அவள் 16
Published:Updated:

எலியாக வேண்டாம்னா... இதைப் படிங்க மொதல்ல!

எலியாக வேண்டாம்னா... இதைப் படிங்க மொதல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
எலியாக வேண்டாம்னா... இதைப் படிங்க மொதல்ல!

எலியாக வேண்டாம்னா... இதைப் படிங்க மொதல்ல!

‘நிம்மதியுடன் சம்பாதிக்க வேண்டுமென்றால், தயவுசெய்து கல்லூரிக்குப் போகாதீர்கள்!’

- மாணவர்களையும், பெற்றோர்களையும் வாயடைத்துப்போக வைக்கிறார் ராபர்ட் டி கியோசகி, தன் ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) புத்தகத்தின் மூலம்!

எலியாக வேண்டாம்னா... இதைப் படிங்க மொதல்ல!

இன்றைய இளைஞர்கள் மாற்று சிந்தனை இல்லாமல் இன்ஜினீயரிங் என்ற புதைகுழியில் சென்றுவிழுவதை, ‘ரேட் ரேஸ்' (எலிகளின் ஓட்டம்) எனும் ஆசிரியர், அந்த ஓட்டத்தில் இருக்கும் அரசியலையும், அதிலிருந்து விடுபடுவதற்கான தீர்வையும் இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

எலியாக வேண்டாம்னா... இதைப் படிங்க மொதல்ல!

‘கல்லூரிக்குப் போ, நல்ல மார்க் எடு, வேலைக்குப் போ, சம்பாதிச்சு செட்டில் ஆயிடு’ என்ற சங்கிலித்தொடரில் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தைக் காட்டுகிறார்.

இந்தக் கதையில் இரண்டு தந்தைகள் வருகிறார்கள். ஒருவர் படிக்காமலேயே பணக்காரர் ஆனவர். மற்றொருவர் படித்தும் ஏழையாக இருப்பவர். இரண்டு தந்தைகளின் வாழ்க்கை மூலமாக, நமக்குப் பாடமெடுக்கிறார் ராபர்ட்.

பொருளாதாரத்தை அச்சாணியாகக் கொண்டு சுழலும் இந்த சமுதாயத்தை ‘சிஸ்டம்’ என்று குறிப்பிடும் ராபர்ட், படிக்காத தந்தை எப்படியெல்லாம் சாதுர்யமாகச் செயல்பட்டு பணக்காரர் ஆனார் என்பதையும், படித்த தந்தை முன்னேற முடியாமல் எப்படி முடங்கினார் என்பதையும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

பணம் செய்வதற்குப் படிப்புத் தேவையில்லை. ‘ஃபினான்ஷியல் இன்டலிஜன்ஸ்’... அதாவது பொருளாதார அறிவு இருந்தால் போதும் என்கிறார் ராபர்ட். மேலும் இந்தப் பள்ளிகளும், கல்லூரிகளும், கல்விக் கட்டமைப்பும் எந்தெந்த வகைகளில் நம்மை பொருளாதார வளர்ச்சியில் இருந்து பிரித்து வைக்கின்றன என்பதையும் அப்பட்டமாக தோலுரிக்கிறார்.

பொருளாதார அறிவு குறித்த தேவையையும், பணத்தைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் இந்நூல் தெளிவாக விவரிக்கிறது. முக்கியமாக, ‘பணத்துக்கு நீ வேலை செய்யாதே, பணம் உனக்காக வேலை செய்ய வேண்டும்’ என்கிறார். அதாவது பணத்தை முதலீடு செய்யும் உத்தியை, திறனை வளர்த்துக்கொள்ளும் வழிகளைக் குறிப்பிடுகிறார். புத்தகம் முழுவதும் சின்னச் சின்னக் கட்டங்கள், கோடுகள் மூலம் எளிமையாக பொருளாதாரப் பாடம் எடுப்பது அழகு.

இன்ஜினீயரிங் பொறியில் இருந்து விடுபட விரும்பும் எலிகள்... வாசியுங்கள் தவறவிடாமல்!

பா.நரேஷ்