Published:Updated:

கொஸ்டீன் ஹவர்- ஐ.க்யூ குறைபாட்டட சரிசெய்வது எப்படி ?

கொஸ்டீன் ஹவர்- ஐ.க்யூ குறைபாட்டட சரிசெய்வது எப்படி ?

##~##

''என்னுடைய மகள் ஆரம்பக்கல்வி தொட்டே படிப்பில் சுமார்தான். தட்டுத்தடுமாறி ஒன்பதாம் வகுப்பு வந்து விட்டாள். அவளுடைய ஆசிரியர்கள், 'உங்கள் மகளுக்கு ஐ.க்யூ குறைவாக இருக்கிறது. குறிப்பிட்ட பாடங்களை அவள் புரிந்துகொள்வது பெரும்பாடாக இருக்கிறது’ என்கிறார்கள். மகளின் எதிர்காலம் கருதி நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன?''

- பவானி, பெரம்பலூர்

ஒய்.சிம்சன், சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி நிபுணர், வேலூர்:

கொஸ்டீன் ஹவர்- ஐ.க்யூ குறைபாட்டட சரிசெய்வது எப்படி ?

''உங்கள் மகளின் ஆசிரியர்கள், அவளிடம் 'ஸ்பெஸிஃபிக் லேர்னிங் டிஸ்எபிலிட்டி' (Specific Learning Disability) எனப்படும் குறிப்பிட்ட பாடம் கற்கும் திறன் குறைபாடு எனும் பிரச்னையை அடையாளம் கண்டிருக்கிறார்கள். இம்மாதிரியானவர்கள் 'இன்டெலக்சுவல் அண்ட் டெவலப்மென்ட் டிஸ்எபிலிட்டி' (Intellectual and Develoment Disability)எனும் ஐ.க்யூ குறை பாடுள்ள பிரிவின் கீழ்

கொஸ்டீன் ஹவர்- ஐ.க்யூ குறைபாட்டட சரிசெய்வது எப்படி ?

வருவார்கள். நீங்கள் உடனடியாக, 'கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்' (Clinical psychologist)என்று அழைக்கப்படும் மருத்துவ உளவியல் நிபுணர் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அவர் பலவிதமான ஐ.க்யூ டெஸ்ட்டுகளை மேற்கொண்டு, உங்கள் மகளின் அறிவு சார் திறன் குறித்த ஒரு முடிவுக்கு வருவார்.

ஐ.க்யூ அளவானது 110-க்கு மேல் இருப்பின் அவர்களைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதற்குக் கீழான ஒவ்வொரு பிரிவிலும் அவர்களின் தனிப்பட்ட குறை பாடு தெளிவுபடுத்தப்படும். அதைப் பொறுத்து அவர்களை சிறப்புப் பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கேயான சிறப்புக் கல்வியை தந்து எதிர்கால வாழ்க்கைக்கு வழி செய்யலாம். சிறப்புப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்த பிறகு, அவர்களின் தனித்திறன் தொடர்பான தொழிற்பயிற்சி ஒன்றினை கற்றுத்தருவதன் மூலம் எதிர்காலத்தில் சொந்தக் காலில் நிற்கவும் வழிசெய்ய முடியும்.''

சித்திரை வெயில்... எதிர்கொள்வது எப்படி?

''புராஜெக்ட் தயாரிப்புக்காக இந்த சித்திரை வெயிலில் அலைந்து திரிந்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு. அதை எதிர்கொள்ள உணவு உள்ளிட்ட நடைமுறைகளில் எந்த வகையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்?''

- அனிதா, வேலூர்

கோசிபா, அரசு சித்த மருத்துவர், பெரம்பலூர்:

கொஸ்டீன் ஹவர்- ஐ.க்யூ குறைபாட்டட சரிசெய்வது எப்படி ?

''உடற்பயிற்சி செய்பவராக இருப்பின், வெயிலை ஒட்டி மிதமான சுழற்சிக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது நீச்சல் போன்று மடை மாற்றிக் கொள்ளுங்கள். அலைச்சல் அதிகம் எனில், இருவேளை குளியல் அவசியம். தண்ணீரைவிட வெதுவெதுப்பான நீரே அலுப்புத் தீர்க்கும். கோடையின் வெப்பம் மற்றும் எரிச்சல் அடங்க, மஞ்சள் உள்ளடங்கிய குளியல் பொடி பயன்படுத்துங்கள். வாரத்தில் இரண்டு நாள் எண்ணெய்க் குளியல் கோடைக் கொடுமையை குறைப்பதோடு வெப்பத்திலிருந்து உடல் உள்ளுறுப்புகளையும் காக்கும். வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட வெளிர்நிற ஆடைகளை உடுத்துங் கள். கவரிங் நகைகள் வேண்டாம்.

உணவு முறைகளில் கண்டிப்பாக உப்பு, புளி, காரம் குறைத்தாக வேண்டும். காரத்தின் வீரியத்தைத் குறைக்க மிளகாயுடன் மல்லி மற்றும் மிளகுடன் சீரகம் சேர்க்கலாம். ஐஸ்க்ரீம், குளிர்ச்சியான மென்பானங்கள் போன்றவற்றின் இயல்புக்கும் கோடை தணிப்புக்கும் நேரடியாக தொடர்பில்லை. எனவே,  இவற்றுக்குப் பதில் இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை அடிக்கடி உண்ணலாம். அதேசமயம், அதிகம் வியர்க்கும் தேகத்தை உடையவர்கள், கண் நோய், தொண்டைக் கட்டு உள்ளவர்கள் இவற்றை அளவில் குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.

ஐஸ் வாட்டரைவிட, வெட்டிவேர், நன்னாரி மற்றும் உங்கள் பகுதியில் கிடைக்குமெனில் பாதிரிப்பூ போன்றவற்றை புதுப்பானை நீரில் ஊறவைத்து அருந்தினால் அடங்காத தாகம்கூட காணாமல் போகும். சம்பா அரிசியில் தயாரான நீராகாரம், வெயில் பாதிப்பைத் தவிர்க்கும். மொந்தன் வாழை, நெல்லி, விளாம்பழம், அத்தி, நாவல், கொய்யா, கருந்திராட்சை போன்றவற்றைச் சாப்பிடுங்கள். வாழைப்பூ, அகத்திப்பூ மற்றும் கீரைத்தண்டு, வாழைத்தண்டு போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோடையில் அசைவத்தை குறைத் துக் கொள்வது நலம். தயிர், நெய் போன்றவை உடற்சூட்டை  அதிகமாக்கும் என்பதால்... மோர், வெண்ணெயை உண்ணலாம்.தினசரி காற்றும் நிழலும் உள்ள இடத்தில் சற்றேனும் நேரம் செல விடுங்கள். கண்களுக்கு போதிய ஓய்வு அவசியம். அதற்காக களைப் பைக் காரணம் காட்டி கோடையில் நீண்ட பகல் உறக்கம் கூடாது!''  

மூட்டு இறுக்கம்... தீர்வு என்ன?

''முதுகலை இறுதியாண்டு மாணவியான எனக்கு, சில வாரங்களாக காலையில் எழுந்தவுடன் மற்றும் ஓய்வு எடுக்கும் சமயங்களில் செயல்படவே முடியாத அளவுக்கு மூட்டுகள் இறுகிக் கொள்கின்றன. நேரம் ஆக ஆக குறைந்து, மறுபடியும் ஓய்வு அல்லது உறக்கத்துக்குப் பிறகு படுத்தி எடுக்கிறது. உண்மையில் என்னுடைய பிரச்னை என்ன? அதற்கு தீர்வு என்ன..?''

- வள்ளியம்மை, காரைக்குடி

வி.பி.சரவணன், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், தஞ்சாவூர்

''இது முடக்குவாத வகையைச் சேர்ந்த ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸாகத் தெரிகிறது.   20-30 வயதுக்கிடையே தலை தூக்கும் இந்த எலும்பு மூட்டு உடல்நல பாதிப்புக்கு நிரந்தர மருத்துவத் தீர்வு இல்லை. ஆனால், ஆரம்பத்திலேயே கண்டுணர்வதன் மூலம் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஃபிஸியோதெரபி வழியாக நோய் வீரியத்தைக் குறைத்துவிடலாம்.  

கொஸ்டீன் ஹவர்- ஐ.க்யூ குறைபாட்டட சரிசெய்வது எப்படி ?

இந்த பாதிப்பு உள்ளவர்களின் பிரச்னையே வலி மீதான பயத்தில் இயக்கத்தை குறைப்பது மற்றும் மிகையான ஓய்வை மேற்கொள்வது போன்றவற்றில் இறங்கி, பாதிப்பை அதிகமாக்கிக் கொள்வதுதான்.

கொஸ்டீன் ஹவர்- ஐ.க்யூ குறைபாட்டட சரிசெய்வது எப்படி ?

எனவே, வலியைக் காரணம் காட்டி இயல்பான இயக்கங்களில் இருந்து பின் வாங்கக் கூடாது. உரிய சிகிச்சை பெறுவதில் கவனக் குறைவாக இருந்தால் எலும்பு அரிப்பு மற்றும் எலும்பு மூட்டுகளின் வடிவமே மாறிப்போவது போன்ற விபரீதங்களுக்கும் வழி செய்யும். தனிப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பொறுத்தும் இந்த வகை ஆர்த்ரைடிஸின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் ஒட்டுமொத்த உடல் நலனிலும் கவனம் அவசியம்.

இவற்றை எல்லாம் மீறி இயக் கத்தை முடக்கும் அளவுக்கு சீரியஸா னாலும் அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மேற்கொண்டு 20 ஆண்டு களுக்கு இயல்பான இயக்கத்தை திரும்பப் பெற முடியும். விரைந்து அருகிலுள்ள எலும்பு மூட்டு மருத்து வரைச் சந்தித்து மேலதிக விவரங் களையும் சிகிச்சையையும் பெறுங்கள்.''