தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஸ்கிப் பண்ணிப் பழகுங்க!

ஸ்கிப் பண்ணிப் பழகுங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கிப் பண்ணிப் பழகுங்க!

ஆன்லைனில் அசத்தல்ரமணி மோகனகிருஷ்ணன்

இணையத்தில் ‘வியூஸ்’களும் `லைக்ஸ்’களும் அள்ளும் இளம் பெண்கள் சிலரைச் சந்தித்தோம்!

ஸ்கிப் பண்ணிப் பழகுங்க!

‘எந்திரன் 2.0’ ஆடியோ லாஞ்ச்சில் பர்ஃபார்ம் பண்ணினேன்!

யூடியூபில் பாடல்களுக்கு ‘கவர்’ செய்வது என்கிற கான்செப்ட் ரொம்பப் பிரபலம். அதாவது, ஹிட்டான ஒரு பாடலுக்கு, தங்களின் ஸ்டைலில் சோலோவாகவோ, குழுவாகவோ பாடலோ, நடனமோ செய்வது. ‘கவர்’ ரசிகர்கள் அனைவரும் அறிந்த பாடகி, அபர்ணா நாராயணன்... சென்னைப் பெண்.

``ஏ.ஆர்.ரஹ்மானோட கே.எம் மியூசிக் அகாடமியில என்னோடு படிச்சிட்டிருந்த நண்பர்கள், இளையராஜா சாருக்காக ஒரு கவர் பண்ணப்போறதா சொல்லி, ‘நீயும் சேர்ந்துக்கிறியா’னு கேட்டாங்க. அந்தக் ‘கவர்’ செம ஹிட். நாங்க கல்லூரி நண்பர்கள் இணைந்து செய்த ‘எலுமிச்சை’ குறும்படமும் சூப்பர் ஹிட். சமீபத்தில் ‘எந்திரன் 2.0’ ஆடியோ லாஞ்ச்ல பர்ஃபார்ம் பண்ணக் கிடைச்ச வாய்ப்பு, மறக்க முடியாதது. இப்போ இசைதான் என் முழுநேர வேலை. நான் பாடின வீடியோக்களை  ஃபேஸ்புக்,  யூடியூபில் தொடர்ந்து அப்லோடு செய்துட்டிருக்கேன். ஆரோக்கியமான கமென்ட்டுகளை மதிச்சு என் வேலைகளில் திருத்த வேண்டியவற்றைத் திருத்திக்குவேன். என் பாடலை விட்டுட்டு, என் உடலைப் பற்றிப் போடப்படும் கமென்ட்டு களை ஜஸ்ட் ஸ்கிப் செய்துடுவேன். இன்னிக்கு ஆன்லைனில் சாதிக்க ஆசைப்படுற பெண்கள் கற்க வேண்டிய பால பாடம், இதுதான்!”

ஸ்கிப் பண்ணிப் பழகுங்க!

‘பொண்ணுக்கு மீடியா சரிவராது’னாங்க!

‘எரும சாணி ஹரிஜா’ ஆன்லைனில் அவ்வளவு பிரபலம். ‘எரும சாணி’ யூடியூப் சேனலிலும் குறும்படங்களிலும் கலக்கிவரும் கோவைப் பெண்.

“விஸ்காம் படிக்கும்போதே நிறைய குறும்படங்களில் நடிச்சேன். ‘அப்பறம்’ குறும்படம் செம ஹிட். உடனே உறவினர்கள் எல்லோரும், ‘பொண்ணுக்கு மீடியா சரிவராது’னு எங்க வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாங்க. ஆனா, பெற்றோர் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணினாங்க. பட வாய்ப்புகூட வந்தது. ஆனா, முதல்ல டிகிரியை முடிச்சுக்கு வோம்னு இருந்தேன். இப்போ ‘த்ரீ மாங்க்ஸ்’னு ஒரு நிறுவனத்தை நண்பர்கள் மூன்று பேர் இணைந்து நடத்து றோம். என வருங்கால கணவரும் நானும் ஏற்கெனவே குறும்படங்களில் சேர்ந்து வேலைபார்த்திருக்கோம். கல்யாணத்துக்குப் பிறகும் என் நடிப்பும், நாங்க சேர்ந்து வேலைபார்க்கிறதும் தொடர ணும்னு முடிவு பண்ணியிருக்கோம்!”

ஸ்கிப் பண்ணிப் பழகுங்க!

மும்பைக்கு ஷிஃப்ட் ஆகிடலாம்னு பார்க்கிறேன்!

ஸ்டாண்ட் அப் காமெடி, பெரும்பாலும் ஆண்களால் நிரம்பி வழியும் துறை. அதில் கலக்கிக்கொண்டிருக்கிறார் நிவேதிதா பிரகாசம்.

‘`ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். மேற்கத்திய நாடுகளில் ஸ்டாண்ட் அப் காமெடி பிரபலமான அளவுக்கு இங்கு இல்லை. ஆனாலும், எனக்கு அதுமேல அவ்வளவு ஈர்ப்பு. 2014-ல் ஒரு கஃபேயில் என்னுடைய முதல் ‘ஓப்பன் மைக்’ பர்ஃபார்மன்ஸை செய்து பார்த்தேன். இப்போ TLC India-வின் ‘குயின்ஸ் ஆஃப் காமெடி’  நிகழ்ச்சி எனக்குப் பெரிய பிளாட்ஃபார்ம் கொடுத்திருக்கு. சீக்கிரமே மும்பைக்கு ஷிஃப்ட் ஆகிடலாம்னு பார்க்கிறேன்!”