மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ந்த வருடம் செப்டம்பர் 2 முதல் அடுத்த வருடம் அக்டோபர் 2 வரை குரு பகவான் துலாம் ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ...

மேஷம்: சவால்களை எதிர்கொள்பவர்களே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள்

குருப்பெயர்ச்சி பலன்கள்

கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைப்பட்ட வேலைகள் முடியும். பிரிந்திருந்த கணவன்  மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். புதிய பதவிகள் தேடி வரும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சீராகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். வழக்குகளில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது பங்குதாரர்கள் வந்து சேருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்னுரிமை தருவார்கள். சக ஊழியர்களால் இருந்துவந்த பிரச்னைகள் மறையும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சி பிரச்னைகளில் இருந்து விடுவிக்கும்விதமாக அமையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்: கலையுணர்வு மிக்கவர்களே! நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கணவன்

குருப்பெயர்ச்சி பலன்கள்

மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.  ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப்போகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்குப் புது வேலை அமையும். சுப நிகழ்ச்சிகளால் செலவுகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டைப் புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். தடைப்பட்ட அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கவேண்டிய நிலை ஏற்படும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களையும் பங்குதாரர்களையும் அனுசரித்துச் செல்லவும். உழைக்கும் நேரம் அதிகரிக்கும். இந்த குருப்பெயர்ச்சி சகிப்புத் தன்மையால் சாதிக்க வைக்கும்.

மிதுனம்: அன்புக்குக் கட்டுப்படுபவர்களே! புதிய சிந்தனைகள் தோன்றும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக்

குருப்பெயர்ச்சி பலன்கள்

குழந்தை பாக்கியம் உண்டாகும். தந்தையின் உடல்நலம் சீராகும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் லாபம் தரும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வேலையாட்களும் பங்குதாரர்களும் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.இந்த குருப்பெயர்ச்சி தொட்டதைத் துலங்க வைப்பதுடன் எதிர்பாராத வெற்றிகளையும் தரும்.

கடகம்: கற்பனையில் திளைப்பவர்களே! வளைந்துகொடுத்துப் போக வேண்டிய காலம் இது. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படவும். சிலருக்கு வேறு ஊர் செல்ல வேண்டிய

குருப்பெயர்ச்சி பலன்கள்

நிலை ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களைப் பற்றி வீண் வதந்திகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் பயன் அடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேலையாட்களையும் பங்குதாரர்களையும் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் சவால்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும்.இந்த குருப்பெயர்ச்சி இடமாற்றத்தையும் அலைக்கழிப்பையும் ஏற்படுத்தினாலும் ஓரளவு ஆதாயம் தரும்.

சிம்மம்: அதிகாரத்துக்குப் பணியாதவர்களே! பிரிந்திருந்த கணவன்  மனைவி ஒன்று சேருவீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல

குருப்பெயர்ச்சி பலன்கள்

வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். பிற மொழி பேசுபவர்களால் திருப்பம் உண்டாகும். செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். புகழ், கௌரவம் உயரும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்துவந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் சலுகைகளை அறிவித்து, தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பாக இருக்கவும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் விஷயத்தில் கவனம் செலுத்தாதீர்கள். சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கும். இந்த குருப்பெயர்ச்சி அதிகம் உழைக்கச் செய்தாலும் திட்டமிட்டு சாதிக்க வைக்கும். 

கன்னி: நுண்ணறிவு மிக்கவர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த

குருப்பெயர்ச்சி பலன்கள்

கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிரிகளின் தொல்லை நீங்கும். கோயில் விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சகோதரர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்குச் சொத்துகளால் பிரச்னை உண்டாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு மாறும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் வேறு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் மறுமலர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்துவதாக அமையும்.

துலாம்: தர்மத்தின்படி நடப்பவர்களே! ஜன்ம குருவால் வேலைச்சுமை அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கணவன்

குருப்பெயர்ச்சி பலன்கள்

மனைவிக்கு இடையில் வீண் சந்தேகம் வேண்டாம். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும். மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் அதிகரிக்கும். அவசியமான செலவுகளுக்காகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். அனுபவம்மிக்க வேலையாட்கள் வேலையை விட்டு விலகுவார்கள் என்பதால் கூடுமானவரை அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளுடன் ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். உங்களின் விடாமுயற்சியும் உழைப்பும் அங்கீகரிக்கப்படாமல் போகக்கூடும் என்பதால் பொறுமையுடன் இருக்கவும். இந்த குருப் பெயர்ச்சி முன்னெச்சரிக்கை உணர்வு தேவை என்பதை உணர்த்துவதாக அமையும்.

விருச்சிகம்: மனச்சாட்சியின்படி நடப்பவர்களே! அறிவுபூர்வமாக செயல்பட வேண்டிய நேரம் இது. வேலைகளை ஒருமுறைக்குப் பலமுறை அலைந்து திரிந்துதான் முடிக்க வேண்டியிருக்கும். தாயாரின்

குருப்பெயர்ச்சி பலன்கள்

உடல் ஆரோக்கியம் சீராகும். தேவையற்ற பிரச்னைகளால் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடுகளும் பிரிவும் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். அடகில் இருக்கும் நகை மற்றும் பத்திரங்களை மீட்பீர்கள். முக்கியமான காரியங்களை நீங்களே நேரில் சென்று முடிப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகளால் செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது கனவுத் தொல்லை ஏற்படுவதால் தூக்கம் குறையக்கூடும். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதிகாரிகளின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். புதிய வேலை, பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. அதிகாரிகள், சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இந்த குருப்பெயர்ச்சி அலைச்சலைத் தந்தாலும், விடாமுயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.

தனுசு: சுயகௌரவம் பார்ப்பவர்களே! பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சுப

குருப்பெயர்ச்சி பலன்கள்

நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஷேர் மூலம் லாபம் வரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை மதித்து நடப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். செலவுகளைக் குறைத்துச் சேமிக்க நினைப்பீர்கள். அவ்வப்போது கடன் பிரச்னைகள் தலைதூக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். வேலையாட்களும் பங்குதாரர்களும் மதிப்பார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்தபடி சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். இந்த குரு மாற்றம் உங்களைச் சாதிக்கவைத்து வளம் சேர்ப்பதாக இருக்கும்.

மகரம்: தன்னலம் அற்றவர்களே! எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். ஆனால், ஒரே நேரத்தில் பல வேலைகளையும் முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். உங்கள் திறமை குறைந்து விட்டதாக

குருப்பெயர்ச்சி பலன்கள்

நினைத்துக்கொள்வீர்கள். புகழ், கௌரவம் குறைந்துவிடுமோ என்று ஓர் அச்சம் வந்து செல்லும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்கு வீடு மாறும் சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். கடன் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வட்டியை மட்டும் தந்து சமாளித்துவிடுவீர்கள். தொலைநோக்குடன் சிந்தித்துச் செயல்படுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்களும் உறவினர்களும் வலிய வந்து பேசுவார்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். வேலைச் சுமையால் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசக்கூட முடியாத நிலை ஏற்படும். மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்க வேண்டாம். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புது ஒப்பந்தங்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் அலட்சியப் போக்கை மாற்றிக்கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது. சக ஊழியர்களில் சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். உயரதிகாரிகள் உங்களை அலட்சியப்படுத்துவார்கள். பொறுமை அவசியம். இந்த குருப்பெயர்ச்சி முயற்சியால் முன்னேற வைப்பதாக அமையும்.

கும்பம்: புதுமையை விரும்புபவர்களே! எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் முடிவுக்கு வரும். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். ஆன்மிகப்

குருப்பெயர்ச்சி பலன்கள்

பெரியோர்கள் மற்றும் நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய பதவிகள் தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சில நேரங்களில் உங்களை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.வி.ஐ.பி-க்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புதிய அதிகாரி உங்களுக்கு அனுசரணையாக இருப்பார். சக ஊழியர்களிடம் மதிப்பு மரியாதை கூடும். பாக்கிச் சம்பளப் பணம் கைக்கு வரும். இந்த குருப்பெயர்ச்சி நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றுவதுடன் மன அமைதி தருவதாக அமையும்.

மீனம்: சமாதானப்பிரியர்களே! பண வரவுக்குக் குறைவிருக்காது. ஆனாலும், பயணங்களும் அலைச்சலும்

குருப்பெயர்ச்சி பலன்கள்

இருக்கத்தான் செய்யும். பிடிவாதப்போக்கை மாற்றிக்கொள்வது நல்லது. கடன்கள் குறித்த அச்சம் வந்து செல்லும். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது. வீடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீராகும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் கடந்து லாபம் கிடைக்கும். குறைந்த லாபம் வைத்து விற்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்வது நல்லது. சிலருக்குத் திடீர் இடமாற்றம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். இந்த குருப்பெயர்ச்சி ஒருபக்கம் அலைக்கழித்தாலும், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் செய்வதாக இருக்கும்.