அவள் 16
Published:Updated:

ரூம் போட்டு யோசிச்சு... ரோதனை பண்றாங்களே!

ரூம் போட்டு  யோசிச்சு...  ரோதனை  பண்றாங்களே!
பிரீமியம் ஸ்டோரி
News
ரூம் போட்டு யோசிச்சு... ரோதனை பண்றாங்களே!

ரூம் போட்டு யோசிச்சு... ரோதனை பண்றாங்களே!

`இதை செய்யாதே... அதை செய்யாதே’னு நம்ம கைகளை எப்பவுமே கட்டிப் போடுறதுதானே உலக வழக்கம்! வீட்டுக்குப் போனாலும் `படி படி’, காலேஜ் போனாலும் `படி படி’. பொதுவாழ்க்கையில இருக்குற யுவன் அண்ட் யுவதிகளுக்கு இந்த தேசத்துல சில இடங்கள்ல என்னவெல்லாம் `தடா’ இருக்குன்னு பார்த்துட்டு நீங்களும் எங்க சோகத்துல கலந்துக்குங்க ஃப்ரெண்ட்ஸ்!

ரூம் போட்டு  யோசிச்சு...  ரோதனை  பண்றாங்களே!

• லெகிங்க்ஸ் போடவே கூடாது. போன தலைமுறைக்கு முன்னால இருந்த கேர்ள்ஸ் எல்லாம் சுடிதார்கூட போட மாட்டாங்களாம்.

• ஃபேஸ்புக், ‘வாட்ஸ்அப்’ல அக்கவுன்ட் இருந்தாலே நாமெல்லாம் `பேட் பசங்க’ளாம்.

• காலேஜுக்கு பைக்ல போகக் கூடாது. அதுலயும் டபுள்ஸ் போகுறது ரொம்பவே தப்பு. ஏன்னு கேட்டா பெட்ரோலுக்குப் பஞ்சம் வந்துடும்னு சொல்றாங்க!

ரூம் போட்டு  யோசிச்சு...  ரோதனை  பண்றாங்களே!

• காலேஜுக்கு செல்போன் மட்டும் இல்ல… சிம் கார்டே கொண்டு வரக்கூடாது. டிசிப்பிளின் ரொம்ப முக்கியம்.

• காலேஜுக்குள்ள பர்த்டே பார்ட்டியா? ஆமா... நீயெல்லாம் எத்தனை அரியர் வெச்சிருக்கே?

• கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் கேம்பஸுக்குள்ள பேசிக்கவே கூடாது. ஃப்ரெண்ட்ஷிப்னு சொல்றீங்களா? அப்ப

ரூம் போட்டு  யோசிச்சு...  ரோதனை  பண்றாங்களே!

பேரன்ட்ஸை கூட்டிட்டு வாங்க.

• கட் அடிச்சிட்டு சினிமாவுக்குப் போறது உலக மகா தப்பு. ஸ்ட்ரெயிட்டா டிஸ்மிஸ்தான்.

• கிளாஸ் ரூம்ல சினிமா பாடல்களை முணுமுணுக்கவே கூடாது. குறிப்பா டி.ராஜேந்தர் பாடல்கள் கேட்டால் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து டண்டனக்கா செய்துவிடுவார்கள்.

• பர்ஸில் மூன்று ரூபாய்க்கு மேல் வெச்சிருக்கக் கூடாது. அதுக்கும் மேல வெச்சிருந்தா, பணத்துடன் சேர்த்து பர்ஸும் பறிமுதல் செய்யப்படும்.

• இருமல், தும்மல், ஏப்பம் விக்கலா? வந்தா வரட்டுமே... ஆனா, பப்ளிக்ல நாட் அலவுட். கர்ச்சீஃப் யூஸ் பண்ணுங்க.   

• சாக்ஸ் துவைச்சு ஒரு மாசம் ஆகி பேட் ஸ்மெல் வருதா? ஆனாலும் ஷூ இல்லாட்டி நோ என்ட்ரி!

• ஹாஸ்டல் பசங்களா இருந்தா குளிக்குறப்பகூட ஐ.டி கார்டோடதான் குளிக்கணும். இல்லாட்டி பாதியிலயே தண்ணி நின்னு கண்ணு எரிஞ்சுப் போகும்.

• சூர்யா போல கையில காப்பு போட்டுக்கிட்டு கெத்து காட்ட நினைச்சா... காப்பே நமக்கு ஆப்பு ஆயிடும். அவ்வ்வ்!

ரூம் போட்டு  யோசிச்சு...  ரோதனை  பண்றாங்களே!

• ஃப்ரீ ஹேர்தான் ஸ்டைல்னு நினைச்சுப் போனா ஃப்ரீ ஹேர்கட் கூட நடக்கலாம். பீ கேர்ஃபுல்!

வாய்க்குள்ள பப்பிள்கம் வெச்சுட்டு குழப்பிட்டு இருந்தா வாய்க்குப் போடுவாங்களே பூட்டு!
இதுக்கெல்லாம் என்னதான் தீர்வுனு கேக்குறீங் களா... வயித்தால போகுதுன்னு பொய் சொல்லிட்டு குப்புறப்படுத்து தூங்குறதுதான் ஒரே வழி !

- பா.அபிரக்‌ஷன், ஜெ.விக்னேஷ், பா.நரேஷ்