
தெறி பாடல்... டிரெஸ் சீக்ரெட்!
ஒரு பாடல் விஷுவலாக சக்சஸ் ஆவதற்கு டான்ஸ், ஆர்ட் டைரக்ஷன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு காஸ்ட்யூமும் ரொம்ப முக்கியம்.

விஜய், ஏமி ஜாக்சன் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் `தெறி'. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ராங்கு... ராங்கு... ராங்கு’ பாடலின் காஸ்ட்யூம் டிசைனிங் உருவான கதை குறித்துப் பேசுகிறார் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா என்.ஜே.
‘`ராங்கு பாடல் ஒரு ஃபேன்டஸி வகைப் பாடல். ராஜா, ராணி, இளவரசி... இந்த செட்டப்ல இருக்கணும்னு முடிவு பண்ணோம். ஆனா, காஸ்ட்யூம்ல கண்டிப்பா புதுமை இருக்கணும்ல... அதனால இந்தோ -

வெஸ்டர்ன் டைப் கரெக்ட்டா இருக்கும்னு தோணுச்சு. டாப் டிரடிஷனலாவும், பாட்டம் வெஸ்டர்ன் டைப்லயும் இருக்குறதுதான் இந்தோ - வெஸ்டர்ன் டைப்.
பொதுவா ஆர்ட் டைரக்ஷன் பாடலுக்கு எந்த மாதிரி செட் போடுறாங்க, அந்த செட் எந்த கலர்ல இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி டிரெஸ் கலரை சூஸ் பண்ணுவோம். விஜய்க்கு தெலுங்கு கச்சம் வேட்டி ஸ்டைல் பாட்டமாகவும், வெஸ்டர்ன் டைப் ஜாக்கெட் டாப்லயும் கொடுத்திருக்கோம். இதுக்காக ஷூவுல வரக்கூடிய ரிவிட்ஸ், லாங் செயின் இதெல்லாம் ஃபிக்ஸ் பண்ணி அட்ராக்ஷன் கொடுத்திருகோம். ஷூ, கிளவுஸ், டிரெஸ்னு விஜய் காஸ்ட்யூம் ரெடி பண்ண தோராயமா 40 ஆயிரம் ஆகியிருக்கும்.

இதே போல ஏமி ஜாக்சனுக்கும் டாப் பிளவுஸ் ஸ்டோன் வொர்க் எம்ப்ராய்டரி, நெட்டட் டைப்ல பண்ணியிருக்கோம். பாட்டமில் விஜய்க்கு மேட்ச் ஆகுற மாதிரி ரிவிட்ஸ் ஃபிக்ஸ் பண்ணி இருக்கோம். லெங்த் பூட் இந்த காஸ்ட்யூமுக்கு பெர்ஃபெக்ட் சாய்ஸ். நைனிகா (நடிகை மீனாவின் மகள்) குட்டி பொண்ணு... அதனால ஹெவி காஸ்ட்யூம் இல்லாம `ஏமி'யோட டிரெஸ் ஸ்டைல்லயே கொடுத்தோம். ராணி ஸ்டைலுக்கு கிரவுன் வெச்சோம். அதுல இருக்குற பூக்களுக்கு ஏதோ ஒரு கலர் கொடுக்காம எங்களுக்கு தேவையான கலர்களை பெயின்ட் பண்ணோம். ரெண்டு பேருக்கும் சேர்த்து 60 ஆயிரம் செலவு ஆகியிருக்கும்.
மத்த டான்ஸர்களுக் கும் இதே மாதிரி காஸ்ட் யூம் மேட்ச் ஆகுற மாதிரி இந்தோ - வெஸ்டர்ன் டைப்ல காஸ்ட்யூம் ரெடி பண்ணோம். கண்ணுக்கு ஃபெர்ஃபெக்ட் கலரும் பாக்கறதுக்கு புதுசா இருக்குற டிசைனும்தான் காஸ்ட்யூமுக்கு ஹிட் கொடுக்கும்’’ என்கிறார் சத்யா.
பொன்.விமலா