Soல்லு Maக்கா Soல்லு !
செமஸ்டர் முடிச்சுட்டு ஜாலியா லீவுல இருந்த மதுரை, சௌராஷ்ட்ரா காலேஜ் பொண்ணுங்ககிட்ட, 'Soல்லு Maக்கா Soல்லு !!’ கொஸ்டீன் பேப்பரோட நாம போய் நிக்க, ''லீவுலயும் டெஸ்டா...?!'’னு கதறினாங்க.

##~## |
''இது ஜாலி கேம் பாஸு... ஜெயிச்சா பரிசு..!’னு நாம உற்சாக ஊசி போட, ''ரெடி!'’னு எழுந்தாங்க கேர்ள்ஸ்!
''முதல் ரவுண்டு, நாங்க கொடுக்கற எஸ்.எம்.எஸ்-ஐ யாரு முதல்ல உங்க மொபைல்ல டைப் பண்ணிட்டு வர்றீங்களோ... அவங்களுக்கு பத்து மார்க்!''னு ரூல்ஸை விளக்கிட்டு,
''அமைதியான எக்ஸாம் ஹால்; அம்சமான சூப்பர்வைசர்; புரியாத புதிராக கொஸ்டீன் பேப்பர்; கறை படியாத ஆன்ஸர் ஷீட்; அசரவைக்கும் ஃபேன் காற்று; அசந்து தூங்கும் ஸ்டூடன்ட்ஸ்... என் இனிய செமஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!''னு கொஸ்டீனை கொடுத்துட்டு, ரெண்டு நிமிஷ இடைவெளியில 'ஸ்டார்ட்' சொன்னோம்!
''எப்பவும் போல இந்த எக்ஸாம்லயும் பாதியில நொண்டுதுடி... அந்த 'ஆன்ஸர் ஷீட்’க்கு அப்புறம் என்ன வரும்?''னு பக்கத்து ஸீட் பெண்ணை கவிதா பிட் அடிக்கப் பார்க்க, 'ஃப்ளையிங் ஸ்குவாடா' பாய்ஞ்சு போட்டியிலயிருந்து எலிமினேட் பண்ண... ''இந்தப் பாவம் உங்கள சும்மா விடாது... மீனாட்சி கண்ணைக் குத்துவா''னு சாபம்ஸ் கொடுத்து
நம்மள கதிகலக்கிட்டாங்க கவிதா! இதுக்கு நடுவுல சரியா ஒரு நிமிஷம் ரெண்டு செகண்ட்ல ''ஹையா... முடிச்சுட்டேன்! நான்தான் ஃபர்ஸ்ட்!''னு ஓடி வந்தாங்க அபிநயா! அடுத்த 4 செகண்ட்ல ஓடி வந்தாங்க இன்னொரு அபிநயா! சில பல ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருந்தாலும், ஜோரா தட்டுங்கப்பா கை!
''அடுத்து... ஐ.க்யூ டெஸ்ட்! ஆபரேஷன் பண்ணி, மண்டை ஓட்டைப் பிரிக்காமலேயே உங்களுக்கெல்லாம் மூளை இருக்கானு டெஸ்ட் பண்ணப் போறோம்!''னு நாம தயாராக, 'ஈஸியா கேளுங்களேன்’னு பார்வையாலேயே கெஞ்சினாங்க கேர்ள்ஸ்!
''சில மாதங்களுக்கு 30 நாள் இருக்கும். சில மாதங்களுக்கு 31 நாள் இருக்கும். எத்தனை மாதங்களுக்கு 28 நாள் இருக்கும்..?''னு புதிரை நாம கிக் ஸ்டார்ட் பண்ண, ''இதுகூடத் தெரியாதா..? பிப்ரவரி!''னு கீதாராணி கூலா பதில் சொன்னாங்க. ''தப்பு!''னு நாம தீர்ப்பு சொல்ல, மொத்த கேர்ள்ஸுக்கும் கும்மாங்கோ குழப்பம்.
''ஹே... 12''னு கூட்டத்துல இருந்து 'யுரேகா’ குரல் கொடுத்தாங்க கவிதா!
''எப்பிடிடீ.?''னு மத்த கேர்ள்ஸ் அவங்கள முறைக்க, ''பிப்ரவரியில மட்டுமில்ல... எல்லா மாதங்கள்லயுமே 28 நாள் இருக்கும்தானே!''னு சொல்லிட்டு கவிதா பெருமையோட கூட்டத்தைப் பார்க்க, ''இன்ஸ்டன்ட் அறிவாளி!''னு பொறாமையில புகைஞ்சாங்க கேர்ள்ஸ்!
இறுதியா, ரிலேட்டிவிட்டி (!) கொஸ்டீனுக்கு வந்தோம்! ''சோனியா காந்திக்கும் மேனகா காந்திக்கும் என்ன உறவு..?''னு நாம கேட்க, ''வாட்..? அவங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்களா..?!''னு அனிதா ஆச்சர்யமாக, ''பேஸ்மென்ட்டே உனக்கு வீக்கா இருக்கு... இடத்தை காலி பண்ணு... காத்து வரட்டும்...''னு அவங்களை ஆஃப் பண்ணின திவ்யா, ''ரெண்டு பேரும் டிவின் சிஸ்டர்ஸ்!''னு தன் பங்குக்கு அதிர்ச்சி கொடுத்தாங்க.
''ஒரு சின்ன திருத்தம்... கோ சிஸ்டர்ஸ். அதாவது... ஓரகத்தீஸ்!''னு மறுபடியும் முன்னுக்கு வந்தாங்க கவிதா!
அடுத்தடுத்து நடந்த விடுகதை, ஜி.கே-னு ரெண்டு டெஸ்டுகள்ல சிக்ஸர் அடிச்சாங்க திவ்யஸ்ரீ!
கடைசியா பரிசு நேரம்... முதலிடத்த பிடிச்ச கவிதாவுக்கு 'காலேஜ் பேக்’கும், ரெண்டாவது இடத்துல இருந்த திவ்யஸ்ரீக்கு 'குக்கிங் செட்’டும் கொடுக்க, கலந்துக்கிட்ட மத்த கேர்ள்ஸுக்கு எல்லாம் கன்சலேஷன் பிரைஸா, பெர்ஃப்யூம்!
''பரிசைவிட பார்டிஸிபேஷன்தான் முக்கியம்..!''னு வெற்றி பெற்ற களிப்புல பேசின கவிதாவை, ''அப்டியா..?! அப்போ உன் பேக்-ஐ கொடுத்துடுடா செல்லம்..!''னு கேர்ள்ஸ் துரத்தினது, ஜாலி ஹோலி!
மோ.கிஷோர் குமார்
படம்: ஈ.ஜெ.நந்தக்குமார்