அவள் 16
Published:Updated:

இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!

இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!
பிரீமியம் ஸ்டோரி
News
இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!

இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!

`அவ்ளோதாங்க உலகம்’னு சொல்லலாம். இந்த உலகத்துல தெரிஞ்சிக்க ’அவ்ளோ இருக்கு’னும் சொல்லலாம். அப்படியான  இந்த உலகத்தை நெட்டில் சுற்றி வந்து பார்த்தால், பல கண்மணிகள் தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவங்கள்ல சிலரைப் பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க!

அடிச்சாலே  கோலுதான்!

இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!

`ஒரே கல்லுல மூணு மாங்காய்’னு சொல்வோம்ல... அந்த மாதிரி ஒரே போட்டியில மூன்று கோல் அடித்து `தம்ஸ் அப்' காட்டியவர்தான் காட்லி லாய்டு. யார் இவங்கன்னு கேக்குறீங்களா? அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் கலக்கல் கேப்டன்! உலகக்கோப்பை, ஒலிம்பிக் போட்டிகள்னு இதுவரைக்கும் 200 போட்டிகள்ல கலந்துக்கிட்டு 70 கோல்களை விளாசியிருக்கிறார் இந்த அம்மணி. 2008, 2012, 2015-ம் ஆண்டுகள்ல தங்கம் வென்று, மகளிர் உலகக்கோப்பை வரலாற்றிலேயே  இறுதிப்போட்டியில் மூன்று

இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!

கோல்கள் அடித்த முதல் பெண்மணினு பேர் எடுத்திருக்காங்கன்னா பாருங்களேன்.

இவங்க சாதனையைப் பாராட்டுற வகையில் இவருக்கு கோல்டன் பால் விருதும், வெள்ளி பூட்ஸ்ஸும் வழங்கப்பட்டிருப்பது ஹைலைட். நேஷனல் அத்லெட் ஆஃப் தி இயர் 2008, FIFA கோல் ஆஃப் தி டோர்னமென்ட் விருது 2015, சர்வதேச மகளிர் விளையாட்டு அமைப்பின் சிறந்த வீராங்கனை விருது 2015 மற்றும் 2015-ம் ஆண்டுக்கான மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனை விருதுன்னு குவிச்சிட்டே இருக்காங்க!

இவங்க சாதனையை சொல்லி முடிக்குறதுக்குள்ள மூச்சு முட்டுதே!

`டிஜே' பொண்ணு.. நீ கலக்கு கண்ணு!

இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!

`வாழ வைக்கும் காதலுக்கு ஜே’னு சொல்லுறது நம்ம ஊர் ஸ்டைல். ’வாழ வைக்கும் இசைக்கு ஜேஜே’னு சொல்றாங்க டாட்டியானா அல்வாரேஸ். உலகின் அனைத்து டாப் ஷோக்களிலும் கலக்கிக்கொண்டிருக்கும் க்யூட் `டிஜே' இவர்!

உலகின் டாப் `டிஜே' ஷோக்களில் இவர் வாய்ஸும், மியூசிக்கும் `சும்மா அதிருதுல்ல...' ரகம் . இவரது பவர் டூல்ஸ் இசை நிகழ்ச்சியைக் கேட்காதவர்கள் அமெரிக்கவாசிகளாகவே இருக்க முடியாது என்று இசைப்பிரியர்கள் வர்ணிக்கிறார்கள். பள்ளி காலங்களிலிருந்தே மியூசிக் மிக்ஸில் கைதேர்ந்த டாட்டியானா, பல நாடுகளிலும் `டிஜே'வாக கால் பதித்திருக்கிறார். லண்டன்வாசியான இவர் ஒரு பிரபல மாடலும்கூட!

நீ கலக்கு செல்லம்!

ராக் வாக் கண்மணி!

இப்ப சொல்லப்போற கதையைக் கேட்டு யாரும் வாய்பிளக்க கூடாது. ஏன்னா, இவங்க வாங்குற சம்பள மேட்டர் அப்படி! ஒரு வருஷத்துக்கு 42 மில்லியன் டாலர்னா சும்மாதானா?! 2004-ல் இருந்து உலகில் அதிகம் சம்பாதிக்கும் நம்பர் 1 மாடல் இடத்தை பத்திரமா தன்னோட இடுப்புல முடிஞ்சு வெச்சிருக்காங்க இந்த பியூட்டி குயின் ஜிசெல் பண்ட்ச்சன்.

இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!

மைக்கேல் ஜாக்சனுக்கு எப்படி `மூன் வாக்'கோ... அந்த மாதிரி ஜிசெலுக்கு `ஹார்ஸ் வாக்'. யெஸ்... ஹார்ஸ் வாக்னு சொல்லப்படுற குதிரை நடை நடந்து ரசிகர்களைக் கட்டி வைத்திருக்கார் இந்தக் கண்மணி. பிரேசில் நாட்டை சேர்ந்த இவர் சிறந்த ஆடை அணிபவர் பட்டியலிலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

அப்போ இவங்களப் பார்த்து `வாக் வாக் ராக் வாக்’னு ஒரு ஹேண்ட் ஷேக் கொடுக்கலாமே!

ஃப்ரீ பேர்டு சமந்தா!

இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!

இத்தாலி நாட்டுக்காரரான சமந்தா க்ரிஸ்டோஃபொரெட்டி (அட, நம்ம செல்ஃபி புள்ள சமந்தா இல்லீங்க), சுமார் ஏழு மாசம் பூமியிலே இல்ல. நவம்பர் மாசம் விண்வெளிக்கு போனவங்க ஜூன் மாசம்தான் திரும்பி வந்துருக்காங்க. விண்வெளிக்கு போறப்ப சாப்பாடுங்கிறது ஒரு மாத்திரை மாதிரிதான் இருக்கும்னு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகமே ஆச்சரியப்பட, அங்க காபி குடிச்சிருக்காங்க சமந்தா!  ஸ்பேஸ்ல காபிய ரொம்ப மிஸ் பண்ண இவங்க, ஒரு தனி ராக்கெட் மூலமா காபி மெஷினை வரவழைச்சு அதுல எக்ஸ்பிரஸோ காபி போட்டு குடிச்சு, அது கூட ஒரு செல்ஃபியும் எடுத்துருக்காங்க.

அட, வாழ்க்கை வாழறதுக்குத்தானே!

தா.நந்திதா