அவள் 16
Published:Updated:

ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!

ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!
பிரீமியம் ஸ்டோரி
News
ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!

ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!

‘உன்னைப் பார்த்தா எக்ஸாமுக்கு படிக்கிற மாதிரியே இல்லையே’, ‘எப்ப பார்த்தாலும் வாட்ஸ்அப்! பரீட்சை வருதுனு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?’, ‘டி.வி பார்க்கத்தான் ஸ்டடி ஹாலிடேஸ் விட்டிருக்காங்களா?’

- இவையெல்லாம் மாணவர்களுக்கு எக்ஸாம் டைம் அர்ச்சனைகள். ‘என்ன செய்ய, நாங்களும்

ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!

படிக்கணும்னுதான் நினைக்கிறோம். ஆனா, முடியல’ என்று புலம்புபவர்களுக்கு... இருக்கவே இருக்கின்றன எக்ஸாம் ஸ்பெஷல் ஆப்ஸ்! புடிச்சுக்கோ, படிச்சுக்கோ, மார்க்ஸ் அள்ளிக்கோ!

டொடெயிட் (TOTAIT)

ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!

எவ்வளவு நாட்கள் படிக்க வேண்டும், என்னவெல்லாம் படிக்க வேண்டும் என்பதை மட்டும் முடிவுசெய்தால் போதும். மற்றவை எல்லாம் ‘டொடெயிட்’ பார்த்துக்கொள்ளும். பாடத்தின் கடினத்தன்மைக்கு ஏற்ப, ஒவ்வொருநாளும் எந்த எந்தப் பாடம், எவ்வளவு நேரம் படித்தால் சிறப்பான மதிப்பெண்கள் வாங்கலாம் என்பதைக் கணித்து அட்டவணையாகக் கொடுக்கும் இந்த ஆப்! மேலும், இது பரிந்துரைத்த நேரம் அந்தப் பாடத்தை படிக்கிறீர்களா என ஸ்ட்ரிக்ட் டீச்சராக ஸ்டாப் வாட்ச் வைத்து செக் செய்யும். ஃபீவர், ஃப்ரெண்ட்ஸ் என்று இடையில் ஒருநாள் படிக்கத் தவறிவிட்டீர்களா? டோன்ட் வொர்ரி. மிஸ் ஆன அந்த அட்டவணைக்கும் மாற்று பிளான் கொடுக்கும் இந்தச் செயலி.

ஸ்டடி டிப்ஸ் (STUDY TIPS)

ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!

புத்தகத்தை எடுத்தால் தூக்கம் வருகிறதா? மனது அலைபாய்கிறதா? பாடம் புரியவில்லையா? படிக்கும்போது ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கலாம், படித்ததை எப்படி நினைவில் வைத்துக்கொள்ளலாம், படிக்கும் நேரத்தில் எந்தெந்த உணவுகளை உண்ணலாம், ஒரு பாடத்தை அதிகபட்சம் எவ்வளவு நேரம் படிக்கலாம் என்பது வரையிலான பல சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் செயலி, ‘ஸ்டடி டிப்ஸ்’. மேலும், படித்ததை எப்படி விடைத்தாளில் பிரசன்ட் செய்வது, 3 மணி நேரத்தை எப்படி நிர்வகித்து பரீட்சை எழுதுவது என எக்ஸாம் டிப்ஸ் வரை கொடுத்து உங்களைத் தயார்படுத்தும்.

எக்ஸாம் கவுன்ட்டவுன் (EXAM COUNTDOWN)

ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!

‘மச்சி... நாளைக்கு என்ன எக்ஸாம்?’ என்று பகீர் கேள்விகேட்டு, தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி... எதற்கு பாஸ் இந்த கன்ஃப்யூஷன்?  இருக்கவே இருக்கிறது ‘எக்ஸாம் கவுன்ட்டவுன்’ ஆப்! பரீட்சை அட்டவணையை ஒருமுறை இதில் குறித்துவைத்துக்கொண்டால் போதும்... பரீட்சைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்பதை தினமும் அலர்ட் செய்துகொண்டே இருக்கும். எந்தப் பரீட்சை கடினமென குறித்துவைக்கிறீர்களோ, அந்தப் பரீட்சைக்குப் படிக்கச் சொல்லி தினமும் வார்னிங் கொடுக்கும். பரீட்சைக்குச் செல்லும் முன் `ஆல் தி பெஸ்ட்' சொல்லி வழி அனுப்பும் ஆண்ட்ராய்டு தோழன், ‘எக்ஸாம் கவுன்ட்டவுன்’ ஆப்.

மை ஸ்டடி லைஃப் (MY STUDY LIFE)

ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!

இப்போதுள்ள மாணவர்கள் படிப்பைவிட ஸ்போர்ட்ஸ், கல்ச்சுரல்ஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர்ஸ் என்று படுபிஸி. இதை எல்லாம் கவனித்துப் படிப்பையும் எப்படிச் சமாளிப்பது? இருக்கவே இருக்கிறது ‘மை ஸ்டடி லைஃப்’! பரீட்சை தேதிகள், மற்ற போட்டித் தேதிகள் ஆகியவற்றை குறித்துக்கொண்டால், இது க்ளாஷ் ஆகாமல் பார்த்துக்கொள்ளும். போட்டுவைக்கும் அட்டவணையை மணிக்கு ஒருமுறை அலாரம் அடித்து நினைவுபடுத்தும். மொத்தத்தில் ஆள் ரவுண்டரான நீங்கள் படிப்பு, எக்ஸ்ட்ரா கரிகுலர்ஸ் என்று இரண்டிலும் பேலன்ஸ் செய்ய கைகொடுக்கும் பெஸ்ட் பிளானர்.

ஸ்டடி செக்கர் (STUDY CHECKER)

ரெடி... ஸ்டெடி... ஸ்டடி!

பொதுவாக, போட்ட ஸ்டடி டைம்டேபிள் நாளாக ஆக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, போர்ஷன்ஸ் எல்லாம் பெண்டிங்கில் நிற்கும். ‘ஸ்டடி செக்கர்’ ஒரு செக் லிஸ்ட் கொடுக்கும். நீங்கள் ஒரு வாரத்தில்/மாதத்தில் படிக்க பிளான் செய்ததை அதில் ஃபீட் செய்துவிட்டால், அதை எந்தளவுக்கு ஃபாலோ செய்கிறீர்கள், படிக்காமல் டேக்கா கொடுக்கிறீர்கள் என்பதை எல்லாம் கண்காணித்து, நாள்/வாரத்தின் இறுதியில் குட்டு அல்லது ஷொட்டு கொடுத்து படிக்கவைக்கும்.

தா.நந்திதா