zoom ப்ளீஸ்...
இங்கே உங்களின் கண்களைக் கொள்ளையடிப்பவர் ப்ரீத்தி... ப்ரீத்தி... ப்ரீத்தி! மேடம்... கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. காலேஜ்ல எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் மீடியா செகண்ட் இயர் படிக்கறாங்க.

##~## |
''டிராவல் பண்றது, போட்டோஸ் எடுக்கறது இது ரெண்டும்தான் சின்ன வயசுல இருந்தே என்னோட ஹாபி. ஆக்சுவலா யூ.ஜி-ல நான் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் படிச்சேன். ஆனா, போட்டோகிராபி மேல இருந்த ஆர்வத்தாலதான்... பி.ஜி-ல எலெக்ட்ரானிக்ஸ் மீடியாவை தேர்ந்தெடுத்தேன். எப்பவுமே இயல்பா இருக்கற விஷயங்கள, அப்படி அப்படியே படம் பிடிக்கறதுலதான் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படி இந்த ரெண்டு வருஷத்துல ஆயிரம் படத்துக்கு மேல எடுத்திருப்பேன்'’ என்கிறார் ப்ரீத்தி அழகாகச் சிரித்தபடி.


கம் அண்ட் ஸீ ஹெர் பிக்சர்ஸ் யா!
ஹாய் கேர்ள்ஸ்... உங்களோட போட்டோகிராபி ஆர்வத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறதுக்கான தளம் இது. நீங்க தற்சமயம் காலேஜுல படிச்சுட்டு இருக்கணும்... போட்டோ மொத்தமும் நீங்களே எடுத்ததா இருக்கணும்ங்கறதுதான் கண்டிஷன்ஸ்!
'அவள் 16'னு தலைப்பு போட்டு, நீங்க எடுத்த போட்டோ... உங்க போட்டோ... ப்ளஸ் போன் நம்பரோட aval@vikatan.com-க்கு மெயில் தட்டி விடுங்க
பின்குறிப்பு: போட்டோஸெல்லாம் நல்ல ரெசல்யூஷன்ல இருக்கணும்ங்கறத மறந்துடாதீங்கோ!