Published:Updated:

பாரம்பரியம் Vs பார்லர் - 1

பாரம்பரியம் Vs பார்லர் - 1

பாரம்பரியம் Vs   பார்லர் - 1

'அழகு’ என்று சொல்லும்போதே எவ்வளவு அழகாக இருக்கிறது! தன்னைத் தானே அழகுபடுத்திக் கொள்வதில், நமக்கு நிகர் நாமேதான். இந்த ஆர்வத்தை அழகைப் பராமரிப்பதிலும் காட்டும்போதுதானே... அது சக்சஸ்! அதற்காகத்தான்... பாரம்பர்யம் மற்றும் பார்லர் என இரண்டு விதங்களிலும் அழகைப் பராமரிக்கும் வழிகளைப் பேசப்போகிறது... 'பாரம்பர்யம் Vs பார்லர்' எனும் இந்த புதிய பகுதி. தலை முதல் பாதம் வரையிலான அத்தனை அழகு விஷயங்களையும் இங்கே நாம் ஆராய்வோம்!

தலையிருக்கும்போது, வால் ஆடக் கூடாதில்லையா..? அதனால், தலையில் இருந்தே ஆரம்பிப்போம்.

பார்லர்!

''தலைக்கான கிரீடம்தான் முடி. ஸோ.. முடியை எப்படி ஹெல்த்தியா, பளபளப்பா வெச்சுக்கறதுனு பாக்கறதுக்கு முன்ன, முடியில் எத்தனை வகை இருக்குனு சொல்லிடறேன்'' என ஆரம்பித்தார், சென்னை, 'க்ரீன் டிரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் பிராண்ட் டிரெய்னர் கற்பகம்.

##~##

''முடியை நாலு வகையா பிரிச்சுக்கலாம். எண்ணெய்ப்பசை கேசம் (oily hair)), வறண்ட கேசம் (dry hair), அதிகபட்ச வறண்ட கேசம் (fizzy hair), பாதிப்படைந்த கேசம் (damaged hair). இந்த நாலு வகையில, நம்மோட முடி எந்த வகைனு தெரிஞ்சுக்கறதுதான் முடி பராமரிப்புக்கான முதல்படி. ஏன்னா, வறண்ட கூந்தலை வெச்சுக் கிட்டு, எண்ணெய் பசை கூந்தலுக்கான ஷாம்பு யூஸ் பண்ணா, அது எதிர் விளைவை ஏற்படுத்திடும். அதனால ஷாம்பு, கண்டிஷனர், மாஸ்க்னு  எதை வாங்கினாலும், அது உங்க முடிக்கு ஏத்ததுதானானு பாத்து வாங்குங்க.

ஓ.கே... முடியை எப்படி பராமரிக்கறது?

பொல்யூஷன் மற்றும் நாள் முழுக்க ஏ.சி. அறையில் வேலை செய்றது, வெயில்... இதுபோல நிறைய விஷயங்களால் தலைமுடி பாதிக்கப்படும். அதனால, பாதிக்கறதுக்கு முன்ன பராமரிக்கறதுதான் புத்திசாலித்தனம். தினமும் தலைக்கு குளிக்கணும். ஆனா, ஸ்ட்ராங்கான ஷாம்பு யூஸ் பண்ணாம... மைல்ட் ஷாம்பு யூஸ் பண்ணுங்க. அதுவும் உங்க முடியோட தன்மைக்கு ஏத்ததா இருக்க வேண்டியது, அவசியம். எண்ணெய் வெச்சு தலைக்கு குளிக்கும்போது ஸ்ட்ராங் ஷாம்புவை யூஸ் பண்ணலாம்.

அடுத்ததா நம்ம தலைமுடியில் இருக்கும் ஈரப்பதத்தை பாதுகாக்கறதுக்கும், முடியை பாதிப்பிலிருந்து காப்பதற்கும், மாய்ச்ரைசிங் புராடக்ட்ஸ் யூஸ் பண்ண வேண்டியது அவசியம். இதுல, ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு கண்டிஷனர்... லோஷன் வடிவத்தில் இருக்கும். இது, நார்மல் மற்றும் அடர்த்தி குறைவான முடி உள்ளவங்களுக்கு பொருந்தும். அடுத்தது மாஸ்க்... பேஸ்ட் வடிவத்தில் இருக்கும். இது, வறண்ட கூந்தலுக்கானது. ஸோ... பிரச்னை வர்றதுக்கு முன்னயே பராமரிக்கறதும், பாதுகாக்கறதும்தான் ரொம்ப முக்கியம். ஒருவேளை பிரச்னை வந்துட்டா..? தொடர்ந்து பேசுவோம்...

பாரம்பரியம் Vs   பார்லர் - 1

பாரம்பரியம்!

''ஆயிரம்தான் ரெடிமேட் விஷயங்கள் வந்துட்டாலும்... பாரம்பரியமா நாம கடைபிடிக்கற சில வழிமுறைகள், பெருசா எந்தப் பிரச்னையையும் நம்மகிட்ட கொண்டு வராம... நம்மள காப்பாத்தும்'' என்று சொல்லும் 'சென்னை, கேர் அண்ட் க்யூர் அரோமா கிளினிக்’ நிறுவனர் கீதா அஷோக், தலை முடி பராமரிப்புக்கு, வீட்டிலேயே பாரம்பரியமாக செய்யக்கூடிய வழிமு¬றகளை பகிர்கிறார்.

''தினசரி தலைக்குளியல்தான் தலை முடிக்கான முதல் பராமரிப்பு. ஏன்னா... உடம்பு முழுவதும் செல்களால் ஆனது. முகத்தை எடுத்துக்கிட்டா, 28 நாட்களுக்கு ஒரு முறை பழைய செல் இறந்து, புதிய செல் உருவாகும். ஆனா, தலையில் தினம் தினம் புதிய செல்கள் உருவாகும். தினமும் தலையை அலசாமல் விட்டா, இறந்த செல்கள் அப்படியே தலையில் தங்கி... பொடுகு, முடி கொட்டுறதுனு பிரச்னைகளை ஏற்படுத்திடும். செம்பருத்தி இலையை  காய வெச்சு பொடி செய்து... தண்ணியில கலந்து தலையில் நல்லா நுரை வர்ற மாதிரி தேய்ச்சுக் குளிக்கலாம். இது ஒரு நல்ல இயற்கை ஷாம்பு.

பாரம்பரியம் Vs   பார்லர் - 1

வாரம் இரு முறை தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கறது நல்லது. நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் இது எல்லாத்தையும் தலா நூறு நூறு மில்லி அளவில் கலந்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்து தலை குளிக்கும்போது, பிரத்யேக இயற்கை பொடியை பயன்படுத்தலாம்.

செம்பருத்தி இலை, ஆவார இலை, ஜவ்வரிசி, மருதாணி இலை, வெட்டி வேர் இதையெல்லாம் காயவெச்சு பொடி செய்து கொள்ளவும். சாதம் வடிச்ச கஞ்சியில் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு இந்த இயற்கை பொடியையும் சேர்த்து கலந்து, தலைக்கு குளிக்கலாம். கஞ்சிக்கு பதில், பார்லியை பொடி செய்து தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு, அதுல கொஞ்சம் தண்ணியைச் சேர்த்து... இந்த பொடியையும் சேர்த்து கலந்து தலையில் தேய்ச்சு குளிச்சா... கூடுதல் பளபளப்புதான்!''

'எல்லாம் சரிதான்... ஆனா, எண்ணெய் தேய்ப்பதிலேயே சிலர் முடியை பாழாக்கிப்பாங்களே...?'

பளீரிடும்...