சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

பிரமாத ஃபேஷன் ஷோ!

அவள் டீன்ஸ்

##~##

சென்னை, 'பேர்ள் அகாடமி’ மாணவ- மாணவிகள் தங்களின் வடிவமைப்பை 'போர்ட்ஃபோலியோ 13’ என்கிற தலைப்பில் 'ஃபேஷன் ஷோ'வாக ஹில்டன் ஹோட்டலில் நடத்தினார்கள். இந்த ஃபேஷன் ஷோ, இங்கு படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளின் இறுதிப் படைப்பு. சிறப்பு விருந்தினர்களாக புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம், 'பரதேசி’ படத்துக்காக தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி, ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் 2011-ம் ஆண்டு ரன்னர் - அப் ஆக வந்த ரகுல் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

கறுப்பு மற்றும் சந்தன கலர் காம்பினேஷனில் மாடல்கள் அணிந்து வந்த ஆடைகள் அனைத்தும் சூப்பர் ஸ்டைல் ரகம்.

'சரி, இதெல்லாம் போட்டுட்டு ரோட்டுல சகஜமா நடக்க முடியுமா?’ என்று கேட்டால்... தெரியலியேப்பா!

பிரமாத ஃபேஷன் ஷோ!
பிரமாத ஃபேஷன் ஷோ!

தொகுப்பு மற்றும் படங்கள்: ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ்