தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஆதார் கார்டு

ஆதார் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதார் கார்டு

அறிவோம் அனைத்தும்ஞா.சுதாகர் - இன்ஃபோகிராபிக்ஸ்: மகேஷ்

ஆதார் கார்டு

ந்தியாவில் உயிர்வாழ்வதற்கான கட்டாயத் தேவைகளில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது ஆதார் கார்டு. மொபைல் எண் தொடங்கி சிலிண்டர் மானியம் பெறுவது வரை, ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகிக்கொண்டிருக்கிறது. ஆதார் கார்டு பெற என்ன செய்ய வேண்டும்? ஆதார் கார்டு பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்? இதோ... A டு Z ரவுண்டு அப்...

ஆதார் கார்டு

* ஆதார் கார்டு பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. ஆதார் பதிவு மையங்கள், சிறப்பு முகாம்களில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்தச் சேவை முழுவதும் இலவசம். உங்கள் பகுதியில் இருக்கும் ஆதார் பதிவு மையங்கள் பற்றித் தெரிந்துகொள்ள https://appointments.uidai.gov.in என்ற முகவரியில் தேடலாம்.

ஆதார் கார்டு

* அடையாளச்சான்று மற்றும் முகவரிச்சான்று ஆகிய இரண்டு ஆவணங்களே ஆதார் கார்டு பெறுவதற்குப் போதுமானவை. 18 வகையான அடையாளச் சான்றுகள் மற்றும் 35 வகையான முகவரிச்சான்றுகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். நம் புகைப்படம், பத்து விரல் ரேகைகள் மற்றும் கருவிழிப் பதிவு ஆகியவை சேகரிக்கப்படும்.

ஆதார் கார்டு

* பெயர், வயது, பிறந்த தேதி போன்ற விவரங்களுடன் நம்முடைய மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்களும் பதிவு செய்யப்படும். இந்த இரண்டு விஷயங்களும் கட்டாயம் இல்லைதான். ஆனால், அவசியம் பதிவு செய்துவிடுங்கள். காரணம், இன்டர்நெட் பேங்கிங், வருமானவரித் தாக்கல் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைந்திருப்பது அவசியம்.

ஆதார் கார்டு

* பதிவு செய்தபின், அதிகபட்சம் 90 நாள்களுக்குள் ஆதார் கார்டு கிடைத்துவிடும். இதுகுறித்த தகவல்கள் எஸ்.எம்.எஸ் மூலமாகத் தெரிவிக்கப்படும். ஆதார் இணையதளத்திலும் அறிந்துகொள்ளலாம்.

ஆதார் கார்டு

* ஆதார் எண் ஒதுக்கப்பட்டபின்பு, UIDAI இணையதளத்திலேயே நம் இ-ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நிஜ ஆதார் கார்டுக்கு உள்ள அதே மதிப்பு இ-ஆதாருக்கும் உண்டு.

ஆதார் கார்டு

* பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை மாற்ற வேண்டுமெனில் அருகில் இருக்கும் ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டும். இதற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆதார் கார்டு

* ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கைரேகை மற்றும் கருவிழிப் பதிவுகள் செய்யப்படுவதில்லை. ஐந்து வயது நிறைவடைந்த பின்பே, அவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும் பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்வதிலிருந்து விதிவிலக்கு உண்டு.

ஆதார் கார்டு

* ஆதார் கார்டில் இருக்கும் முகவரியில் ஏதேனும் பிழை இருப்பின், அதைச் சரி செய்வதற்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். இதற்கு மின்னஞ்சல் அல்லது மொபைல் எண், ஆதார் கார்டுடன் இணைந்திருப்பது அவசியம்.

ஆதார் வாங்கிய பின்பு என்ன செய்ய வேண்டும்?

* ஆதார் இணையதளத்துக்குச் சென்று, இ-ஆதாரை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை ஆன்லைன் தளங்களில் ஆவணமாகப் பயன்படுத்த முடியும்.

* மத்திய அரசின் பீம் ஆப், UPI ஆப், ஆதார் பே உள்ளிட்ட வசதிகளில் ஆதார் எண் மூலமாகப் பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.

* அரசின் அதிகாரபூர்வமான ஆதார் ஆப் mAadhaar. இதை மொபைலில் டவுன்லோடு செய்து, ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் போதும்... இதையே ஆதார் கார்டாகப் பயன்படுத்த முடியும்.

* பான் எண், வங்கி எண் போலவே ஆதார் எண்ணும் மிக முக்கியமானது. எனவே, உங்கள் ஆதார் எண்ணை பொது வெளியில் பகிர வேண்டாம்.

எந்தச் சேவைகளுக்கெல்லாம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

ஆதார் கார்டு