Published:Updated:

Soல்லு Maக்கா Soல்லு !

Soல்லு Maக்கா Soல்லு !

'Soல்லு Maக்கா Soல்லு’ மெகா (ஒரு 'பில்ட்-அப்’தான்!) போட்டிக்காக நாம இந்தத் தடவை ஹால்ட் ஆனது... சென்னை, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி! ''அரை கிலோ அறிவு, அரை கிலோ அழகுனு சேர்ந்து செஞ்ச கலவை நாங்க. வி ஆர் ரெடி!'னு 'தம்ப்ஸ் அப்’ காட்டின பொண்ணுங்ககிட்ட தாமதிக்காம ஆரம்பிச்சோம் கலாட்டாவை...

'' கண்ணா... சூசைட் பண்ண ஆசையா..? லவ் பண்ணிக்கோ! ரெண்டாவது சூசைட் பண்ண ஆசையா..? அதே பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ! இந்தத் தத்துவத்தை (!) உங்க மொபைல்ல தப்பில்லாம தங்கிலீஷ்ல டைப் பண்ணணும்...’'னு நாம ரூல்ஸ் செப்ப,

''எங்களுக்கேவா..? ஃபார்வேர்ட் மெசேஜ், பேக்வேர்ட் (அனுப்புறவங்களுக்கே திருப்பி அனுப்பறதாம்) மெசேஜ், குரூப் மெசேஜ், மொக்கை மெசேஜ்னு எஸ்.எம்.எஸ்-லயே முழிச்சு, எஸ்.எம்.எஸ்-லயே தூங்கறவங்க நாங்க. தங்கிலீஷ்ல என்ன... தங்காலியிலகூட (தமிழ் பெங்காலி = தங்காலி) டைப் பண்ணுவோம்...''னு சௌந்தரி சவுண்ட் விட...

Soல்லு Maக்கா Soல்லு !
##~##

''நல்லா சொல்றீங்கம்மா டீட்டெய்லு...''னு நாம அசந்து போய் நிக்க, ''ஃபினிஷ்டு’'னு முதல் ஆளா வந்தாங்க யாஸ்மின்! கடைசி ஆளாவும் வராம பிரியா அவங்க மொபைல் போனை ரொம்ம்ம்ப நேரமா பிறாண்டிட்டு இருக்க, ''ஏய்... என்னடி... ஆராய்ச்சிக் கட்டுரையா எழுதறே..?'’னு கேர்ள்ஸ் அவங்களை சவுண்ட் விட, ''பழக்கதோஷம்... எல்லாருக்கும் ஃபார்வேர்ட் பண்ணிட்டு இருக்கேன்!''னு மறுபடியும் பிராண்டறதுல பிஸி ஆனாங்க.

''அடுத்தது ஒரு டங்க் டிவிஸ்ட்டர்...'’னு நாம ஆரம்பிக்க,

''பட், அதுக்கு முன்ன ஒரு கண்டிஷன்...''னு தடலாடியா வந்து நின்ன சித்ரா,  ''தினமும் பல்லு வெளக்கறவங்க மட்டும்தான் இந்தப் போட்டியில கலந்துக்கணுமாம். ஸோ ஆல் ரிஜெக்டட். மீ ஒன்லி அன்-அப்போஸ்டா செலக்டட்!’'னு லந்து விட, தோழிகள் எல்லாம் சேர்ந்து செல்ல மொத்து மொத்த, நாம போட்டிக்குத் திருப்பினோம் பொண்ணுங்களை.

''நெட்டை கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை அது பெட்டை முட்டை! சொல்லுங்க பார்ப்போம்'’னு நாம வெயிட் பண்ண, முதல் ஆளா டிரை பண்ணி னாங்க விஜயகுமாரி. ''நெட்டை முட்டை இட்ட கொக்கு''னு பாதிலயே அவங்க நொண்ட, ''முட்டை, நெட்டை, கட்டை..? இப்பவே கண்ணைக் கட்டுதே...''னு சாய்ஞ்சாங்க சரஸ்வதி. வரிசையா வந்த கேர்ள்ஸ் எல்லாருமே டிவிஸ்ட்டரை டெரரா கொதறிப் போட, சில பல முயற்சிகளுக்கு அப்புறம் ஒருவழியா சரியா சொன்ன முர்ஷீதா பானுவை, 'எப்பிட்றீ...?!’னு ஏதோ ஒளவையாரைப் பார்க்கற மாதிரி அதிசயமா பார்த்தாங்க கேர்ள்ஸ்.

''இப்போ மேத்ஸ் கிளாஸ்...'’னு நாம நெக்ஸ்ட் ரவுண்டுக்கு ரெடியாக,

''மேத்ஸ்ஆஆஆஆ..? நாங்க இந்த ஆட்டத்துக்கு வரலப்பா...'’னு கூட்டத்துல பாதி பேர் பேக் அடிக்க, ''ஏய்... நான் டென்த் மேக்ஸ்ல எய்ட்டி பெர்சென்டேஜ் தெரியுமா..?’னு தில்லா வந்தாங்க சில ராமானுஜம் பேத்தீஸ்.

''ஹெப்டகனுக்கு எத்தனை பக்கம்..?'’னு நாம ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் சிலபஸ்ல இருந்துதான் கேட்டோம் கேள்வியை. அவசரமா ஒரு குரூப் டிஸ்கஷன் ஓட்டியும் உறுதியா ஒரு பதிலைச் சொல்ல முடியல கேங்குக்கு. ''ட்ரையாங்கிளுக்கு மூணு பக்கம், ஸ்கொயருக்கு நாலு பக்கம்... அதுக்கு மேல தெரியலயே...?’னு தென்னரசி முழிக்க, ''பென்டகனுக்கு அஞ்சு பக்கம். ஹெக்ஸகனுக்கு ஆறு பக்கம். யெஸ்... அப்போ ஹெப்டகனுக்கு ஏழு பக்கம்!’'னு ஒண்ணாப்பு பாடத்துக்கே திக்கித் திணறினாலும், போட்டியில இருந்து பின் வாங்காம பதில் சொன்ன யாஸ்மினுக்கு செம கிளாப்ஸ்!

''ஓகே... நெக்ஸ்ட் சினிமா ரவுண்ட். 'சிங்கம்’ பட 'காதல் வந்தாலே...’ சாங்-க்கு முன்னால ஒரு லீட் பாடுவாங்களே... அது என்ன..?''னு நாம சாண்ட் கிளாக் கவிழ்க்க, 'எவ்ரிபடி லிஸன்... எ சம்ப பம்ப ரும்ப தும்பா... மெம்போ ஜம்போ பம்போ காலிங் எ பார்ட்டீ’னு அந்த பாமாலையை பிசிறில்லாம பாடி அசத்தின பிரியாவுக்கும் சிந்தாமணிக்கும் 'கலைமாமணி’யே கொடுக்க ஆசைதான். ஆனா, கம்பெனிக்கு கட்டுப்படியாகாத காரணத்தால ஆளுக்கு அஞ்சு மார்க் பிரிச்சுக் கொடுத்ததோட நிறுத்திக்கிட்டோம்.

ஒரு வழியா அதிரி புதிரி அல்டாப்பு விளையாட்டுகளுக்கு நாம எண்ட் கார்ட் போட, பரிசுகள் அறிவிக்கும் நேரம் புன்னகையோட காத்திருந்தாங்க பொண்ணுங்க. ரெண்டு ரவுண்ட்ல சிக்ஸர் அடிச்ச யாஸ்மினுக்கு முதல் பரிசா காலேஜ் பேக், டங்க் டிவிஸ்டர்ல டெட்லைனைத் தொட்ட முர்ஷீதாபானுவுக்கு ரெண்டாவது பரிசா ஹாட் சாஸ் பேன், மற்ற 'நண்பேன்டா’-க்கள் எல்லாருக்கும் பர்ஃப்யூம்ஸ் தர... லஜ்ஜாவதீஸ் முகத்துல லைட்ஸ்!

- க.நாகப்பன் படம்: சொ.பாலசுப்ரமணியன்