அவள் 16
Published:Updated:

காசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து!

காசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
காசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து!

காசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து!

கையில் காசு இருக் கிறதோ இல்லையோ, வேலட்/பர்ஸ் படு ஸ்டைலிஷாக இருக்க வேண்டும் என்பது,

காசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து!

இன்றைய இளசுகளின் கான்செப்ட்டுகளில் ஒன்று. 10 ரூபாய் நோட்டு மட்டுமே கையிருப்பு என்றாலும், அதை பிராண்டட் பர்ஸில் வைத்து பல்ஸ் ஏற்றும் கைஸ் அண்ட் கேர்ள்ஸ்... உங்களுக்கான லேட்டஸ்ட் வால்ட் மற்றும் ஸ்லிம் பேக் கலெக்‌ஷன்ஸ் இதோ!

டபுல் ஃபோல்டு

காசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து!

நம்பியார் காலத்தில் இருந்து இருக்கும் மாடல்தான். ஆனால், விதம்வித மான வண்ணங்கள் பூசப் பட்டு ட்ரெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டது. டிரெஸ்ஸுக்கு மேட்ச் ஆக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதால், இந்த மவுசு என்கிறார்கள் வாலட் பிரியர்கள். இதே டபுள் ஃபோல்டில் பிடித்த ஃபுட்பால் டீம் லோகோ, பிடித்த ஹீரோ, ஹீரோயின் படங்கள் என ப்ரின்ட் செய்த லோக்கல் அயிட்டங்களும் கிடைக்கின்றன.

காம்பேக்ட் ஐ.டி

காசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து!

அதே டபுள் ஃபோல்டு வாலட்தான். ஆனால், காசு கம்மியாகவும் கார்டுகளை அதிகமாகவும் உபயோகிப் பவர்களுக்கு ஏற்ற மாடல். நிறைய கார்ட் ஃபோல்டர்கள் உள்ளன இதில். 

கிளாஸிக் டிரிபிள் ஃபோல்ட்

டபுள் ஃபோல்டு மாடலில் சமாதானம் ஆகாதவர்களுக்கு, நிச்சயம் இது பிடிக்கும். புல்ச்சீ, பேக் இட், ஃபாஸ்ட் டிராக், லூயி ஃபிளிப்ஸ், பூமா இவையெல்லாம் ஆண்களுக் கான ஃபேவரைட் வாலட் பிராண்ட்கள்.
 

காசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து!

குறிப்பு: பிராண்டுக்கு ஏற்ப விலை அமையும். தோராயமாக ரூபாய் 1,000  - 3,000 ரூபாய் வரையில் கிடைக்கின்றன.

மினி வாலட்

பக்கத்தில் ஷாப்பிங் போகும்போது கைக்கு அடக்கமாக ஒரு பர்ஸ் தேவைப்படும் இல்லையா..? அதற்காகத்தான் இந்த மினி மணி பர்ஸ். சின்னதாக இருந்தாலும், தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

காசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து!

பிராண்டுக்கும் டிசைனுக்கும் ஏற்ப விலை வேறுபட்டாலும், பட்ஜெட்டுக்குள் அடங்கும் மாடல்களும் கிடைக்கும்!

வாலட் மாடல்

காசு, கார்ட்ஸ், செல்ஃபோன், மேக்கப் அயிட்டம், கண்ணாடி என கம்ப்ளீட் மல்டி பர்பஸ் உபயோகத்துக்கு ஏற்றது. வெவ்வேறு நிறங்கள், அழகழகான ஆர்ட் வேலைப்பாடுகள் என அவ்வளவு கலெக்‌ஷன்ஸ். ஜீன், டாப் முதல் பாவாடை, தாவணிவரை பொருத்தமான டிசைன்கள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் பெல்ட் மாட்டி, ஸ்டைல் கூட்டலாம்.
ஸ்லிம்  டைப்

ஹேண்ட் பேக் பாதி, வாலட் பாதி கலந்துசெய்த கலவை. இதில் கிளாஸிக், ஃபன்கி, ஸ்டைலிஷ் என கலெக்‌ஷனுக்குப் பஞ்சமில்லை. வேலைக்குப் போகும் பெண்களுக்குப் பிடித்தமான சாய்ஸ்.

பி.நிர்மல் ச.ஹர்ஷினி மாடல்கள்: கார்த்தி, சஞ்சிதா நன்றி: குளோபஸ், தி.நகர், சென்னை