தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தீபக்கோலத் திருவிழா

தீபக்கோலத் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
தீபக்கோலத் திருவிழா

தீபக்கோலத் திருவிழா

தீபக்கோலத் திருவிழா

தீபக்கோலங்களின் சிறப்புகள்

கோலங்களில் நவகிரகக் கோலம், மகாலட்சுமி கோலம், ஸ்ரீசக்கரக் கோலம் என்று பல தெய்விகக் கோலங்கள் உள்ளன. ஸ்ரீசக்கரக் கோலம் மிகவும் விசேஷமான கோலமாகும். ஸ்ரீசக்கரத்தை அழகாக வரைந்து, சுற்றிலும் தீபங்களை ஏற்றிவைப்பதுடன், கோலத்தின் மையப்புள்ளியான பிந்து ஸ்தானத்தில் ஒரு தீபம் ஏற்றிவைப்பது சிறந்த அம்பிகை வழிபாடாகவும் அமை கிறது. ஸ்ரீசக்கரத்தைச் சுற்றிலும் உள்ள தீபங்கள் அம்பிகையின் பரிவார தேவதைகளாகவும், பிந்து ஸ்தானத்தில் உள்ள தீபம் அம்பிகையாகவும் பாவித்து வழிபடலாம். இதனால், அம்பிகையின் பூரண அருள் நமக்குக் கிடைக்கும்.

தீபங்களின் வகைகள்

விளக்குகளில் மண்ணால் ஆன அகல் விளக்கு, குத்து விளக்கு, தூண் விளக்கு, அன்ன விளக்கு, பாவை (பதுமை) விளக்கு, தூண்டா விளக்கு, அஷ்டலட்சுமி விளக்கு, கிளிக்கொத்து விளக்கு, பீங்கான் விளக்கு, மா விளக்கு எனப் பலவகை விளக்குகள் உள்ளன. பூஜை அறையில் காமாட்சி விளக்கும், இரண்டு பக்கமும் குத்து விளக்குகளும், முகப்பில் கோதை விளக்கும், கோலத் தின் நடுவே பதுமை விளக்கும், வாசற் படியிலும் கோலத்தைச் சுற்றிலும் அகல் விளக்குகளும் ஏற்றிவைப்பார்கள்.

தீபக்கோலத் திருவிழா

கிழமைகளும் கோலங்களும்

ஞாயிறு - செந்தாமரைக் கோலம்
திங்கள் - அல்லிமலர்க் கோலம்
செவ்வாய் - வில்வ இலைக் கோலம்
புதன் - மாவிலைக் கோலம்
வியாழன் - துளசிமாடக் கோலம்
வெள்ளி - எட்டு இதழ் தாமரைக் கோலம்
சனி - பவளமல்லிக் கோலம்

மேலும், பௌர்ணமிக்குத் தாமரை மலர்க் கோலம்; விழா நாள்களில் இலைக் கோலம்; வீட்டுச் சுவரையொட்டி பார்டர் கோலம் என்று கோலம் போட்டு தீபம் ஏற்றிவைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்.

* சூரிய உதயத்துக்கு முன்னர், குளிர்ந்த சுத்தமான நீரில் பசுஞ்சாணம் கலந்து வாசல் தெளித்துக் கோலம் போடுவது சிறந்தது.  தெற்கு நோக்கியும் தெற்கில் முடியும்படியும் கோலம் போடக் கூடாது.

தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா
தீபக்கோலத் திருவிழா

தீபக்கோலத்தின் நன்மைகள்

கோலம் என்றாலே அழகுதான். கோலத்தின் மீது தீபமும் ஏற்றி வைத் தால் அழகுடன் பிரகாசமும் இணைந்து அழகுக்கு ஒளி சேர்ப்பதுடன், பல நற் பலன்களைத் தருவதாகவும் அமையும் என்பது நம் முன்னோர் கண்டறிந்த அனுபவபூர்வமான உண்மை.

வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் கோலமிடுவது ஓர் அற்புதமான கலை மட்டுமல்ல; நம் வாழ்வியலும்கூட. கோலமிடுவது பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்துக்கு நாம் செய்யும் கௌரவமாகவும் கருதப்படுகிறது. அந்தக் கோலத்தின் மீது அற்புத ஆற்றல் கொண்ட ஐந்து எண்ணெய்களின் சேர்க்கையினாலான தீபம் விளக் கேற்றும் எண்ணெய்கொண்டு தீபம் ஏற்றுவது, பூமி தேவிக்கு நாம் செய்யும் ஆரத்தியாகவும் அமைகிறது.

கோலத்தில் இடம்பெறும் புள்ளிகள் வாழ்க்கையில் எதிர்ப்படும் சிக்கல்களாக வும், அதில் இடம்பெறும் வளைவுகள் சிக்கல்களுக்குரிய தீர்வுகளைச் சொல்லும் பாதைகளாகவும் கருதப் படும். இதனால், கோலமிடுவது ஒழுக்கத்தையும் கூர்ந்து கவனிக்கும் திறனையும் நமக்குத் தருகிறது.

கோலத்தின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபமானது பூமி தேவிக்கான ஆரத்தியாக மட்டுமில்லாமல், எந்தச் சூரியஒளியின் பிரதிபலிப்பாகத் தீப ஒளியைப் போற்றுகிறோமோ, அந்தச் சூரியனின் உதயத்தை வரவேற்று வழிபடும் ஆராதனையும்கூட.

காலையில் கோலத்தின் மீது தீபம் ஏற்றுவது சூரியனை வரவேற்கும் ஆரத்தி என்றால், மாலையில் கோலமிட்டு தீபம் ஏற்றுவது, நாளெல்லாம் நமக்கு உயிர்ச் சக்தி அருளிய சூரிய பகவானுக்கு நம்முடைய நன்றி காணிக்கை.

கோலத்தின் மீது தீபம் ஏற்றிவைப்பது நம் மனதில் தெளிவை ஏற்படுத்தி, சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் கருவியாக அமைகிறது. கோலத்தின் மீது ஏற்றிவைக்கும் தீபத்தின் மெல்லிய வெம்மையானது, பூச்சிகள் எதுவும் நம் வீட்டுக்குள் வராமல் தடுக்கும் கவசமாகிறது.

- ச.மோகனப்பிரியா