அவள் 16
Published:Updated:

சமூகத்துக்கு வளம்... பர்ஸுக்கும் வளம்!

சமூகத்துக்கு வளம்... பர்ஸுக்கும் வளம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சமூகத்துக்கு வளம்... பர்ஸுக்கும் வளம்!

சமூகத்துக்கு வளம்... பர்ஸுக்கும் வளம்!

அறிமுகம்

சமூகத்துக்கு வளம்... பர்ஸுக்கும் வளம்!

வணக்கம்! நான் ஆதீஸ்வரன். உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறேன். பார்ட் டைம் பிசினஸா, மாடித்தோட்டம் அமைச்சுக் கொடுக்கிறேன். சமூகத்துக்கும் என் பர்ஸுக்கும் வளமா இருக்கு இந்தத் தொழில்!

விளம்பரம்

நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள்... மற்றும் பெரியண்ணன் ஃபேஸ்புக். காலேஜ் வொர்க்கிங் அவர்ஸ் அரை நாள்தான் என்பதால, வாரத்துக்கு ரெண்டு, மூணு வீடுகளுக்குத் தோட்டம் வெச்சுக்கொடுக்க முடியுது.

பிசினஸ் சேட்டிஸ்ஃபேக்‌ஷன்

சமூகத்துக்கு வளம்... பர்ஸுக்கும் வளம்!

கேட்கவா வேணும்..?! பசுமையான பிசினஸ் ஐடியா இது. டென்ஷன் இல்லாத, மனசுக்கு நெருக்கமான தொழில்!

லாபம்

ஒரு வீட்டுக்கு ஆர்கானிக் முறையில் தோட்டம் அமைச்சுக்கொடுத்தா, 3,000 ரூபாய் கிடைக்கும். விதை, உரம், கிரீன் ஹவுஸ் நெட்னு 1,600 ரூபாய் வரை செலவுபோக, மீதி லாபம்தான்.

ஐடியா

ஸ்கூல் படிக்கும்போதிருந்தே எனக்குத் தோட்ட வேலைகள் செய்யப் பிடிக்கும். காலேஜ்ல சேர்ந்தப்போ, இயற்கை விவசாயம், ஆர்கானிக் விவசாயம் சார்ந்த தன்னார்வக் குழுக்களோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. அந்த அனுபவம்தான், மாடித்தோட்டம் அமைச்சுக் கொடுக்கிறதை ஒரு பிசினஸா எடுத்துச் செய்யலாம் என்ற ஐடியாவைக் கொடுத்தது.

மதுரையில இப்போ மாடி வீடுகள், அப்பார்ட்மென்ட்டுகள் பெருகிவர்றதால, மக்கள் மாடித்தோட்டத்தில் ஆர்வமா இருக்காங்க. ஒருமுறை தோட்டம் போட்டுக்கொடுத்த வீட்டுக்கு, மெயின்டனன்ஸ் சார்ஜ் இல்லாம இலவச சர்வீஸ் செய்துகொடுப்பேன். மேலும் அந்த வீடுகளுக்கு எல்லாம் இயற்கை உரம் தயாரிக்கவும் சொல்லிக்கொடுப்பேன். இதனால என் வாடிக்கையாளர்கள் வட்டம் கூடிட்டே இருக்கு.

மு.ராகினி ஆத்ம வெண்டி, நா.மரகதமணி படங்கள்:சு.ஷரண் சந்தர்