ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

குல்லிங் செம செல்லிங் !

காகித கலையில் கலக்கும் தோழிகள் பூ.கொ.சரவணன்படங்கள்: ப.சரவணகுமார்

##~##

அந்த வீட்டுக்குள் நுழைந்ததும்... ஏதோ கலர்ஃபுல்லான வேறொரு உலகுக்குள் நுழைந்த உணர்வு. வீட்டில் தொங்குகிற கடிகாரம், பொம்மைகள், கூடை, கீ செயின் என எல்லாவற்றிலும் ஒரு பிரத்யேக வசீகரம்.

''வெல்கம் சார்!' என கண்சிமிட்டி சிரிக்கிறார்கள் பிராப்தி மற்றும் பூர்வா.  சென்னை, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி யின் முதலாமாண்டு பி.காம் மாணவி கள், இந்தத் தோழிகள். இவர்கள் இரு வரின் கைவண்ணம்தான் அந்த வீட்டின் எழிலைக் கூட்டி வைத்திருக்கிறது!

''நீங்க இப்ப பார்த்து பிரமிச்ச எல்லாப் பொருட்களுமே, முழுக்க பேப்ப ரால உருவானது. இதை 'குல்லிங்’னு (Quilling) சொல்வாங்க. பொழுதுபோக்கா ஆரம்பிச்சு, இப்போ இது எங்களுக்கு வருமானம் தர்ற ஒரு தொழிலா மாறினது... மிகப்பெரிய சந்தோஷம்!'' என்று ஆரம்பித்த பிராப்தி,

''ஒருநாள்... பூர்வா வீட்டுல டிஃபரென்ட்டா, க்யூட்டா இருந்த ஒரு கிரீட்டிங் கார்டை நான் புரட்டிப் புரட்டிப் பார்க்க, 'இது எங்க அக்கா கை வண் ணம்!’னு சொன்னா பூர்வா. அவ அக்கா ப்ரெக்ஷா, 'இப்படி பல கலர்ஸ், வெவ் வேறு திக்னஸ்ல இருக்கிற பேப்பர்களை வெட்டி, பல்வேறு வகையில் சுருட்டி, மடக்கி, கதிகலக்கி கிராஃப்ட் செய்ற துக்குப் பேர் குல்லிங்!’னு சொல்லி, அதை எங்களுக்கும் கற்றுத் தந்தாங்க.

குல்லிங் செம செல்லிங் !

கிளாஸ்மேட் ஒருத்திக்குப் பிறந்தநாள் வர, வால் கிளாக், கம்மல், ஃபிரெண்ட்ஷிப் பேண்ட் எல்லாம் பேப்பர்களை வெச்சே செஞ்சு, அவளுக்கு பிரசன்ட் பண்ணப்போ, 'ஸோ க்யூட்!’னு அவ மட்டுமில்ல... எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே எங் களைக் கொண்டாடினாங்க. தொடர்ந்து கீ செயின், கூடை, பேங்கிள்னு நிறைய பண்ணினோம்'' என்று பிராப்தி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் பூர்வா.

''எங்க காலேஜ்ல தொழில் முனை வோர் விழா ஒன்று நடந்தது. 'நாமும் கலந்துகிட்டுதான் பார்ப்போமே’னு அதுவரை நாங்க செய்திருந்த கம்மல், பேண்ட், பென்டன்ட்னு எல்லாத்தையும் இன்னும் கொஞ்சம் மெருகேத்தி, கூடவே படங்கள், பானை, ஃபிளவர்வாஸ்னு இன்னும் புதுசு புதுசா ரெடி பண்ணி ஸ்டால்ல வெச்சோம்.

அத்தனையுமே 'ஹேண்ட் மேட்’தான். ஆனா, இதுக்குத் தேவைப் படுற கிரியேட்டிவிட்டி, நேரம் இதெல்லாம் அதிகம்ங்கறதால, கத்துக்குட்டிகளா இருந்தாலும் துணிஞ்சு அதிக விலை நிர்ண யிச்சு, 'நோ பார்கைன்!’ போர்டும் வெச்சோம். எங்க ஸ்டால் பெரிய ஹிட்! வந்த வருமானம், பத்தாயிரத்தைத் தாண்டி இருந்தது!

இன்னொரு பக்கம், அதே ஸ்டால்ல ஒரு ஃபீட்பேக் நோட் வெச்சு, கஸ்டமர்கள் இன்னும் என்ன மாதிரி டிசைன்களை விரும்ப றாங்கனு எழுதி வாங்கினோம். அதில், 'தண்ணி பட்டா மொத்தமும் வேஸ்ட் ஆயிடும்!’னு ஒரு கம்ப்ளயின்டும் வந்தது. உடனே எல்லா பொருட்களையும் லேமினேட் செய்யக் கத்துக்கிட்டோம். அந்த தொழில் முனைவோர் சம்மிட்-ல எங்க ஸ்டாலுக்குதான் முதல் பரிசு! காலேஜ் ஸ்டாஃப், ஸ்டூடன்ட்ஸ்னு பெரிய்ய்ய்ய கஸ்டமர் சர்க்கிளும் கிடைச்சுடுச்சு!'' என்று பூர்வா பெருமிதத்தில் மிதக்க,

குல்லிங் செம செல்லிங் !

''எங்க பிசினஸ் சூப்பரா பிக் - அப் ஆச்சு. இப்போ பல சென்டர்கள்ல, விழாக்கள்ல ஸ்டால் போடுறோம். எல்லாமே சூப்பர் சேல்ஸ்தான். சிரிச்ச முகத்தோட மார்க்கெட்டிங் பண்ற எங்களோட அணுகுமுறையும் அதுக்குக் காரணம். படிச்சுட்டு இருக்கற எங்களுக்கு இது பார்ட் டைம் பிசினஸ்தான்ங்கிறதால, அதுக்கு ஒதுக்குகிற நேரத்தை லிமிட் பண்ணிக்கிறோம். படிப்புச் செலவு, கைசெலவுனு இந்த குல்லிங் எங்களுக்கு நிறைய தருது!'' என்று சிரிக்கிறார் பிராப்தி.

''ஒரு சாதாரண பேப்பரில் ஆரம்பிச்சது, இன்னிக்கு பேப்பர்ல எல்லாம் எங்க பேர் வர்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறதுக்கு, எங்க நட்புதான் காரணம்னு போட்டுக்கோங்க! மெஸேஜ் சொல்லிட் டோம்ல?!'' - கண் சிமிட்டி முடிக்கிறார்கள் தோழிகள்!