
சதுரங்க ராணிகள்
திருப்பூர், காது கேளா தோர் பள்ளி மாணவிகளான நந்தினி மற்றும் அம்சவேணி, சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான காது கேளாதோருக் கான சதுரங்கப் போட்டியில் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் வென்று வந்திருக்கிறார்கள். அடுத்து, மே மாதம் நடை பெறவிருக்கும் சர்வதேச சதுரங்கப் போட்டிக்குத் தயாராகி வரும் இந்தத் தங்கங்ளைச் சந்தித்தோம். அவர்கள் சைகையில் பேசியதை நமக்காக மொழி பெயர்த்தார் பள்ளியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்.
‘‘ஸ்கூல்ல சீனியர்ஸ் எல்லோரும் விளையாடுற தைப் பார்த்து 12 வயசில் செஸ் விளையாட ஆரம்பிச்சேன். இப்போ எனக்கு 15 வயசு. அதுக்குள்ள நேஷனல் லெவல்ல ஜெயிச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருக்கு’’ என்று ஆரம்பித்தார் அம்சவேணி...
‘‘ஒவ்வொரு போட்டிக்குப் போறதுக்கு முன்னாடியும் தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி எடுப்பேன். திருப்பூரில் நடந்த மாநில அளவுப் போட்டியில் ஜெயிச்சதில் இருந்து இப்போ தேசிய அளவுப் போட்டியில் ஜெயிச்சிருக்கிறது வரை, என்னைவிட சீனியர்ஸ் கூடவும் விளையாடியிருக்கேன். குறிப்பா, தேசிய அளவிலான போட்டியில, நான் விளையாடிய எல்லாருமே என்னைவிட சீனியர்ஸ். அதில் ரெண்டு பேர், ஏற்கெனவே தேசிய அளவுப் போட்டியில் விளையாடினவங்க. நீண்ட நேரம் எடுத்து விளையாடினாலும், கடைசியில ஜெயிச்சுட்டேன்’’ என்றவர்.

‘‘எங்க வீட்டுல செஸ் பத்தியெல்லாம் தெரியாததால, போட்டிகளுக்குப் ‘போயிட்டு வா’னு அனுமதி கொடுக்கிறதே எனக்குப் பெரிய பரிசு. ஸ்கூல்தான் எனக்குப் பெரிய சப்போர்ட்!’’ - கண்களில் ஆனந்தம், ப்ளஸ் ஒன் படிக்கும் அம்சவேணிக்கு!
‘‘ஆறு வயசுல செஸ் விளையாட ஆரம்பிச்சேன். மாவட்ட அளவிலான போட்டியில முதல் வெற்றி. 12 வயசுல ஹைதராபாத்தில் நடந்த ஒரு போட்டியில என்னோட விளையாடினவர், 30 வயசு மும்பைக்காரர். ஆடத்தொடங்கிய அஞ்சாவது நிமிஷத்தில் அவரை ஜெயிச்சேன். அதுவே எல்லாருக்கும் அதிர்ச்சியா இருக்க, அடுத்த ரவுண்டிலும் அதே வயதுடைய இன்னொருவரோட விளையாடி ஜெயிச்சேன். என்னால மறக்க முடியாது மகிழ்ச்சித் தருணம் அது. 16 முறை மாநில அளவிலான போட்டிகள்லயும், நான்கு முறை தேசிய அளவிலான போட்டிகள்லயும் கலந்துட்டிருக்கேன். இப்போ அடுத்து சர்வதேச லெவல்ல விளையாடப் போறேன்.
எங்க வீட்டில் முதல்ல பெருசா சப்போர்ட் பண்ணலைன்னாலும், அப்புறம் ஒவ்வொரு போட்டியிலும் நான் வெற்றி பெறுவதைப் பார்த்துட்டு இப்போ சந்தோஷப்படுறாங்க’’ என்கிறார் ப்ளஸ் டூ படிக்கும் நந்தினி, உற்சாகமாக.
சரி, இவர்களின் கோச் யார்..?
‘‘பிரத்யேகமா கோச்னு எல்லாம் எங்களுக்கு யாரும் இல்ல. எங்க பள்ளி தாளாளர் முருகசாமி ஐயாவுக்கு விளையாட்டில் ஆர்வம். அவர் பயிற்சியில யும் ஊக்கத்துலயும் நாங்க மட்டுமில்ல, எங்க ஸ்கூல்ல இன்னும் பல மாணவிகள் உருவாகிட்டு இருக்காங்க. அவருக்கு நிறைய நிறைய நன்றிகள்!’’ - கைகூப்பும் அந்த சதுரங்க ராணிகள்,‘‘அடுத்து சர்வதேச அளவிலான போட்டியில ஜெயிக்கணும். எங்க பள்ளிக்கும், முருகசாமி ஐயாவுக்கும் பெருமை சேர்க்கணும். எங்களை மாதிரி மாற்றுத்திறனாளி களுக்கு நம்பிக்கை கொடுக்கணும்’’ என்கிறார் கள் உற்சாகத்துடன்!
க.சத்தியமூர்த்தி