Published:Updated:

சம்மர் டிரெஸ் ரெகமெண்டேஷன்ஸ் !

சா.வடிவரசு படம்: ச.இரா.ஸ்ரீதர்

##~##

இந்த ஹாட் சம்மருக்கு ஏற்ற ஆடைத் தேர்வு பற்றி சொல்றாங்க என்.ஐ.எஃப்.டி. (NIFT) மாணவிகள் திரிஷ்யா, பூர்ணிமா, கௌரி, சத்யா. அசத்தலான ஆடைகளை உருவாக்கறதுக்காகவே ஃபேஷன் டிசைனிங் படிக்கிறவங்க சொன்னா... கரெக்ட்டாதானே இருக்கும்!

 திரிஷ்யா: கோடை வெயிலுக்கு காட்டன்தான் கவசம். காட்டன் ஷர்ட், காட்டன் பேன்ட், காட்டன் குர்தா தேர்வு செய்யலாம். அதுக்காக டைட் ஃபிட் காட்டன் உடைகள் வேண்டாம். தளர்வா உடுத்தலாம். வொயிட், லைட் ப்ளூ, லைட் க்ரீன்னு கூல் கலர்ஸ் ஆடைகளா தேர்ந்தெடுக்கலாம். இது வெயிலை ரிஃப்ளெக்ட் செய்து திருப்பி அனுப்பும்.

கௌரி: கறுப்பு மற்றும் பிற டார்க் கலர்கள் வெயிலை அதிகமா உள்ளீர்க்கும்ங்கிறதால, அடர் நிற ஆடைகள் வேண்டாம். டைட்டா டிரெஸ் போடற டீன் ஏஜ் பொண்ணுங்க... சம்மர்ல மட்டுமாவது தங்களோட டிரெஸ்ஸிங் ஸ்டைலை மாத்திக்கணும். ஏன்னா, அது உடம்போட வெப்பத்தை வெளியேற்றாம பாடியை இன்னும் ஹீட் ஆக்கிடும். டைட் ஃபிட் ஜீன்ஸை எல்லாம் ரெண்டு மாசத்துக்கு மடிச்சு வெச்சுடணும். காட்டன் பேன்ட்ஸ், எக்ஸ் எல் டி-ஷர்ட்ஸ் குட் சாய்ஸ்.

சம்மர் டிரெஸ் ரெகமெண்டேஷன்ஸ் !

பூர்ணிமா: பட்டு, சின்தடிக் உடைகள் வேண்டவே வேண்டாம். லைட் வெயிட் ஆடைகள் ஓ.கே! டிரெஸ் மாடலைப் பொறுத்தவரை துப்பட்டா, ஓவர்கோட்னு ரெண்டு, மூணு லேயர்களில் உடுத்துறதைவிட, சிங்கிள் லேயரா போடுறது பெட்டர். ஃபுல் ஹேண்ட், காலர் நெக், லாங் ஸ்கர்ட்னு உடம்பு முழுக்க போர்த்தற மாதிரி மாடல்களைத் தவிர்த்துடணும். மெகா ஸ்லீவ்ஸ், த்ரீ ஃபோர்த் பேன்ட்னு முடிஞ்சளவு ஆடைகளோட அளவைக் குறைக்கணும்.

சத்யா: வீட்டை விட்டு வெளியேறினா கேப், கூலர்ஸ், குடைனு வெயில் கவசங்களை மறக்காம எடுத்துக்கணும். டூ-வீலர் பயன்படுத்துறவங்க கைக்கு கிளவுஸ் போட்டுக்கலாம். முகத்துக்கு துப்பட்டாவால மாஸ்க் கட்டிக்கலாம். காலுக்கு சாக்ஸ் போட்டுக்கலாம். இதெல்லாம் 'சன் டேன்’ல இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.