Published:Updated:

``இது எங்களைக் கொல்றதுக்கான மசோதா!’’ - திருநங்கை கிரேஸ் பானு

``இது எங்களைக் கொல்றதுக்கான மசோதா!’’ - திருநங்கை கிரேஸ் பானு
News
``இது எங்களைக் கொல்றதுக்கான மசோதா!’’ - திருநங்கை கிரேஸ் பானு

``இது எங்களைக் கொல்றதுக்கான மசோதா!’’ - திருநங்கை கிரேஸ் பானு

Published:Updated:

``இது எங்களைக் கொல்றதுக்கான மசோதா!’’ - திருநங்கை கிரேஸ் பானு

``இது எங்களைக் கொல்றதுக்கான மசோதா!’’ - திருநங்கை கிரேஸ் பானு

``இது எங்களைக் கொல்றதுக்கான மசோதா!’’ - திருநங்கை கிரேஸ் பானு
News
``இது எங்களைக் கொல்றதுக்கான மசோதா!’’ - திருநங்கை கிரேஸ் பானு

நாடாளுமன்றத்தில் நேற்று சமூகநீதி மற்றும் நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், `திருநங்கைகள் சட்டம் -2016' என்ற சட்டமசோதாவை அறிமுகம் செய்தார். அது தொடர்பாகப் பேசும்போது, `திருநங்கைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி போன்றவற்றை வழங்கவும், மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. அவர்களைப் பிச்சை எடுக்கக் கட்டாயப்படுத்தினாலோ, பொது இடங்களில் அனுமதிக்க மறுத்தாலோ அல்லது உடல்ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ தாக்குதல் நடத்தினாலோ அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது' என்றார். 

இந்த மசோதாவைத் திருநங்கைகள் எதிர்க்கிறார்கள். என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள சமூகச் செயற்பாட்டாளர் கிரேஸ் பானுவிடம் பேசினோம்.

``சமூகநீதி மற்றும் நலத்துறை மந்திரி `திருநங்கைகள் சட்டம் - 2016' என்கிற ஒரு மசோதாவைக் கொண்டுவந்தப்போ, அதைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கு வைச்சாங்க. நாங்க அந்தப் பில்லை படிச்சுப் பார்க்கும்போது, அதில் திருநங்கை, திருநம்பின்னு அவங்க யாரைக் குறிப்பிடுறாங்கங்குற முறையே தவறாக இருந்துச்சு. அதே மாதிரி, புதுசா வர்ற திருநங்கையை மற்றொரு திருநங்கை ஆதரிக்கக் கூடாதுன்னும் குறிப்பிட்டிருந்தாங்க. மாற்றுப் பாலினத்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறணும்னு நினைச்சாங்கன்னா அவங்க முதல்ல கோர்ட்டுக்குத்தான் வரணும், கோர்ட் அவங்க எங்க போகணும்ங்குறதை முடிவுபண்ணி அவங்களுக்கென அமைக்கப்படுகிற ஹோம்க்கு அனுப்புவாங்கன்னு அந்த மசோதாவில் குறிப்பிட்டிருந்தாங்க. அது இரண்டாவது தவறு. 

திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பைப் பற்றி எந்தத் தகவலும் அதில் இல்லை. இடஒதுக்கீடு தொடர்பா முழுமையான விவரங்கள் எதுவும் இல்லை. பிச்சை எடுக்குறவங்க, பாலியல் தொழில் செய்றவங்களுக்கு இரண்டு ஆண்டு தண்டனைன்னு குறிப்பிட்டிருக்காங்க.

கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடுன்னு எதுவுமே கொடுக்காம அவங்க வேற வழியே இல்லாம வயிற்றுப் பொழப்புக்காக இந்தத் தொழிலில் ஈடுபட நேரிடும்போது, அவங்களைக் கைது செய்வோம்னு சொல்றது எந்த வகையில் சரியாக இருக்கும்? திருநங்கைச் சான்றிதழ் கொடுக்குறதுக்குன்னு ஒரு கமிட்டி இருப்பாங்களாம். அவங்ககிட்ட போய்தான் நாங்க திருநங்கைங்கிற சான்றிதழே வாங்கணுமாம். இதெல்லாம் நடைமுறையில் கொஞ்சமும் சாத்தியம் கிடையாது. இதற்காகத்தான் இதை எதிர்த்து நாங்க இந்தப் பில் பாஸாகும் போதெல்லாம் போராட்டம் நடத்திட்டு இருந்தோம். திருநங்கைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மாதிரி மசோதாவை ரெடி பண்ணி அந்த மசோதவை பாராளுமன்றத்துக்குக் கொண்டுபோய் எல்லா எம்.பி-களையும் சந்திச்சுப் பேசுனோம். அங்கே ஒரு டிஸ்கஷன் வைச்சாங்க. அதில் நானும், என்னுடன் சேர்ந்து சில திருநங்கைகளும் நாங்க ரெடி பண்ணின மசோதாவைப் பற்றிப் பேசினோம். மத்திய அரசு, 'இதை எங்களால் ஏத்துக்க முடியாது. நாங்களே ஒரு மசோதாவை நிறைவேற்றுகிறோம்'னு சொல்றாங்க. நேற்று அந்த மசோதாவை மக்கள்கிட்ட விளக்காமல் நேரடியா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்றாங்க. அங்குள்ள எம்.பி-களில் நிறைய பேர் அந்த மசோதாவை எதிர்த்துப் பேசுறாங்க. அது எதையுமே கேட்காமல், அரசு சொன்ன மசோதாவை நிறைவேற்றிட்டாங்க. இது முழுக்க, முழுக்க டிரான்ஸ் கம்யூனிட்டியை அமுக்குறதுக்கான முடிவு.

இந்த மசோதாவால், திருநங்கைகளுக்குத் துளிகூட நல்லது நடக்கப்போவது கிடையாது. இந்தப் பில், விஷம் நிறைந்த பில். எங்களைக் கொல்றதுக்கான மசோதா. அவங்க யாருக்கும் திருநங்கைகள் பற்றின புரிந்துணர்வு இல்லை. எங்களை ஒடுக்குறதுக்காகவே இந்த மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டுவந்துருக்கு. நிச்சயம் இந்த மசோதாவை எதிர்த்து நாங்க போராடுவோம். விரைவில் போராட்டக்களத்தில் சந்திப்போம்’’ என்றார்.

2016-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க எம்.பி திருச்சி சிவா இது தொடர்பாகக் கொண்டு வந்த தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.