மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியம்: ராமமூர்த்தி

இதைக் கொஞ்சம் கவனிங்க... ப்ளீஸ்!

அனுபவங்கள் பேசுகின்றன!

நாங்கள் சமீபத்தில் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்தோம்... கொல்லூர், தர்மஸ்தலா என பல ஆன்மிக தலங்களுக்கும், படகுசவாரி, மிருககாட்சி சாலை என குறிப்பிட்ட சில இடங்களுக்கும் சென்று வந்தோம். பொது இடங்கள், பஸ் நிறுத்தம் போன்றவற்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆண், பெண் என இரு பாலருக்கும் தண்ணீர் வசதியுடன் இலவசமாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொழி, வழி தெரியாது விசாரிக்கும்போது, மக்களும் பரிவுடன் சரியான பேருந்தில் ஏற்றிவிட்டனர். நடத்துநரும் இறங்கும் இடம் வந்தவுடன் கூறி இறக்கிவிடுகிறார்கள். ஆட்டோவில் சென்றால் சரியான கட்டணம் மட்டுமே வாங்குகிறார்கள்.

இதெல்லாம் ஆச்சர்யத்தையும் மன நிறைவையும் ஏற்படுத்தின. அதேசமயம், நம் மாநிலத்தில் இருக்கும் நிலைமையை நினைத்து பெருமூச்சு விட்டேன். அரசும், நகராட்சி - ஊராட்சிகளும், மக்களும் கடமை உணர்வுடனும், மனிதாபிமானத்துடனும் செயல்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

- என்.உமாமகேஸ்வரி, சென்னை-33

குழந்தைதான் என்றாலும்..!

அனுபவங்கள் பேசுகின்றன!

மீபத்தில் ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். குடும்பத்தாருடன் அங்கு வந்த இளம் தம்பதியர் தங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தனர். துறுதுறு குழந்தையானதால், அதை டேபிளில் உட்கார வைத்திருந்தனர். குழந்தை காலை நீட்டியபோது தண்ணீர் டம்ளரில் கால் பட்டு, சாப்பாடு முழுவதும் பரவி சாப்பிட இயலாமல் போய்விட்டது. மேலும் குழந்தை சாப்பாட்டை கைகளால் தட்ட, அது பக்கத்து டேபிளில் சாப்பிட்டவரின் இலையிலும் விழுந்தது. அவர் இலையை மூடிவிட்டு சென்றுவிட்டார். சாப்பாடு மேஜையை சுத்தம்  செய்ய கிளீனர் மிகவும் கஷ்டப்பட்டார்.

என்னதான் குழந்தை என்றாலும், சிரமம் சிரமம்தானே! குழந்தைகளுடன் உணவகங்களுக்கு செல்பவர்கள் முன்கூட்டியே இதுபோன்றவை பற்றி யோசித்து, கூடுதல் கவனத்துடன் இருந்தால், சங்கடங்கள் நேராமல் தவிர்க்கலாம்.

- எம்.வசந்தா, சிட்லபாக்கம்

மாத்தி யோசித்த மணியான கேட்டரிங்!

அனுபவங்கள் பேசுகின்றன!

மீபத்தில் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தேன். ரிசப்ஷன் சமயம் அரை லிட்டர் பாட்டில்களில் தண்ணீர்  வைத்தால் பாதி குடித்துவிட்டு மீதியை வீணடிப்பதைத் தவிர்க்க அளவு குறைவாக, அதே சமயம் கவர்ச்சிகரமாக வடிமமைக்கப்பட்ட  பாட்டிலில் தண்ணீர் வழங்கினர். சாதம் பரிமாறும்போது அவசர அவசரமாக பரிமாறாமல், இலையில் தனித்தனி கப்பில் சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, பாயசம் போன்றவற்றை வைத்துவிட்டார்கள். இதனால் அனைவரும் நிதானமாக ரசித்து சாப்பிட்டனர். மணமக்களை ஆசீர்வதிக்க அட்சதையை குட்டி சுருக்குப் பையில் போட்டுக் கொடுத்தனர்.

இப்படி சிறுசிறு விஷயத்துக்கெல்லாம்  மாற்றி யோசித்த கேட்டரிங் சர்வீஸின் சமயோஜிதம்  பலரையும் கவர்ந்தது; அவர்களின் வெற்றியின் ரகசியமும் புரிந்தது... பணம் செலவழிப்பதால் மட்டும் ஒரு விழா சிறப்படைவதில்லை; அது பலராலும் பாராட்டப்படும்போதுதான் சிறப்படைகிறது.

- ஏ.உமாராணி, தர்மபுரி

`நைட்டி’ நலம்வாழ..

அனுபவங்கள் பேசுகின்றன!

ரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் நைட்டி அணிந்திருந்தாள். ஆறு மாதத்துக்கு முன் நானும் அவளும் சேர்ந்துதான் நைட்டி வாங்கினோம். என்னுடைய நைட்டியில் வயிற்றுப்பகுதியில் நைந்து கிழியத் துவங்கி உள்ளது. ஆனால், அவளது ``நைட்டி பளிச்சென்று கிழிசல் இல்லாமல் இருந்தது. என்ன ரகசியம் என நான் கேட்டவுடன் அவள், ‘’நைட்டி அணிந்து வேலை செய்யும்போது சமையலறை மேடை மற்றும் பாத்திரம் சிங்க் பகுதியில், நைட்டியின் வயிறு பாகம் அழுந்தி மேடையில் உரசி துணி நைந்து கிழிகிறது. இதைத்தடுக்க, நைட்டியின் மேல் ஒரு துண்டை இடுப்பைச் சுற்றி கட்டிவிட்டால், நைட்டியில் உராய்வு இல்லாமல் நைந்து போகாமல் இருக்கிறது’’ என்றாள்.

இது நல்ல ஐடியாதானே... நாமும் நடைமுறைப் படுத்தலாமே!

- சீனு.சந்திரா, மயிலாப்பூர்