மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்!

“வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை; அசலுக்கு எந்தப் பங்கமும் வரக் கூடாது’’ என்பதில் நம்மவர்கள் படுகுறியாக இருப்பார்கள். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப கெட்டி. இதுமாதிரியானவர் களுக்கு ஏற்றவை கடன் பத்திரங்கள்!

நம் நாட்டில் வங்கிகள் போல, அரசும் கடன் பத்திரங்களை அவ்வப்போதைக்கு வெளியிடு கிறது. சிலவற்றில் நாமே நேரடியாக முதலீடு செய்ய முடியும் (சில வகை பத்திரங்களை மியூச்சுவல் ஃபண்ட் போன்ற கம்பெனிகள் மட்டுமே வாங்க முடியும்).

இவற்றில் வட்டி வருமானம் தவிர, நிகர சொத்து மதிப்பு (NAV) உயர்ந்து லாபம் வரவும் வாய்ப்புண்டு. சில நேரம், மதிப்பு குறையலாம்; அப்போது முதிர்வு காலம் வரை இந்தப் பத்திரங்களை வைத்திருந் தால், நாம் போட்ட முதல், நஷ்டமின்றி நமக்குத் திரும்பக் கிடைக்கும். இவற்றுக்கு அரசு உத்தரவாதம் இருப்பது கூடுதல் சிறப்பு. இப்போது விற்பனையாகும் அரசுப் பத்திரங்கள் தரும் வட்டி 7.75%.

என்.ஹெச்.ஏ.ஐ (NHAI), பி.எஃப்.சி (PFC) போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் வரி இல்லாப் பத்திரங்களை (Tax Free Bonds) வெளியிடுகின்றன. இதில் வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், வரி இல்லாக் காரணத்தால், 20%-30% வரி வரம்பில் உள்ளவர்களுக்கு ஏற்றவை.

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்!

ஆழம் பார்த்து…

தனியார் கம்பெனிகளும் கடன் பத்திரங்கள் வெளியிடுகின்றன. இந்த கம்பெனிகள், தங்களின் தொழில் முன்னேற்றத்துக்காக வங்கியில் கடன் வாங்குவதைத் தவிர்த்து, சந்தையில் நம் போன்ற முதலீட்டாளர்களிடம் கடன் பத்திரங்களை விற்கின்றன. இதற்கு இந்த கம்பெனிகள் தரும் வட்டி விகிதம் கொஞ்சம் அதிகம். வட்டிக்கு மட்டும் ஆசைப்பட்டு, ஏதாவது கம்பெனி வெளியிட்ட பத்திரத்தில் காசைப் போட்டுவிடக் கூடாது. முதலீடு செய்யும் இந்த கம்பெனிகளின் தரக் குறியீடுகளைக் (Rating) கவனிப்பது முக்கியம். தரம் குறைந்த கம் பெனிகள் மிக அதிக வட்டியைத் தரத் தயாராக இருக்கும். ஆனால், இவை அதிக ரிஸ்க் கொண்டவை!

நாங்க புதுசா…

கம்பெனிகள் வெளியிடும் கடன் பத்திரங்களில் நாம் நேரடியாக முதலீடு செய்ய பயமாக இருக்கிறது என்கிறவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகள்மூலம் கடன் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் மூலமான கடன் பத்திரங்களில் மூன்று விதங்களில் வருமானம் வரும் வாய்ப்புள்ளது. ஒன்று, வட்டி வருமானம்; இன்னொன்று, முதலீட்டு மதிப்பு கூடுவதால் வரும் லாபம். மூன்றாவதாக, வரி விதிப்பில் உள்ள சலுகைகளாலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிக லாபம் தருகின்றன.

ஏழு கடல்

மியூச்சுவல் ஃபண்டில் ஏழு வகையான கடன் திட்டங்கள் உள்ளன. கில்ட் ஃபண்டுகள் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இதன் தினசரி மதிப்பு அதிக ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். இதிலும், இன்கம் ஃபண்டிலும், அதிக ரிஸ்க் திறன் உடையவர்கள் முதலீடு செய்யலாம்.

ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் மற்றும் கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுகள் 2-3 வருட கால அளவில் செயல்படும். இந்த இரண்டுமே குறைந்த ரிஸ்க் உடையவை என்றாலும், கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுகள் சற்றுக் குறைந்த தரக் குறியீடு கொண்ட கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்து, லாபத்தை அதிகரிப்பதால் சற்று ரிஸ்க் அதிகம். இந்த நான்குமே ‘ஓப்பன் எண்டட் ஃபண்டுகள்’. அதாவது, நினைத்த நேரத்தில் வாங்கவோ, விற்கவோ இயலும்.

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்!

ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் என்பதில் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி வெளியிடும் போதுதான் முதலீடு செய்ய முடியும். வெளியேறும் காலமும் முதலிலேயே முடிவு செய்யப்பட்டுவிடும். இதை ‘க்ளோஸ் எண்டட் ஃபண்டுகள்’ என்பார்கள். வருமானமும் வேண்டும்; 24 மணி நேரத்தில் பணமாக்கவும் முடிய வேண்டும் என்பவர்கள் லிக்விட் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். சேவிங்ஸ் அக்கவுண்ட்டைவிட அதிக வருமானம் கிடைக்கும் என்பதால், சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட் இது. மன்த்லி இன்கம் பிளான்கள் என்பது கடன் சார்ந்த கலப்பு வகை. 75%-80% கடனிலும், 20%-25% பங்குகளிலும் முதலீடு செய்வதால் வருமானமும் அதிகம்; ரிஸ்க்கும் அதிகம்.

இப்படி எல்லாவிதமான முதலீட்டு வாய்ப்பு களும் நம் நாட்டில் கிடைப்பதால், பிற நாடு களின் முதலீடுகளும் இங்கு வந்து குவிகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் 2% வட்டிகூடக் கிடைக்காத நிலையில், நம் நாட்டில் கிடைக்கக் கூடிய 6.5 சதவிகிதத்துக்கு மான வருமானம் அவர்களைச் சுண்டி இழுக்கிறது. ஆனால், நம்மில் பலர் இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யாமல், ஒதுங்கியே நிற்கிறோம். 

என்ன, நீங்களும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யத் தயாரா?

ப(ய)ணம் தொடரும்!

- சுந்தரி ஜகதீசன்,  படம் : ப.சரவணகுமார்