தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

உங்களுடைய வாழ்க்கையில் எந்தக் காலகட்டத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறீர்கள்?

- ஷீலா ராஜ்குமார், நடிகை

``எ
ன்னுடைய எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானித்த கல்லூரி நாள்களையே மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன். நான் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் பரதநாட்டியம் பயின்றேன். காலை ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு பத்து மணிவரை பயிற்சி இருக்கும்.  விளையாட்டுதனத்துக்கெல்லாம் இடம்கொடுக்காமல் தினம்தினம் இப்படி பயிற்சியாகத்தான் என் கல்லூரி வாழ்க்கை சென்றது.  ‘சொந்தக்காலில்தான் நிற்க வேண்டும்’ போன்ற நல்ல விஷயங்களைக் கல்லூரியில்தான் கற்றுக் கொண்டேன். அதனால், கல்லூரிக் காலம்தான் என் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம்.''

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

உங்களுக்கு அதிக பொழுதுபோக்கு தந்த வயது?

- `ஆர்ஜே' சிவசங்கரி, பண்பலை தொகுப்பாளினி

“எ
ன்னுடைய 22 வயசுல ‘மிர்ச்சி’ல சேர்ந்தேன். வேலைக்குச் சேர்ந்த புதுசுல செம ஜாலியா இருந்துச்சு. அந்த டைம்ல என்னோடு பணிபுரிந்தவர்களும் ஜாலி டைப்தான். வேலைக்கு வேலையும் நடக்கும்; காமெடியா அரட்டை அடிக்கிறதுன்னு நல்லா பொழுதும் போகும். எந்தப் படம் ரிலீஸ் ஆனாலும், வேலை செய்ற எல்லாரும் ஒண்ணா படத்துக்குக் கிளம்பிடுவோம். மதியம் சாப்பிடணும்னா ‘டக்’குன்னு வெளியே கிளம்பிடுவோம். அப்போ என்கூட  அஞ்சனா, வித்யா, லாவண்யா, ம.கா.பா.ஆனந்த்னு ஒரு பெரிய டீமே இருந்தாங்க.இப்போ அந்தக் குழுல இருந்த எல்லாரும் என்னை தனியா விட்டுட்டுப் போயிட்டாங்க. என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த இனிமையான நாள்கள் அதுதான்.''

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

எந்த வயதில் உங்களு டைய காதல் வாழ்க்கை ஆரம்பித்தது?

 - ஜா.தீபா, எழுத்தாளர்

“என் 24 வயதில்தான் என் கணவரை முதலில் சந்தித்தேன். நானும் அவரும் நாகா சாரிடம் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்திருந்தோம். அவர் ரைட்டர்; நான் அசிஸ்டென்ட் டைரக்டர்.  வேலை செய்துட்டு இருக்கும்போது ஒரு நோட்டிலிருந்து பேப்பரில் கையெழுத்து ரொம்ப அழகாக இருந்தது. என்னுடைய கையெழுத்து ரொம்ப மட்டமாக இருக்கும். உடனே இந்த பேப்பர் யாரோடது, யாரோடதுன்னு  மதியம் வரைக்கும் தேடினேன். அவரை கண்டுபிடிக்கவே முடியலை. அந்தக் கையெழுத்துக்குச் சொந்தக்காரரைப் பார்க்கணும் என்கிறதுக்காகவே, மாலை வரை காத்திருந்து அவரைச் சந்திச்சேன். அவர்கிட்ட எடுத்ததுமே, ‘நீங்க எந்த பேனாவுல சார் எழுதுறீங்க’னு கேட்டேன். அப்படியே பேச ஆரம்பிச்சு, பழக ஆரம்பிச்சோம். இப்படித்தான் எங்க காதல் வாழ்க்கை ஆரம்பமானது!’’

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

எந்த வயதுக்குள், எந்தக் கனவை நிறைவேற்றிவிட வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?

- மணிமேகலை, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

“எ
னக்கு டான்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் டான்ஸ்ல ஆர்வம் உள்ளவரா பார்த்து காதலிச்சு, திருமணம் செஞ்சிக்கிட்டேன். கூடிய சீக்கிரம் முப்பது வயதுக்குள் ஒரு நடனப்பள்ளி ஆரம்பிச்சு இந்தியாவிலேயே நம்பர் ஒன்னா அதைக் கொண்டு வரணும். டான்ஸ் சேரணும்னு ஆசைப்படுறவங்களாம், ‘மணிமேகலை நடத்துறாங்களே... அங்க சிறப்பா கத்துக்கலாம்’்னு சொல்ற அளவுக்கு வளரணும். சூர்யவம்சம் படத்தில் வர்ற மாதிரி நிறைய கிளைகள் திறக்கிற அளவுக்குக்கூட ஐடியாக்கள் இருக்கு. ஆசையோடு நிற்காமல் அதை செயல்படுத்துவதற்காக நிறைய திட்டங்கள் கைவசம் வெச்சிருக்கேன். இன்னும் இரண்டு வருடங்களில் ஆரம்பித்து விடுவேன்!''

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

எந்த வயதில் நீங்கள் படித்த புத்தகம் உங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது?

- கௌசல்யா சங்கர், சமூகச் செயற்பாட்டாளர்


“தோ
ழர் தியாகு தன் சிறைச்சாலை அனுபவங்களைப் பற்றி எழுதிய ‘சுவருக்குள் சித்திரங்கள்’ புத்தகத்தை என் 21 வயதில் வாசித்தேன். தவறு செய்துவிட்டார்கள் என்பதற்காகச் சிறைச்சாலையில் மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல் நடத்தப்படும் கொடுமைகளையும் அத்துமீறல்களையும் ஆத்மார்த்தமாக விவரித்திருப்பார். ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குள் ஆழப்பதிந்துவிட்டன.’’

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

உங்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய வயது?

- ‘மெர்சி’ சித்ரா, செய்தி வாசிப்பாளர்

“சி
ன்ன வயசுல இருந்தே டீச்சர் வேலைதான் என் கனவு. பி.ஏ, பி.எட்லாம் முடிச்சபிறகும்கூட நாம டீச்சராதான் ஆகப்போறோம்னு நினைச்சிட்டு இருந்தேன். டீச்சர் வேலையும் தயாராக இருந்தது. சரி, உடனே சேர வேண்டாம்னு ஓர் அனுபவத்துக்காக 21 வயதில் ‘நியூஸ் ரீடிங்’ல  சேர்ந்தேன்.  அதற்கு முன் ஒருநாள்கூட நான் செய்தி வாசிப்பேன்னு நினைச்சே பார்த்ததில்லை. ஆனால், ஆறு வருடங்களாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கேன். இப்போ டீச்சர் கனவெல்லாம் இல்லை. இதுவே நல்லா தானே இருக்குன்னு செய்தி வாசிப்பாளரா தொடர்ந்துட்டு வர்றேன்!’’

ஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்?

நீங்கள் பணிபுரியும் துறையில் எந்த வயதில் நுழைந்தீர்கள்?

-  எல்.சூர்யா, தடகள வீராங்கனை

“11
வயதிலிருந்து தடகளப் போட்டிகளுக்கான  பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அப்பா தேசிய தடகளப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியிருக்காங்க. சரியான பொருளாதார வசதி இல்லாததால் அப்பாவால் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல்  போய்விட்டது. இருந்தாலும், அவர் நிறைய பேருக்குத் தடகளப் பயிற்சி கொடுத்து வருகிறார். அவர் கிரவுண்டுக்குப் பயிற்சி கொடுக்கச் செல்லும்போது நானும்கூட சேர்ந்து ஓடுவேன். அதைக் கவனித்துதான் எனக்குப் பயிற்சிகள் தர ஆரம்பித்தார். அப்படித்தான் என்னுடைய தடகளப் பயிற்சி ஆரம்பமானது!''

-  ப.தினேஷ்குமார்