டிரெஸ் code
##~## |
சென்னை சிட்டியில சில டீன் சிட்டுகள் அணிந்து வரும் உடைகளைப் பார்க் கும் போது, 'இவங்க எல் லாம் சினிமாவைப் பார்த்து டிரெஸ் பண்றாங்களா... இல்லை, இவங்களைப் பார்த்துதான் சினிமாவில் காஸ்ட்யூம் டிசைன் செய்றாங்களா..?’னு நினைக்க வைக்கிற அளவுக்கு மிரட் டலா இருக்கும். அப்படி சிக்கின நாலு ஸ்வீட்டீஸ் கிட்ட, 'உங்க டிரெஸ்ஸிங் டிரெண்ட் பற்றி சிறுகுறிப்பு வரைக!’னு கேட்டோம். பதில்கள்ல ஃபேஷன் உலகின் விதவித நிறங்கள்!
காவ்யா ஸ்ரீராம், ப்ளஸ் டூ, லேடி ஆண்டாள் ஹையர் செகண்டரி ஸ்கூல், சேத்துப்பட்டு: ''பொதுவா நான் ஷார்ட்ஸ், டி-ஷர்ட்ஸ், ஒன் சைட் ஸ்லீவ் டிரெஸ் ஸஸ்தான் அதிகமா போடுவேன். 'சென்னையில உனக்கு மட்டும் எங்கடி இதெல் லாம் கிடைக்குது..?’னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கேட்பாங்க. அதான் சீக்ரெட். ஆன்லைன் ஷாப்பிங்லதான் நான் டிரெஸ் வாங்குவேன். அல்லது யு.கே, ஷாங்காய் போறப்போ... அங்கயிருந்து அள்ளிட்டு வந்துடுவேன். உடைகள் விஷயத்துல நான் விரும்பினதை உடுத்த என் வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் இருக்கு. பட், என் லிமிட் எனக்கே தெரியும். இப்போ நான் போட்டிருக்கிற இந்த டிரெஸ்கூட எனக்கு அழகா இருக்கும், கிளாமரா இருக்காது. தட்ஸ் இட்!''

அனன்யா பரிக், ப்ளஸ் டூ, லேடி ஆண்டாள் ஹையர் செகண்டரி ஸ்கூல், சென்னை: ''எப்பவுமே 'நீ (முழங்கால்) லெங்த்’ டிரெஸ்ஸஸ்தான் என் சாய்ஸ். ஐ லவ் ஸ்கர்ட்ஸ் அண்ட் ஷார்ட்ஸ். லண்டன்லதான் ஷாப் பண்ணுவேன். எவ்வளவு அழகான டிரெஸ்ஸா இருந்தாலும் அது எனக்கு 100% ஃபிட் ஆனாதான் போடுவேன். கொஞ்சம் ஃபிட்னஸ் மிஸ் ஆனாலும், 'ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’தான். நான் போடுற டிரெஸ் எனக்குப் பிடிக்குதாங்கறது பத்தி மட்டும்தான் நான் யோசிக்க முடியும். இந்த டிரெஸ் போட்டா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்கனு எல்லாருக்காகவும் யோசிக்கிற பழக்கம் எனக்கில்ல. ஐ லிவ் ஃபார் மைசெல்ஃப்!''

திவ்யா, விஸ்காம் ஸ்டூடன்ட், எத்திராஜ் கல்லூரி, எக்மோர்: ''காலேஜ் கேர்ள்ஸ்லயே வித்தியாசமா, எனக்கு சாரீஸ்தான் பிடிக்கும். ஆனா, அதில் கொஞ்சம் மெச்சூர்டா தெரிவேன். 'சரி... அதை இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுப் பார்த்துக்கலாம்’னு, இப்போ தாவணிதான் என் சாய்ஸ். ஏதாவது ஃபங்ஷன்னா, டபாங், காக்ரா, டிசைனர் சுடினு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ரெடியாக, நான் தாவணி யோட போய் நிப்பேன். என்னதான் அவங்க எல்லாரும் ஸ்டைலிஷா டிரெஸ் செய்திருந்தாலும், பார்க்க பளிச்னு தெரியுறது என் தாவணியாத்தான் இருக்கும். அதுதான் நம்ம 'டிரெடிஷனல் வேர்’-ன் ஸ்பெஷல். பல வெரைட்டி கள்ல, கலர் காம்பினேஷன்கள்ல தாவணிஸ் வெச்சிருக் கேன். இது நல்லா இருக்கா..?!''

ஷிவானி லஹ்லானி, விஸ்காம் ஸ்டூடன்ட், எத்திராஜ் காலேஜ், எக்மோர்: ''நான் மாடலிங் பண்றேன். அதனால ஃபேஷன் டிரெண்ட்ல எப்பவுமே அப்டேட்டடா இருப் பேன். பொதுவா 'வெஸ்டர்ன் வேர்’-ல கம்ஃபர்டபிளா உணர்வேன். சென்னைதான் நம்ம ஷாப்பிங் கிரவுண்ட். தி.நகர், பாண்டி பஜார்ல இல்லாதது வேற எங்க இருக்கு..? எதெல்லாம் பிடிக்குதோ அதையெல்லாம் பில் போட்டுட வேண்டியதுதான். விலையைப் பத்தி எல்லாம் டோன்ட் கேர். இருக்கவே இருக்காங்க அப்பா, அம்மா!''
கட்டுரை மற்றும் படங்கள்: ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ்