மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆனந்தம் விளையாடும் வீடு! - 2

ஒரு பாதி கதவு நீயடி... மறு பாதி கதவு நானடி..!பொன்.விமலா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

##~##

 மெல்லிய இசை... ஊதுபத்தியின் வாசம்... இன்முகத்துடன் வரவேற்கிறார்கள், புத்தம்புது காதல் தம்பதி ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி! சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையின் அந்த அழகிய வீட்டில், தீபாவளி சந்திப்பு!

''சின்ன வயசுல இருந்து இந்த வீட்டுலதான். காலத்துக்கு ஏத்த மாதிரி சின்னச் சின்ன மாற்றங்களை செய்வோம். இப்ப கல்யாணத்துக்காக இன்டீரியர்ஸ் பண்ணினோம். தரையில இருக்குற லைன்ஸ் மார்பிள்... வொயிட் கலர். அதுக்கு மேட்சிங்கா சுவர், சீலிங் எல்லாத்துக்குமே ராயல் வொயிட் பெயின்ட். பவர் இல்லாத சமயத்துலகூட சுவரோட வொயிட் கலர்... பிரைட் லுக் கொடுத்துட்டே இருக்கும்'' என்ற பிரகாஷ்,

''என்ன இருந்தாலும் சைந்தவியோட பிரைட் லுக்கைவிட... கம்மிதான்'' என்று கண்ணடிக்க, சைந்தவியின் முகத்தின் மின்னி மறைந்தன ஒரு கோடி மின்னல்கள்.

''அப்பாதான் (மாமனாரை, அப்பா என்றே அழைக்கிறார்) பாராட்டணும். இந்த வீட்டோட இன்ட்டீரியர் டிசைனர். அவரோட செலக்ஷன்ஸ் எப்பவுமே சூப்பர். மாடுலர் கிச்சன் டிசைன் பண்ணினதும் அவர்தான். பொதுவா, அழுக்கு தெரியாம இருக்கறதுக்கு பிளாக் இல்லைனா, மெரூன் கலர்லதான் கிச்சனை டிசைன் பண்ணுவாங்க. இங்க வொயிட்ல பண்ணியிருக்கோம். எண்ணெய் கறையோ, அழுக்கோ பட்டா... சட்டுனு தெரிஞ்சுடும்'' என்று சிரித்த சைந்தவி,

''வீட்டுல நான் அதிகமா நேசிக்கிற இடம் பூஜை அறை. கோயில் மாதிரியே இருக்கணும்கறதுக்காக... ரவுண்ட் ஷேப்ல பிரவுன் கலர் மைக்கா செலக்ட் பண்ணி, பிளைவுட் வொர்க் பண்ணி இருக்கோம். மூகாம்பிகை, பிள்ளையார் சிலைக்கெல்லாம் நான்தான் ஃபேஷன் டிசைனர்'' என்று குழந்தையின் குதூகலத்துடன் சொன்னார்!

ஆனந்தம் விளையாடும் வீடு!  - 2

''மாடியில இருக்கற என் ஃப்ரெண்ட மீட் பண்ணலாம். அவரோட வாய்ஸுக்கு முன்ன நானெல்லாம் ஜுஜுபீ...'' என்றபடி மாடிக்கு அழைத்து சென்றார் பிரகாஷ். படியேறும்போதே... 'க்கீகீகீக்... க்கீகீகீக்...'. நெருங்கினால்... அழகிய பஞ்சவர்ண கிளி!

''இவரோட பேரு மேக். ரெண்டு வயசாகுது. தினமும் விதம்விதமா பழங்கள் கொடுக்கறதுதான் எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம். குட்டி கால்களாலும் அலகாலும் தரையை அளந்து அளந்து நடக்கறதே... அழகு'' என்று அறிமுகப்படுத்திய பிரகாஷ், 'மேக்' என அழைக்க... பறந்து அவர் தோள் பற்றுகிறது!

''போட்டிக்கு இன்னொருத்தரும் இருக்கார். அவர்... சில்லி. நாலு வயசான என் செல்லம்'' என்ற பிரகாஷ், ''சில்லி... சில்லி...'' குரல் கொடுத்த சமயத்தில், ''ஹலோ... ஹாய்...'' என்றவாறே உள்ளே நுழைந்தனர் பிரகாஷின் அப்பா வெங்கடேஷ் மற்றும் தங்கை பவானி. ''இது ஷி ட்ஸ¨ (shih tzu) டாக். சில்லினு பேரு வெச்சது பவானிதான்'' என்று கை நீட்டினார் சைந்தவி.

ஆனந்தம் விளையாடும் வீடு!  - 2

தொடர்ந்த அப்பா, ''பவானி, வைஷ்ணவ் காலேஜ்ல ஃபைனல் இயர் படிக்கிறா. பார்த்தா ரொம்ப சாது போல இருக்குல்ல... ஆனா, சின்ன வயசுல, அறுந்த வாலு. ஒரு தரம் தீபாவளியப்ப, வீட்டுக்குள்ளயே நிறைய பேப்பர்ஸ் வெச்சு கொளுத்தி தீ மூட்டிட்டா. புகையைப் பார்த்து 'ஐயையோ’னு பயந்து ஓடினா... ஆப்ரிக்கா டான்ஸ் ஆடிட்டு இருக்கா. பக்கத்துல இருந்த தண்ணிய ஊத்தி உடனே அணைச்சுட்டதால எந்த விபத்தும் நடக்கல.பவானியை கலாய்க்கணும்னா 'ஆப்ரிக்கா டான்ஸ்’னு சொன்னா போதும், சரண்டர்தான்...''

''ஸ்டாப்... ஸ்டாப்''

ஆனந்தம் விளையாடும் வீடு!  - 2

- அப்பாவின் வாயை கைகளால் பொத்திய பவானி, ''இங்க பார்த்தீங்களா... குதிகால் போட்டு உட்கார்ந்துட்டு தூங்குற மாதிரி இருக்குற இந்த புத்தர் சிலை, ரொம்ப ஸ்பெஷல். வீட்டுக்கு வர்றவங்க எந்த டென்ஷன்ல இருந்தாலும், இவரைப் பார்த்ததும் பீஸ்ஃபுல் மைண்டுக்கு மாறிடுவாங்க'' என்று சொல்ல... சட்டென்று சின்ன அமைதி!

''என் ஃபேவரைட் வார்ட்ரோப். எங்க மேரேஜுக்காக பாத்துப் பாத்து அப்பா டிசைன் பண்ணி கொடுத்தது. இந்த சாண்டல்வுட் கலர் எனக்கு ரொம்ப பிடிக் கும். ஸ்டெப்ஸ் பேக்கிரவுண்ட் முழுக்க மார்பிள் செலக்ட் பண்ணி ஒட்டியிருக்கோம். படிகள்ல நடந்து போகும்போது கண்ணாடி மாதிரி ரிஃப்ளெக்ஷன் காட்டும்'' என்று சைந்தவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே எல்லோருக்கும் காபியை நீட்டினார் பிரகாஷ்.

''என்னங்க எனக்கு மட்டும் பாதி கப்தான் இருக்கு?'' என்று சைந்தவி கேட்க...

''ஒரு பாதி கதவு நீயடி.. மறுபாதி கதவு நானடி..'' என்று அவர் ஆரம்பிக்க... தன் குரலையும்  இணைத்தார் சைந்தவி!

ஆனந்தம் விளையாடும்...