
பெண்களுக்குத் தடையாக இருப்பது எது?
நம் நாட்டின் ஜி.டி.பி தற்போது 7.2 சதவிகிதமாக உள்ளது. நம் நாட்டிலுள்ள பெண்கள் இன்னும் அதிகளவில் வேலைக்குச் செல்லும்பட்சத்தில், நமது ஜி.டி.பி 9 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி காணும் என்கிறது உலக வங்கி.

நம் நாட்டில் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதில் தடையாக இருப்பது எது என நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வி கேட்டிருந்தோம். இந்த சர்வேயில் 52% பேர் பாதுகாப்பின்மை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பில்லையா அல்லது பொது இடத்தில் பாதுகாப்பில்லையா என்பது ஆய்வுக்குரியது. எங்கிருந்தாலும் பெண்கள் பாதுகாப்பு டன் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் நமது அரசாங்கங்கள் எடுக்க வேண்டும். இந்த சர்வேயில் கலந்துகொண்ட வர்களில் சுமார் 29% பேர் ஆண்களின் ஈகோதான் என்று சொல்லியிருக் கிறார்கள். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்படி நினைத்திருக்க லாம். ஆனால், இந்தத் தலைமுறையினர் கணவன் - மனைவி இருவரும் சம்பாதிப்பதையே விரும்புகின்றனர்.

இந்த சர்வேயில் கலந்துகொண்ட வர்களில் 19% பேர் பெண்களின் அறியாமை என்று சொல்லியிருக் கின்றனர். வீட்டு வேலை மட்டுமே கதி என்று நினைக்காமல், வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற உணர்வு பெண்களிடம் இன்னும் அதிகரிக்க வேண்டும்.

இதெல்லாம் விரைவில் நடக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு!
- ஏ.ஆர்.கே