாய்ப்பு கிடைக்க, அப்போ நான் காலேஜ் படிச்சுட்டு இருந்ததால சனிக்கிழமை சென்னை வந்து நாள் முழுக்க ஷூட் முடிச்சுட்டு, சண்டே மதுரைக்கு பஸ் ஏறிடுவேன். படிப்பு முடிஞ்சதும், சென்னைப் பயணம்.

ஜீ தமிழ் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, சன் டி.வி ‘அழகி’, விஜய் டி.வி ‘சரவணன் மீனாட்சி’ சீரியல்னு சேனல் ஏரியாவுக்குள்ள வந்தவ, இப்போ சன் டி.வி-யில ‘வம்சம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘பைரவி’, ராஜ் டி.வி-யில ஒரு சீரியல்னு பிஸியா நடிச்சிட்டு இருக்கேன். ‘வம்சம்’ சீரியல் ‘ஜோதிகா’ கேரக்டர்தான், எனக்கான அடையாளத்தை வாங்கிக் கொடுத்துச்சு. ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி `குரூப் 1' எக்ஸாமுக்கு சீரியஸா படிச்சிட்டு இருக்கேன். எப்பவும் புக்கும் கையுமாதான் இருப்பேன்.''

பெஸ்ட் ஆஃப் லக் பிரியங்கா!

‘குட்டி’ கோபி... ‘பாப்பாடி’ லோகேஷ்!

தித்யா சேனலில் ‘மொக்கை ஆஃப் த டே’ நிகழ்ச்சியில் கலக்கி வரும் காமெடி காம்போ, ‘குட்டி’ கோபி மற்றும் ‘பாப்பாடி’ லோகேஷ்.

கேபிள் கலாட்டா!

‘‘மேல்மருவத்தூரை அடுத்த அச்சரப்பாக்கம்தான் சொந்த ஊர்’’ என்று ஆரம்பித்த கோபி, ‘‘எங்கப்பா ஒரு தெருக்கூத்து கலைஞர். நான் தேசிய அளவில் மைம் போட்டியில் வெற்றி பெற்றிருக்கேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று தெருக்கூத்து கத்துக்கொடுக்கிறேன். கேம் ஷோ, காமெடி கதைகளுக்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதிட்டு இருக்கேன்’’ என்று சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

‘‘எனக்கு சொந்த ஊர், சித்தூர்’’ எனும் லோகேஷ், ‘‘நானும் ரௌடிதான் படத்தில் சின்ன கேரக்டரில் நடிச்சாலும், நல்ல பெயர் கிடைச்சது. பெஸ்ட் என்டர்டெயினருக்காக ரேடியோ மிர்ச்சி வழங்கின ‘டென்வேர் (Denwer)’ விருது வாங்கினது ரொம்பப் பெருமையா இருக்கு. ‘மொக்கை ஆஃப் த டே’ நிகழ்ச்சி பார்க்கிற எல்லோரும் கேட்கிற கேள்வி... ‘இந்த உடம்பை வெச்சுட்டு எப்படி இப்படி அடிவாங்குறானோ?’ என்பதுதான். உளி தாங்குற கல்தான் சிற்பமாகும்’’ என்கிறார் கவிதையாக.

இவர்கள் இருவரும் இணைந்து படத்திலும் கலக்க இருக்கிறார்கள்.

‘‘ஏழு வருஷக் காதல்... கைகூடிருச்சு!’’

ன் டி.வி ‘தேவதை’ சீரியல், இசையருவி, ராஜ், வேந்தர், கேப்டன் டி.வி-க்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று சுழன்றுகொண்டிருக்கும் கிருத்திகாவுக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது. புதுப்பெண் வெட்கம் பேச்சில்!

கேபிள் கலாட்டா!

‘‘ஏழு வருஷக் காதல்... பல கலாட்டாக்கள், நீண்ட காத்திருப்புக்கு அப்புறம் போன மாசம்தான் ரெண்டு குடும்ப சம்மதத்தோட கல்யாணத்தில் முடிஞ்சிருக்கு. அப்போ நான் காலேஜ்ல பி.பி.ஏ முதல் வருஷம் படிச்சுட்டு இருந்தேன். ஃப்ரெண்டா அறிமுகமானார் ராஜா. அவரோட கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சதால, புரொபோஸ் பண்ணிட்டேன். மனுஷன் ஒரு வருஷம் பிடிகொடுக்காம விலகி விலகிப் போனாரு. நானும் விடாம துரத்தி, வழிக்குக் கொண்டுவந்துட்டேன். நாங்க காதலிக்க ஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துல, என் வீட்டுல விஷயம் தெரியவர, என் அண்ணன் பயங்கர கோபத்துல, என்னை அடிச்சுட்டான். நிறைய எதிப்பு வந்தாலும் நானும் ராஜாவும் எங்க காதல்ல உறுதியாவும் பொறுமையாவும் இருந்தோம்.

ஆறு வருஷம் ஆயிருச்சு... எங்க ரெண்டு வீட்டையும் சம்மதிக்கவைக்க. இப்போ புதுப்பொண்ணு, மாப்பிள்ளையா லைஃப் ஹேப்பியா போயிட்டிருக்கு. என் ஹஸ்பண்ட் பத்திரிகைத்துறையில் இருக்கார். நான் சீரியல்ல நடிக்கிறதோட, கூடிய சீக்கிரம் ஒரு பொட்டீக் ஆரம்பிக்கிற ஐடியாவில் இருக்கேன். சினிமா வாய்ப்புகளும் வருது.  கலக்குவோம்!’’

ஹேப்பி மேரிட் லைஃப் கிருத்திகா!

‘ரிஸ்க் எடுக்கறது  ரஸ்க் சாப்பிடுற மாதிரி!’’

செய்தி தொகுப்பாளர் விக்ரம், இப்போது சீரியல் ஹீரோ ஆன குஷியில் இருக்கிறார்.

‘‘இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, மூணு வருஷம் ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பார்த்தேன். ஈழத் தமிழர்களுக்கான மாணவர்கள் போராட்டம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் நடந்துட்டு இருந்த அந்த நேரத்துல, ஐ.டி நிறுவன ஊழியர்கள் ஆரம்பித்த ‘சேவ் தமிழ்ஸ்’ அமைப்பில் உறுப்பினரா சேர்ந்தேன். அந்த அமைப்பின் பிளாக்கில் நிறைய எழுதினதுதான், எனக்குள்ள இருந்த மீடியாக்காரன் முழிச்சுக்கிட்ட மொமென்ட். ஐ.டி வேலையை உதறிட்டு, மீடியா பக்கம் வந்தேன்.

கேபிள் கலாட்டா!

ஆரம்பத்தில் தந்தி டி.வி-யில ரிப்போர்ட்டர் கம் நியூஸ் ரீடர் வேலை. அடுத்து ‘புதிய தலைமுறை’ சேனல்ல நியூஸ் ரீடர் வாய்ப்பு. சன் டி.வி ‘இஎம்ஐ’ சீரியல் ஆர்ட்டிஸ்ட் ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். செலக்ட் ஆயிட்டேன். நியூஸ் ரீடர் வேலையை ரிசைன் பண்ணிட்டு இப்போ முழுநேர சீரியல் ஆக்டர் ஆகிட்டேன். ‘இஎம்ஐ’... வலுவான கதை. ஐ.டி நிறுவன ஊழியர்களோட தவணை முறை வாழ்க்கையின் திரைப் பதிவான இந்த சீரியல், எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறதே பெருசு. ஆனாலும் நான் ஒவ்வொரு வேலை யையும் உதறிட்டு வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கும்போதும், ‘உனக்குப் பிடிச்சதை செய்’னு ஆதரவா இருந்த என் குடும்பம்தான், என் னோட பெரிய பலம்!’’

சீரியல்ல கலக் குங்க பாஸ்!

ரிமோட் ரீட்டா படங்கள்:ரா.வருண் பிரசாத்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

பாடம் சொல்லும் ஈர மனது!

``அண்மையில் விஜய் டி.வி-யில், `ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஒளிபரப்பானது. அதில் வென்ற குட்டீஸ், தாங்கள் வென்ற பரிசுத் தொகையை முன் சுற்றுகளில் தோற்ற, திறமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். பெரியவர்கள்கூட யோசிக்கத் தயங்கும் ஒரு மகத்தான காரியத்தை குட்டீஸ் செய்திருக்கிறார்கள். போட்டி, பொறாமை நிறைந்த இந்த உலகத்தில் குட்டீஸின் ஈர மனது எல்லோருக்கும் ஒரு வழிகாட்டி!’’ என்று மனம் நெகிழ்கிறார் கீழக்கரையில் இருந்து மு.சுலைஹா.

‘ஏழாவது நாள்’... `ஏ ஒன்' நிகழ்ச்சி!

``நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் அரசியல், சமூகம், விளையாட்டு, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் ஒரு வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்து அலசி பார்க்கும் ‘ஏழாவது நாள்’ நிகழ்ச்சி நேயர்களுக்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஞாயிறு காலை 9 மணிக்கு ஒளிபரப்பகும் இந்நிகழ்ச்சியை பார்த்தால்... நாட்டு நடப்புகளை தெளிவாக அறிய முடியும்'' என்று பாராட்டுகிறார் மதுரையில் இருந்து எம்.ராஜம்.

உள்ளம் விரும்பும் விளம்பரம்!

``அது ஒரு பானத்துக்கான விளம்பரம். கணவரும், மனைவியும் படிக்கட்டில் ஏற முயற்சிக்கும்போது... `நமக்கு கல்யாணம் முடிந்தபோது எளிதாக ஏறினோம். இப்போது வயதாகிவிட்டது. ஏறுவது கடினம்’ என்று கணவர் சொல்கிறார், ஒரு பானத்தை குடித்துவிட்டு படியேறுகின்றனர். அப்போது அந்தக் கணவர், `நாம் மீண்டும் கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று கேட்கிறார். அதற்கு மனைவி, ‘பைத்தியமா?!’ என்கிறார். முதுமை ஊஞ்சலாடும் இந்த விளம்பரம் என்னை முற்றிலும் கவர்ந்துவிட்டது'' என்று பாராட்டுகிறார் கோச்சடையில் இருந்து கே.சீதாலட்சுமி.