
ஓ... மானிட ஜாதியே!
`என்னிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே, திரண்டு சென்னை, மெரினா பீச்சுக்கு வாருங்கள்’ என ஒருவன் அறிவித்தான். மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர்.

அப்போது அங்கே வருகை தந்த அந்தக் கோடீஸ்வரன் ஓர் அறிவிப்பை வெளியிட்டான். `என்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவுக்குப் பணம் உள்ளது. ஆகவே, யாரும் அடித்துக்கொள்ளாமல் வரிசையாக

நில்லுங்கள்’ என்றான். உடனே அனைவரும் வரிசையாக நின்றனர். வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது. அப்போது மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டான் அந்தக் கோடீஸ்வரன். அதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்... ஆயிரமாவதாக நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என கண்டிஷன் போட்டுவிட்டு `ஒவ்வொருவராக வாருங்கள்’ என அழைத்தான்.
முதலில் நின்றவர், `இங்கு என்ன நடக்கிறது’ என்று ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர், `டீ குடிக்கப் போறேன்’ என சென்றுவிட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்துவிட்டார். முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் `நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே கடைசியாக இணைந்துகொள்வோம்’ என்று பேசிக்கொண்டார்கள். இப்படி எல்லோருமே பின்னோக்கிச் செல்ல.... யாரும் உதவி பெற வரவே இல்லை.
மனித ஆசை எப்போதுமே பேராசைதான்.
- வாட்ஸ்அப் கதை